புதுசரக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுசரக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மே, 2013

புதுசரக்கு 5

புதுசரக்கு 5

நமது டாஸ்மாக்கில் புது சரக்கு அறிமுகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது மெக்டோவல் நிறுவனம் லூயிஸ் வெராண்ட் எக் ஸ் ஓ என்ற பிரஞ்ச்வகை பிராந்தியினை அறிமுகம் செய்துள்ளது.

ஞாயிறு, 24 மார்ச், 2013

ஆட்கொல்லி மேல்நாட்டு சரக்குகள்!


- -  - - - - - - - - - -

குடிமகன்களின் மேலான கவனத்துக்கு...!

- -  - - - - - - - - - -


பொழுதுபோக்குக்கு குடிப்பவர்கள், பொழுதெல்லாம் குடிப்பவர்கள்... வாராந்திரப் பார்ட்டிகளில் ‘ஜஸ்ட்’ கம்பெனி கொடுப்பவர்கள்... இதில் நீங்கள் எந்த  வகையறாவாக இருந்தாலும் சரி; ஐந்து நிமிடம் ஒதுக்கி இதை படிப்பது உங்கள் உடல் / மனநலத்துக்கு மிகவும் உகந்த விஷயம். காசையும் கொட்டி,  கபால மோட்சமும் அடைந்து விடக்கூடாது என்கிற நல்லெண்ணமே இந்தக்கட்டுரை உருவாக்கத்துக்கான நோக்கம். கண்டதையும் குடித்து, கண்ணீர் அஞ் சலி போஸ்டர்களாக மாறிய கோடானுகோடி குடிமகன்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!


மது என்பது டாஸ்மாக் நிர்வாகத்தின் தனிப்பட்ட கண்டுபிடிப்பு அல்ல. பூமியின் மிகத் தொன்மையான வஸ்துகளில் அதுவும் ஒன்று. முறையாக அதை  பயன்படுத்தினால், மூளையை சுறுசுறுப்பாக்கலாம். உடல் சோர்வுக்கு விடைகொடுக்கலாம். சுருங்கச் சொல்லின், மது என்பது குடிக்க மட்டுமே; குளிக்க  அல்ல. மட்டமான சரக்கில் தீர்த்தமாடி விட்டு, மறுநாள் காலையில் நெஞ்சு எரிகிறதே; வயிற்றைப் பிசைகிறதே என்று புலம்புவது நல்ல குடிமகனுக்கு  அழகல்ல. போதை என்கிற பெயரில் ஆளைப் பதம் பார்க்கிற ஆபத்தான சரக்குகள் உலகமெங்கும் தடைகளையும் கடந்து, ரகசியமாக புழங்கிக்  கொண்டுதான் இருக்கின்றன. நம்மூரில் பல்லி, பாச்சான் எல்லாம் போட்டு தயாராகிற கள்ளச்சாராயம் போல, உலகக் குடிமகன்களின் உள்ளம் கவர்ந்த  ‘டேஞ்சர் சரக்கு’களின் பட்டியல் இங்கே உங்கள் பார்வைக்கு:

வியாழன், 19 ஏப்ரல், 2012

புதுசரக்கு 3


விஐபியாகும் டிஐ'ஸ் வி.எஸ்.ஒ.பி பிராந்தி:

தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்பொழுது உயர்ரக மதுவிற்பனை பெருமளவில் உயர்ந்துள்ளது.அதை மனதில் கொண்டு கம்பெனிகள்தங்களுக்கிடையே  போட்டி போட்டுக்கொண்டு புதிய மதுவகையினை அறிமுகப்படுத்துகின்றன.அந்த வகையில் உயர்ரக மதுவிற்பனையில் முன்னனிநிறுவனங்களில் ஒன்றான திலக்நகர் இண்டஸ்ரீஸ்,மும்பை நிறுவனம் தமிழகத்தின் மதுப்பிரியர்களுக்கு ஒரு

சிறப்பான ஏற்பாட்டினை செய்துள்ளது,அது என்னவெனில்,தற்பொழுது தமிழகத்தில் வி.எஸ்.ஒ.பி. பிராண்ட் பிராந்தி  வகையே  இல்லாத
நிலையை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இச்சரக்கானது நமது டாஸ்மாக் கடைகளில் தற்பொழுது முண்ணணி விற்பனை  பிராண்ட்டாக உள்ளது. ஒரிஜீனல் வி.எஸ்.ஒ.பி. பிராண்ட்பிராந்தியை பருக தயாராகும் படி பிராந்தி பிரியர்களை " டாஸ்மாக் செய்திகள் " தளம் மகிழ்வுடன் அறிவுறுத்துக்கின்றது.

மேன்ஸன் ஹவுஸ் பிராந்தி:

வெளிமாநிலங்களுக்கு செல்லும் மதுபிரியர்கள் மேன்ஸன் ஹவுஸ் பிராந்தியை பருகி இது போன்ற சரக்கு என்று தமிழகம் வரும் என ஏக்கம் கொள்ளும் வகையில் இருந்தது.இந்த ஏக்கத்தினை போக்கும் வகையில் திலக்நகர் இண்டஸ்ரீஸ்,மும்பை நிறுவனம் தமிழக மதுபிரியர்களின் நீண்ட ஆவலினை  நிறைவேற்ற  தமிழகம் கொண்டு வந்தது.அறிமுகம் செய்யப்பட்டது முதல் தமிழக மதுபிரியர்களின் நம்பர் 1 பிராண்ட்டாக உள்ளது. டாஸ்மாக் கடைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பிராண்ட்க்கு தற்பொழுது சிறப்பு செய்வது போல் அம்ரோசியா அவர்ட்ஸ் நிறுவனம் 2012 க்கான டாப் 10 பிராண்ட் பிராண்டி வகையில் சேர்ந்து பெருமை சேர்ந்துள்ளது. மது நாட்டிற்கு விட்டிற்கு கேடு.




வ.ஷாஜஹான்,
திருமங்கலம்.9942522470

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

புதுசரக்கு - 2

தமிழ்குடி என்றும் மேற்குடி

குளோவிஸ் பிராந்தி:
தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்பொழுது உயர்ரக மதுவிற்பனை பெருமளவில் உயர்ந்துள்ளது.அதை மனதில் கொண்டு கம்பெனிகள்
தங்களுக்கிடையே போட்டி போட்டுக்கொண்டு புதிய வெளிநாட்டு மதுவகையினை அறிமுகப்படுத்துகின்றன.அந்த வகையில் உயர்ரக
மதுவிற்பனையில் முன்னனிநிறுவனங்களில் ஒன்றான ஜீயோஸ்கோப் நிறுவனம் தமிழகத்தின் மதுப்பிரியர்களுக்கு ஒரு சிறப்பான
ஏற்பாட்டினை செய்துள்ளது,

சனி, 11 பிப்ரவரி, 2012

புதுசரக்கு - 1


வாசமில்லா மதுவிது

உலக அளவில் உயர்ரக மதுவிற்பனையில் முன்னனியில் உள்ள பக்கார்டீ நிறுவனம் தமிழகத்தின் மதுபிரியர்களின் நீண்ட நாள் ஆவல்களை
நிறைவேற்றும் வகையில் இரண்டு புதிய வகை வெளிநாட்டு மதுவினை அறிமுகப்படுத்துக்கின்றது.