திங்கள், 25 ஜூன், 2012
வெள்ளி, 15 ஜூன், 2012
நன்றி ஜூ.வி.

வியாழன், 7 ஜூன், 2012
ஐஸ் ஐஸ் பேபி
கோடை வெயில் சுட்டெரிக்கும் நாட்களில்
இளநீர்,நுங்கு,சர்பத் மற்றும்
குளிர்பானகூடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி
வழிந்து தங்களது உடல்வெப்பத்தினை குறைத்து வருவதினை கண்டுவருகின்றோம்.அதே போன்று மதுபான
பிரியர்கள் தங்களது உடலின் உஷ்ணத்தினை
குறைக்கும் பொருட்டு பீர் சாப்பிடுவதினால் கோடைகாலத்தில்
பீர் விற்பனை அதிகரிக்கும் தற்பொழுது
அதிகரித்துள்ளது.
பீரின் நன்மைகள்:
பீரின் நன்மைகள்:
நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் என்ற
கணக்கில் மிதமாக பீர் அருந்தி வந்தால்,அது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள்
வராமல் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில்
தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் குடி பழக்கம் உள்ள சுமார் 2 லட்சத்திற்கும்
அதிகமானோரிடம் இத்தாலியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று, வெவ்வேறு ஆய்வுகளை
மேற்கொண்டது.இந்த ஆய்வில் மிதமாக பீர் மட்டும் அருந்தி வருபவர்களுக்கு,மிதமான
அளவில் ஒயின் அருந்துபவர்களை காட்டிலும்,இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 31
விழுக்காடு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
சனி, 2 ஜூன், 2012
இடைதரகர்களின் இழி நிலை.
இந்திய
அரசியலில் இடைதரகர்களின் முகத்திரை கிழிக்கப்பட்ட சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுள்ளது.உதாரணமாக
சந்திராசாமியார்,நீராநாடியா போன்றோரை நாம் அறிந்து இருப்போம்.தற்பொழுது நமது ராணுவதளபதியின் கூற்றின்
படி ராணுவ தளவாடங்களை பெற்றதிலும்
பல இடைதரகர்களின் விளையாட்டு தெரியவருகின்றது. நமது இந்தியாவை பொறுத்தமட்டில்
எந்த அரசு அலுவலகங்களையும் இந்த
இடைதரகர்கள் விட்டுவைப்பதாக இல்லை. தமிழகத்தை பொறுத்தளவில்
எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும், எந்த அரசுபணிகளும்
இந்த
இடைதரகர்களின் தலையீட்டின்றி நடைபெறுவதில்லை. நகராட்சியா,பத்திரபதிவு அலுவலகமா,வாகனபதிவு அலுவலகமா,பாஸ்போர்ட் அலுவலகமா,காவல்நிலையமா எங்கும் இந்த இடைதரகர்கள்
நிரம்பி வழிகின்றனர்.முதலில் மக்கள் ஏன்
இந்த இடைதரகர்களை நாடி செல்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)