கடந்தகாலங்களை நோக்கும் நமக்கு மனிதனின் ஆதி மரபியல் குணங்களிலேயே
வானில்பறப்பது என்பது அமைத்துள்ளதாகவே தெரியவருகிறது. ரைட் சகோதரர்கள் விமானத்தினை
கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நமது சங்க இலக்கியநூல்களிலும்,ராமாயன மகாபாரத இதிகாசங்களிலும்விமான
பயன்பாடு இருப்பதாக காண்கின்றோம். மேற்கு நாடுகளில் ஏன்ஜல்ஸ் என பறக்கும் தேவதைகள்
கதைகளும் அரபுநாடுகளில் குதிரைக்கு இறக்கை முளைக்க செய்து விண்னுலக பயணம் செய்தாக
வரும் நிகழ்வுகளும் மனிதன் பறவைதனை போன்று உல்லாசமாக எல்லையே இல்லாமல் பறக்க ஆசைப்பட்டதன்
விளைவினால் விமானபயணத்தினை இன்று அனுபவித்து வருகின்றான். பயணங்களில் ஏற்படும்
விபத்துகளில் மற்ற போக்குவரத்துகளோடு ஓப்பிடுகையில் விமான பயணத்தின் கி.மி
கணக்குகளின் அடிப்படையில் பார்கையில் விபத்துகளானது மிகக்குறைவு.
ஆனாலும்
சிலநேரங்களில் ஏற்படும் விபத்துகளில் பல இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது.தற்பொழுது
மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையினை போன்று பலவிமானங்களின் நிலை என்னவென்று கூட
தெரியாமல் முடிந்தும் இருக்கின்றது.உலகம் சந்தித்த விமானவிபத்துக்களை டாஸ்மாக்
செய்திகள் தளமானது “டாப் 10 விமானவிபத்துக்கள்” எனற தலைப்பில் வரிசைப்படுத்தியுள்ளோம் .
1 . 1988 - பான் அமெரிக்கன் விமானம் 103 :
1988 ல் பான் அமெரிக்கன் விமானம் 103 பயன்படுத்தி ஸ்காட்லாந்து மீது தாக்குதல் ஏற்படுத்தும் நோக்கத்துடன்
விமானத்தில் ஒரு குண்டினை வெடிக்க செய்து விபத்தினை ஏற்படுத்தினர்.இந்த
விமானத்தில் 21 நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்தனர்.
விபத்திற்கு ஒரு லிபியர் காரணமென தெரிந்து இறுதியில் தண்டனை விதிக்கப்பட்டது.விமானத்தில் பயணித்த 259 பேரும் தரையில்
11பேரும் ஆக 270 பேர் மரணத்தனர்.
2 . 1983 – கொரியன்
ஏர்லைன்ஸ் விமானம் 007 :
இந்த கொரிய விமானமானது சியோல் நோக்கி செல்லவேண்டிய நிலையில் அதன் வழியில் இருந்து விலகி நேராக சோவியத் யூனியன் நோக்கி பயனித்தது. இராணுவ உளவு விமானம் என ரஷ்யா நினைத்து மோனிரொன் தீவு அருகே சுட்டு விழ்த்தியது.இதில்
பயணித்த 261 பயணிகள் மரணித்தனர்.
3 . 1979 - அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் 191 :
அமெரிக்க DC
-10 , 1979 விமானமானது புறப்பட்டு
விண்ணில் ஏறும் பொழுதே என்ஜினாது
நின்றபடியால் இடதுபுற இறக்கைபகுதியோடு உடைந்து விமான நிலையத்தின் ஒருபகுதியில் மோதி
பல்வேறுபகுதிகளாக உடைந்து விபத்தில் சிக்கியது விமானிகள் உட்பட 13 விமான பணியாளர்களும்
258 அனைத்து பயணிகளும் மற்றும் தரையில் இரண்டு பேரும் சேர்த்து மரணித்தனர்.
4 . 1988 - ஈரான் ஏர் விமானம் 655
:
சர்வதேச அளவில் மிகவும் சர்ச்சைக்குரிய விமான விபத்தாகும்.இராணுவ நிகழ்வுகள் ஒன்றில் , ஈரான் ஏர் விமானம் 655
பாரசீக வளைகுடா பறந்தது,
ஒரு
அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் துரதிருஷ்டவசமாக அவர்களை நோக்கி நேரடியாக பறந்து இராணுவ விமானமென நினைத்து சுட்டு
விழ்த்தப்பட்டது. இந்த விபத்தில்66 குழந்தைகள் மற்றும் 16 விமான சிப்பந்திகள்
உட்பட அனைத்து பயணிகளும் மொத்தம் 290 பேர் மரணித்தனர். 1996 ஆம் ஆண்டில்
சர்வதேச நீதிமன்றத்தில் சம்பவம் தொடர்பான
தீர்ப்பாக உடன்பாட்டினை சொல்லியது தீர்வு பகுதியாக, அமெரிக்கா ஈரானிய பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகை , பயணிகள் ஒன்றுக்கு அமெரிக்க $ 61.8 மில்லியன்
செலுத்த ஒப்புக்கொண்டது. எனினும், இதுவரை அமெரிக்கா குற்றத்தை ஒப்புகொண்டு ஈரான்னிடம்
மன்னிப்பு கேட்கவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.
5 . 1980 – சவுதி
அரேபியா
விமானம் 163 :
சில நிமிட விமானபயணத்தில் சரக்கு வைக்கும் பகுதியிலிருந்து ஏற்பட்ட
தீயினால் , விமானம் மீண்டும் தரைஇறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமானநிலையத்தில் விமானம் தரை இறங்கிய பின்பு விமானத்தில்
பயணித்த 301
பேர் புகை மூட்டத்தால் மரணனித்திருந்தனர்.
6 . 2003 – ஈரான்
இல்யூஷின்II 76 :
மோசமான வானிலை மற்றும் பனியுடன் கூடிய அதிக காற்று அன்றைய விமான விபத்திற்கான காரணமாக அமைந்தது.
7 . 1974 - துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் 981 :
DC -10 , துருக்கிய விமானம் பாரிசில் இருந்து லண்டன் நோக்கி பயணித்தது.பயணித்த சில
நிமிடங்களில் பைலட் டிடமிருந்து விமானகட்டுப்பாட்டை இழந்துள்ளதாக செய்தி வந்த நேரத்தில்
விமானம் ஒரு காட்டில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் அனைத்து பாகங்கள் அனைத்தும் சிதைந்திருந்தது .
8 . 1996 - கஜகஸ்தான் மற்றும் சவுதி அரேபிய விமானங்கள்:
டெல்லி விமான நிலையத்தில் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் இறக்க முயற்சிகையில் சவுதி அரேபிய விமானம் கிளம்பி மேலே எழுந்தது. இரண்டு விமானங்களும் நடுவானில் மோதி விபத்து ஏற்பட்டது. இதற்கு
ரேடியோ
டிரான்ஸ்மீட்டருடன் அறிவிப்பாளரின் கவனக்குறைவு காரணமென கூறப்பட்டது.
9 . 1985 - ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 123 :
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 123 தனது பயணத்தினை முடித்து
இறங்க முயற்சிகையில் ஹைட்ராலிக் பகுதி வேலைசெய்ய
மறுத்து டயர்கள்தனது பணிசெய்ய முடியாததால் மீண்டும் மேலெலுந்து பறந்து, ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு மலைகளில் விழுந்து நொறுங்கியதில் பயணிகள் அனைவரும் மரணித்தனர்
10 . 1977 - பான் மற்றும் கே எல் எம் :
கெய்ரோவில்உள்ள லாஸ் ரோடியோவிமான நிலையத்தில் 1977ல் ஏற்பட்ட விபத்தானது
விமான விபத்துகளின் வரலாற்றில் இரண்டு போயிங் 747 விமானங்கள் , பான் மற்றும் கே எல் எம் முறையே , ஓடுபாதை யிலேயே மோதி பெரும் சேதம் ஏற்படுத்தியது.இதற்கு மோசமான
வானிலையும் குழப்பமான ரேடியோஅறிவுறுத்தல் காரணமென பின்பு கண்டறியப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக