வியாழன், 20 மார்ச், 2014

மதுபான நிறுவனங்கள்



டாஸ்மாக்நிர்வாகத்திற்கும் மதுபானநிறுவனங்களுக்கிடையே தற்பொழுது மறைமுக பனிப்போர் நடைப்பெற்று வருகின்றது.மதுபானங்களுக்கு விலையினை உயர்த்தி மதுபான நிறுவனங்கள் தொடர்ந்து கேட்டுவருவதுடன்,கொள்முதல் செய்த வாரங்களிலேயே பெற்றுவந்த காசோலைகளை மாதக்கணக்கில் இழுத்தடித்து கொடுப்பதற்கு எதிராகவும் ,மற்றும் தங்களது கம்பெனியின் சரக்குகள் சிராக டாஸ்மாக் நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்படவேண்டும் என்பதும் மதுபான நிறுவனங்களின் கோரிக்கை.
டாஸ்மாக்கில் எழுதப்படாத விதியாக எக்கட்சியினர் ஆட்சிக்கு வருகின்றனறோ அக்கட்சிக்கு சாதகமான மதுபான நிறுவனங்களிலிருந்து அதிக சரக்குகள் கொள்முதல் செய்யப்படுவது வாடிக்கை. சென்ற ஆட்சிகாலத்தில் மிடாஸ் நிறுவனம் தங்களது சரக்குகளை டாஸ்மாக் கொள்முதல் செய்யவேண்டி வழக்கு நடத்தியது.


தற்பொழுது கோல்டன் வாட்ஸ் என்ற மதுபான நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன் விபரம்
கோல்டன் வாட்ஸ் நிறுவனத்திடமிருந்து டாஸ் மாக் நிறுவனம் மதுபானங்களை கொள்முதல் செய்வதில்லை  இது பாரபட்சமான நடவடிக்கை என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனபாலன், மதுபானக் கடைக்கு வரும் நுகர்வோர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மதுபான வகையை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஆகவே, அனைத்து மதுபான நிறுவனங்களின் மதுபான வகைகளும் டாஸ்மாக் கடைகளில் கிடைக்க வேண்டும். இந்த சூழலில் எல்லா மதுபான நிறுவனங்களிடமிருந்தும் பாரபட்சமில்லாத முறையில் மது பானங்களை கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து மதுபான நிறுவனங்களிடமிருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இது தொடர்பாக எப்பொழுதும் போல் டாஸ்மாக் நிர்வாகத்தால் மேல்முறையிடு செய்யப்படும் என்று நம்மதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நமது டாஸ்மாக் செய்திகள் தளம் கடந்த சில மாதங்களுக்கு முந்தைய பதிவான
“மதுபான ஆலை கொள்ளை” http://tasmacnews.blogspot.com/2013/06/blog-post.html

 தொடர்புடைய கட்டுரையினை வாசிக்கும் பொழுது தமிழகத்தில் மதுபான ஆலைப்பற்றி விபரமாக அறியலாம்.    

கருத்துகள் இல்லை: