உலக அதிசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக அதிசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஜனவரி, 2015

மெர்சலான போதைக்கு முதலை பீர்

பீரின் ஆதி மூலக்கூறு பார்லி, திணை, சோளம் என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லோர் போலும் நாமும் குடித்து கவிழ்வது சுவாரசியம் இல்லை. ஆம் குடியிலேயே மெர்சலாகி மிதப்பதற்கு வேண்டுமே மோர். ஆம் கிவ் மி மோர். நம் குடியர்களின் பாதை போதை  மேலும் போதை. நம் குடிக்கென்று ஒரு வரலாறு வேண்டாம். சாராயத்தில் கஞ்சாவினை கலந்து அடித்தல். கள்ளுக்கிடையே போதை மாத்திரையை இணைப்பது. இப்படி பழமையையும் புதுமையையும் இணைக்கும் பாலம் அல்லவா நம் குடியர்கள்.
தமிழ்குடி உலகின் மூத்தகுடியாக இருந்தாலும் மொசாம்பிக் குடியர்கள் நம்மை முந்த பார்கின்றார்கள். ஆம் பாரம்பரிய பீர் தயாரித்து குடிப்பதில் வல்லவர்கள் மொசாம்பிக் நாட்டினர்.. உறை சாராயத்தினை மறைக்க நினைத்தாலும் அதன் வாசனையே காட்டி கொடுத்து விடும். மொசாம்பிக் குடியர்களோ இதில் கெட்டிக்காரர்கள். திணை கொண்டு தயாரிக்கும் பீரினை முதலைக்கறியில் ஊரவிட்டு குடிப்பர். என்னவோ தங்களுக்கும் நாவில் எச்சி ஊருக்கின்றது என நினைக்கின்றேன். இன்றும் கிராமத்து பெரிசுகளிடம் பேசினால் சுண்ட கஞ்சி கொடுத்த உறை போதை வாழ்க்கைக்கும் மறக்கமுடியாது என்பர்.

ஞாயிறு, 23 மார்ச், 2014

டாப் 10 விமான பேரழிவுகள்

கடந்தகாலங்களை நோக்கும் நமக்கு மனிதனின் ஆதி மரபியல் குணங்களிலேயே வானில்பறப்பது என்பது அமைத்துள்ளதாகவே தெரியவருகிறது. ரைட் சகோதரர்கள் விமானத்தினை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நமது சங்க இலக்கியநூல்களிலும்,ராமாயன மகாபாரத இதிகாசங்களிலும்விமான பயன்பாடு இருப்பதாக காண்கின்றோம். மேற்கு நாடுகளில் ஏன்ஜல்ஸ் என பறக்கும் தேவதைகள் கதைகளும் அரபுநாடுகளில் குதிரைக்கு இறக்கை முளைக்க செய்து விண்னுலக பயணம் செய்தாக வரும் நிகழ்வுகளும் மனிதன் பறவைதனை போன்று உல்லாசமாக எல்லையே இல்லாமல் பறக்க ஆசைப்பட்டதன் விளைவினால் விமானபயணத்தினை இன்று அனுபவித்து வருகின்றான். பயணங்களில் ஏற்படும் விபத்துகளில் மற்ற போக்குவரத்துகளோடு ஓப்பிடுகையில் விமான பயணத்தின் கி.மி கணக்குகளின் அடிப்படையில் பார்கையில் விபத்துகளானது மிகக்குறைவு. 
ஆனாலும் சிலநேரங்களில் ஏற்படும் விபத்துகளில் பல இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது.தற்பொழுது மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையினை போன்று பலவிமானங்களின் நிலை என்னவென்று கூட தெரியாமல் முடிந்தும் இருக்கின்றது.உலகம் சந்தித்த விமானவிபத்துக்களை டாஸ்மாக் செய்திகள் தளமானது “டாப் 10 விமானவிபத்துக்கள்” எனற தலைப்பில் வரிசைப்படுத்தியுள்ளோம் .

புதன், 5 மார்ச், 2014

உலகின் டாப் 10 இனிப்பு

சாக்லேட் ,கேக் , ஐஸ்கிரீம் இவைகளை கண்டவுடன் கொடுப்பவன் யாரென்றெல்லாம் குழந்தைகள் பலரும் கவனத்தில் கொள்வதில்லை. பலகுழந்தை திருடர்களின் திருட்டிற்கான மூலப்பொருட்களே இதுதான். பெரியவர்களும் குறிப்பாக பெண்கள் இந்த  ஐட்டங்களை கண்டுவிட்டால் நாக்கில் எச்சில் ஊற குழந்தையாகவே மாறிப்போவார்கள்.பல காதலர்கள் தங்களது காதலியை சந்திக்க சாக்லேட் இன்றி செல்வதில்லை. என்னவென்று விசாரிக்கையில் “சங்கடம் தீர்க்கும் சாக்லேட்” எனகாதலர்கள் கூறிவருகின்றனர். கணவனோ இரவு வீடு திரும்புகையில் ஸ்வீட் பாக்கெட் இன்றி வீடுதிரும்பினால் பிரச்சனை தான் ‘இனிப்பின்றி அமையாது இன்பம்” என தத்துவம் பேசுகின்றனர்.இவ்வாறு இனிப்பு இல்லறத்தில் முக்கிய இடத்தினைபெற்றுள்ளது. உலகின் பத்து மிக விலை உயர்ந்த இனிப்பு க்களை உங்களுக்காக டாஸ்மாக் செய்திகள் தளம் தேடி தந்துள்ளது. 

வியாழன், 21 நவம்பர், 2013

உலகின் டாப்10 பார்கள்.

அர்த்தசாஸ்திர கௌடில்யர்  மதுபான விற்பனைதனை அரசே எடுத்து நடத்தவேண்டும் என்ற உயரிய கருத்தினை கூறியதோடு மது அருந்தக்கூடிய மதுகூடங்கள்(பார்கள்) எவ்வாறு இருக்கவேண்டும் மற்றும் எவ்வாறு பராமரிக்கப்படவேண்டும் என்று அறவுரை கூறுகிறார்.நமது அரசோ அவர் கூறியதில் மதுகடைகளை டாஸ்மாக் மூலம் அரசே எடுத்து நடத்தி பாதி அறவுரையின் படி நடந்தாலும் மீதியான மதுக்கூட விசயத்தில் அவர்தம் கருத்தினை ஏற்காததோடு தனியார் வசம் பார் உரிமம்களை வழங்கி சுகாதாரக்கேடு நிறைந்த டாஸ்மாக் பார்களையே மதுப்பிரியர்களுக்கு வழங்கி வருகின்றது.இந்த கப் பான வறட்சி நிறைந்த பார்களை கண்டுவரும் நமது குடிப்பிரியர்களை இன்னும் வெறுப்பேற்றும் முகமாக உலகின் தலைசிறந்த பத்து பார்களை அறிமுகம் செய்கிறது நமது டாஸ்மாக் செய்திகள் தளம்..
                                                                                     
1 ) Cova d’en Xoroi, Minorca, (கோவண்டன் எக்ஸ்ரோய், மீனார்கோ)
மீனார்கோ தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு அழகான குன்றின் விளிம்பில் அமைந்துள்ள  இந்த பாரானது இயற்கையின் சுவர்க்கபூமியாக உள்ளது, இந்த குகையின் சுற்றுப்புறங்களையும் கண்கவர் காட்சிகள் நிறைந்த மதுகூடங்கள் இயற்கை அழகுடனே கூடிய கீற்று கொட்டகைகளின் அழகு காண கண்கொள்ளாது. இந்த கீற்று கொட்டகை பாரினில் அமர்ந்தபடியே அழகான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்க்கலாம். பல மதுபிரியர்கள் சூரிய உதயம் துவங்கி சூரிய அஸ்தமனம் வரை இங்கு மதுஅருந்தி விடுமுறையை கழிப்பர்.என்ன இந்த முறை உங்கள் விடுமுறை மீனார்கோ தானே…

வெள்ளி, 29 மார்ச், 2013

ரொட்டி முந்தியா? ‘புட்டி’ முந்தியா?



ரொட்டி முந்தியா? ‘புட்டி’ முந்தியா?



மட்டகரமான சரக்குகளை மண்டி விட்டு, நடுரோட்டில் மட்டையாகிக் கிடக்கிற குடிகாரப் பக்கிகள், நிமிர்ந்து உட்கார்ந்து காலரை நிமிர்த்தி விட்டுக்  கொள்ளும் படியான தகவல் இது.


மனிதனை மதி மயங்கச் செய்கிற லாகிரி வஸ்துவான மது, ஏதோ இன்று, நேற்றைய கண்டுபிடிப்பல்ல. ஆதி மூதாதையர் காலம் தொட்டு, மனித இனத் தின் மிக நீ...ண்ட வரலாற்றுப் பயணத்தில், நிழல் போல அதுவும் இணைந்தே நம்முடன் நடந்து வந்து கொண்டிருக்கிறது. ‘கோழி முந்தியா; முட்டை  முந்தியா’ என்பது குழப்பவாதிகள் காலம், காலமாக போட்டுக் கொண்டிருக்கிற விடுகதை. ஆனால், மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்டத் துக்குப் போய் விட்டார்கள். அவர்களது லேட்டஸ்ட் ஆய்வுப்படி, பூமியில் தானியங்களைக் கொண்டு மனித இனம் உணவுப்பொருட்களை தயாரிப்பதற்கு  முன்னதாகவே, ‘ஒரு குவார்ட்டர் தயார் பண்ணிக் கொடு மாமு’ என்று ‘ஆர்டர்’ கொடுக்கிற லெவலுக்கு உச்சக்கட்ட நாகரீகத்தில் உயர்ந்து நின்றி ருக்கிறார்கள் என (திட்டவட்டமாகவே) தெரியவந்திருக்கிறது.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பெண்கள் படிக்க உகந்ததல்ல.


                                    பெண்கள் படிக்க உகந்ததல்ல.                                             

  டாப் 10 நகைகள்.

மனிதனின் மணம் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை பொன் சேர்ப்பதிலும் பொருள் சேர்ப்பதிலும் ஈடுபாடுகொண்டவையாகவே அமைந்துள்ளது.இந்தியாவை பொருத்தமட்டில் தங்கத்தின் விலை பன்மடங்கு அதிகரித்து வருக்கின்றது.இருந்த போதும் தங்கத்தின் விற்பனை சரியவில்லை சரிய வாய்ப்பில்லை.இந்திய பெண்களை பொருத்தமட்டில் ஆபரணங்களை தங்களது வாழ்வின் ஒரு அங்கமாகவே கொண்டுள்ளனர்.நமது தளம் உலகின் அதிக விலை மதிப்புடைய நகைகளை வரிசைப்படுத்தியுள்ளது.ஓல்ட் இஸ் கோல்ட் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.ஆம் பழமையான நகைகளான வைரம்,வைடுரியம் பதிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு கணக்கில் அடங்காதவையாகும்.

10.Chopard superb and Emerald Necklace is one of the most eye-capturing Necklaces present on our list. It clearly displays the great work and Chopard's creative approach in making this Necklace. Any woman wearing this necklace will be spontaneously dubbed "lady in green" because of its massive green Columbian Emeralds which weight almost 191 carats! The necklace consists of 16 carats of diamonds which are attached in an excellent symmetry along with the green Columbian Emeralds. Although there are many rumors about the price of this necklace, the estimated price so far is around $3 million and that's why Chopard superb Diamond and Emerald Necklace holds the 10th place in our list of Top 10 Most Expensive Jewelries.


திங்கள், 9 ஜூலை, 2012

மனித பூக்கள்

கடவுளின் படைப்பில் மிக சிறந்த படைப்பினமாக மனிதன் விளங்கினாலும் மனிதனின் படைப்பில் எது சிறந்தது என்று இன்றும் விவாதங்கள் நடைபெறுகையில் விவசாயமே சிறந்தது என்று சிலரும் நெருப்பு கண்டுபிடிப்பு சிறந்தது என்று சிலர் கூறினாலும் நான் மனிதனின் கண்டுபிடிப்பில் சிறந்ததாக கருதுவது எப்படி ஒழுங்க நெறியோடு வாழவேண்டும் என்று தனது சந்ததியினருக்கு விட்டு சென்றுள்ள வாழ்கை நடைமுறையும் தத்துவங்களுமேயாகும்.மனிதன் உருவாக்கும் பல கண்டுபிடிப்புகளை கண்டு மகிழ்ந்திருக்கும் நாம் கடவுளின் படைப்பான இயற்கை மலர்களாகவும் விலங்கினமாகவும் மாறி நம்மை மகிழ்ச்சி ஏற்படுத்துவதை கீழே காண்போம்