அர்த்தசாஸ்திர
கௌடில்யர் மதுபான விற்பனைதனை அரசே எடுத்து
நடத்தவேண்டும் என்ற உயரிய கருத்தினை கூறியதோடு மது அருந்தக்கூடிய மதுகூடங்கள்(பார்கள்)
எவ்வாறு இருக்கவேண்டும் மற்றும் எவ்வாறு பராமரிக்கப்படவேண்டும் என்று அறவுரை கூறுகிறார்.நமது
அரசோ அவர் கூறியதில் மதுகடைகளை டாஸ்மாக் மூலம் அரசே எடுத்து நடத்தி பாதி அறவுரையின்
படி நடந்தாலும் மீதியான மதுக்கூட விசயத்தில் அவர்தம் கருத்தினை ஏற்காததோடு தனியார்
வசம் பார் உரிமம்களை வழங்கி சுகாதாரக்கேடு நிறைந்த டாஸ்மாக் பார்களையே மதுப்பிரியர்களுக்கு
வழங்கி வருகின்றது.இந்த கப் பான வறட்சி நிறைந்த பார்களை கண்டுவரும் நமது குடிப்பிரியர்களை
இன்னும் வெறுப்பேற்றும் முகமாக உலகின் தலைசிறந்த பத்து பார்களை அறிமுகம் செய்கிறது
நமது டாஸ்மாக் செய்திகள் தளம்..
1 ) Cova d’en Xoroi, Minorca, (கோவண்டன் எக்ஸ்ரோய், மீனார்கோ)
மீனார்கோ
தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு
அழகான குன்றின் விளிம்பில் அமைந்துள்ள இந்த
பாரானது இயற்கையின் சுவர்க்கபூமியாக உள்ளது, இந்த குகையின்
சுற்றுப்புறங்களையும் கண்கவர்
காட்சிகள் நிறைந்த மதுகூடங்கள் இயற்கை அழகுடனே கூடிய
கீற்று கொட்டகைகளின் அழகு காண கண்கொள்ளாது. இந்த
கீற்று கொட்டகை பாரினில் அமர்ந்தபடியே
அழகான சூரிய உதயம் மற்றும் சூரிய
அஸ்தமனம் பார்க்கலாம். பல மதுபிரியர்கள்
சூரிய உதயம் துவங்கி சூரிய அஸ்தமனம் வரை இங்கு மதுஅருந்தி
விடுமுறையை கழிப்பர்.என்ன இந்த முறை உங்கள் விடுமுறை மீனார்கோ தானே…
2 ) Route 36, Bolivia (ரூட்
36, பொலிவியா)
உலகின்
முதல் மற்றும் ஒரே ஒரு கோகோயின் வகை
போதைவஸ்துவினை வழங்கும் பார் என்ற சாதனைபட்டியலை தன்னகத்தே கொண்டது.. இந்த பாரானது பொலிவியாவின் முக்கியநகரங்களில் ஒன்றான லா
பாஸ் ஸில் அமைந்துள்ளது. மதுவுடன் இணைந்து கோகோயின்
விற்பனை . சட்டவிரோத போதை மருந்து விற்பனையில் முதலிடம் வகிப்பதால்
இது உலகம் முழுவதும் இருந்து
போதை பிரியர்களை கவர்கிறது
.
3 ) Alux Lounge, Mexico, (அலக்ஸ்
லோஜீ,மெக்ஸிக்கோ)
ஒரு இயற்கையாகவே அமைந்துள்ள ஒரு குகை உள்ளே உணவகம்
(ஹோட்டல்), மதுக்கூடம்(பார் )மற்றும் தங்கும்
அறைகள் (லாட்ஜ்) உள்ளடங்கியது.இங்கு சிறந்த சர்வதேச
மற்றும் மெக்சிகன் பானங்களும் மது பருகும் பொழுது உங்கள் மனநிலை
நம்பிக்கையூட்டும் வகையில் இயற்கை
பாறைகள் குடைந்து அமைக்கப்பட்ட வேலைப்பாடுகளும் நடனமங்கைகளும் உங்களை சுவர்க்கத்திற்கே அழைத்துச் செல்வர்.
4 ) Casa Pocho , Spain(கேசா போசோ, ஸ்பெயின்)
பேர்னார்ட் மாரிஸ்
மற்றும் லோடொகோ
என்பவர்கள் இணைந்து இந்த பாரினை வடிவமைத்து மக்களுக்கு குடிசேவைதனை வழங்குகின்றனர்.
இங்கு இலவச
பீர் மற்றும் தின்பண்டங்கள் முதலில் ருசிபார்க்க வழங்கப்படுவது முக்கிய அம்சமாகும்.இந்த
பாரில் கைதேர்ந்த மதுபரிமாறுபவர்களையும், சமையலர்களையும்
கொண்டது.
5 ) Sugarloaf Kiosk, Brazil (சுகர் லூப் கிசோக் , பிரேசில்)
பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள 1 , 296 அடி உயரத்தில் அமைந்துள்ள
மலை மீது இந்த பாரானது அமைந்துள்ளது.இந்த
மலை பாருக்கு இரண்டு வழிகள் சென்றடையலாம் . சுலபமான
வழி என்றால் 75 பயணிகள் கொள்ளளவு கொண்ட கேபிள் கார் சவாரி
அல்லது
மக்களோடு மக்களாக மலை ஏறலாம்
புரிந்தால் சரி.மலை உச்சியினை அடைந்தவுடன் நீங்கள் பனிக்கட்டி , சர்க்கரை
மற்றும் காட்சா(cachaça) கலவையில் காய்ச்சி வடிகட்டிய கரும்பு சுவை பிரேசிலிய
மது அருந்தினால்பின்னர் நீங்கள் மீண்டும் மீண்டும்
மலையேறுவர்.
6 ) Floyd’s Pelican Bar, Jamaica (ஃபிலாய்ட் பெலிகன்
பட்டை , ஜமைக்கா)
ஜமைக்கா
பயணத்தினை அர்த்தமுள்ளதாக மாற்ற கண்டிப்பாக
செல்லவேண்டிய இடமாகும் இந்த பார். இது
போரோட்டி (Parottee )கடலின் அருகாமையில் மரங்களால் ஒரு
பழமையான மர குடிசை வடிவில் பார்தனை அமைத்துள்ளனர் . புதிய கடல்
உணவுகளும் பாரம்பரிய ஜமைக்காவின் பானங்கள் சேர்த்து , தெளிவான
கடல் நீர் மற்றும் மது நீரில் நீச்சல்
செல்ல முடியும் . படகு சவாரிகளும் முக்கிய இடம்வகிக்கின்றது.
ருசியான புதிய கடல் உணவுகளும் பாரம்பரிய
ஜமைக்காவின் பானங்கள் சேர்த்து , தெளிவான
கடல் நீர் மற்றும் மது நீரில் நீச்சல்
செல்ல முடியும் . படகு சவாரிகளும் முக்கிய இடம்வகிக்கின்றது.
7 ) Zulunkhuni River Lodge, Malawi ( ஜீல்கோனீ ரிவர் லாட்ஜ்
, மலாவி)
ஆப்பிரிக்காவின்
பரந்த ஏரியான மலாவியின் (Malawai )வடக்கு
கரையில் மிகப்பெரிய தங்கும் விடுதி தளத்துடன் இந்த
பாரானது அமைந்துள்ளது . இது
நீர்வீழ்ச்சி அருகே பாறை குகையில்
கட்டமைக்கப்பட்டுள்ளது .அடுத்ததாக ஓலை குடிசைகளில் ஏரியின் இயற்கை அழகினை கண்டவாறு மது அருந்தும் வசதியும்
உள்ளது. மலையேற்ற பயிற்சியும் படகு சவாரியும் சிறப்பு அம்சமாகும், பயிற்சி முடித்து உடல் களைப்பு தீர ஓட்கா
நிரப்பப்பட்ட தர்பூசணிகள் பரிமாரப்படுகின்றன.
8 ) NASA, India (நாசா
, இந்தியா)
டாப் 10 பார்களில்
அமைந்த ஒரே இந்திய பார் இதுவாகும்.பெங்களூரில் அமைந்துள்ள இந்த பாரானது ஒரு விண்வெளி கப்பல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.நாசா உள்ளே , லைட்டிங் நியான்
நீலத்திலும்மற்றும் பார் ஊழியர்கள் விண்வெளி
வீரர்கள் உடையணிந்து இருக்கின்றனர்.தேவை அட்டவணைகளில்
கூட ராக்கெட் துடுப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இது கோடீஸ்வரர் விஜய் மல்லையா
மூலம் உருவாக்கப்பட்டது . லேசர் ஒளி நிகழ்ச்சிகள்
தினமும் இரவு நடைபெறும் .
9 ) The Baobab Tree Bar, South Africa (போபாப் மரப்
பட்டை , தென் ஆப்ரிக்கா)
உலகிலேயே மரத்திற்குள்
அமைந்த முதல் பாராகும்.லிம்போபு
தோட்டத்தில் ஒரு பெரிய 72 அடி
உயர போபாப்
மரம் உள்ளே பார் அமைந்துள்ளது. மரம் 6000 ஆண்டுகள்
பழமையானது . 155 அடி அகலம் உடற்பகுதியினை
கொண்டது . பீர் தனை அமைதியாக வும் இயற்கை காற்றோட்டத்துடனும் ,பாதாளத்தில் அமர்ந்து பருக ஏற்றது
.இதனுடனே அமைந்த பப்பானது
வண்ணவண்ணமின்சார
விளக்குகள் கொண்டும் ஆர்டர்கள் வழங்க உள்ளிருந்து
அழைக்கக்கூடிய ஒரு மணி உள்ளது
.
10 ) The clinic, Singapore (தி
கிளினிக் , சிங்கப்பூர்)
பெரும் குடிமகன்கள்
இறுதியாக செல்லக்கூடிய இடமான மருத்துவமனைதனை போன்று வடிவமைக்கப்பட்ட பாரானது சிங்கையில்
அமைந்துள்ளது.அறைகள் மாத்திரை
வடிவில் இருக்கும். மதுபரிமாறக்கூடியவர்கள் செவிலியர்கள் போன்ற
ஆடைதனையும் கையுறைகளை அணிந்தும் ஊசிகள் மற்றும்
சோதனை குழாய்கள் போன்ற மாதிரிகளை கொண்டு மதுபானங்களையும்
தின்பண்டங்களையும் பரிமாறுவர்.
என்ன நண்பர்களே
உலகின் டாப் 10பார்களை கண்டு மகிழ்ந்தீர்களா? இந்த அளவு அழகாகவும் சுகாதாரமாகவும் நமது
டாஸ்மாக் பார் இல்லை என்ற கவலையா? பரவாயில்லை விடுங்கள் இன்றைய குடியை இந்த கவலை தீர்க்க
குடிப்போம்.சீயட்ஸ்…….. குடிமகன்களே.
1 கருத்து:
நண்பர்க்கு வணக்கம்,
அன்மை செய்தியில் டாஸ்மாக்கில் இளநிலை உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி டாஸ்மாக் நிர்வாகம் ரகசியமாக எந்த ஒரு பத்திரிக்கையிலும் விளம்பரம் செய்யாமால் எடுக்க முயற்சி செய்ததும், அதற்கு டாஸ்மாக் ஊழியர் ஒருவர் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததும் அதற்கு இடைகால தடையானை பெற்றதும் அறிந்து இருப்பிர்கள் ஏன் டாஸ்மாக்கிலே சில்லறை விற்பனை கடைகளில் நன்கு படித்த உயர் கல்வி தகுதி இருக்கும் போது இளநிலை உதவியாளர் பணிக்கு வெளியில் இருந்து ஆட்களை தேர்வு செய்ய முயற்சி செய்வது ஏன்? மேலும் பல மேற்பார்வையாளர்கள் 40 வயதை கடந்து விட்ட நிலையில் இன்னும் பணி நிரந்தர படுத்தாமால் பத்தாண்டுகள் நிறைவு செய்யும் நிலையில் தமிழக அரசு அனைவரையும் பணி நிரந்தரம் செய்யுமா?
நன்றி
கருத்துரையிடுக