தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்
டாஸ்மாக்
| |
வகை
| |
தொடக்கம்
|
1983
|
தலைமையகம்
| |
முக்கியமான நபர்கள்
| மாண்புமிகு
அவர்கள்
(தமிழ்நாட்டின் சுங்க வரி மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர்))
|
மதுபான வர்த்தகம் (மொத்த மற்றும் சில்லறை விற்பனை)
| |
14,965 கோடி ரூபாய் (2010-11 நிதியாண்டில்)
| |
ஊழியர்கள்
|
36,000
|
டாஸ்மாக் (டாசுமாக், TASMAC) எனப்படும் தமிழ் நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.
வரலாறு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் - 1956 இன் படி இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001 வரை, 1971-74, 1983-87, 1990-91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.