பீரின் ஆதி மூலக்கூறு
பார்லி, திணை, சோளம் என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லோர் போலும் நாமும் குடித்து
கவிழ்வது சுவாரசியம் இல்லை. ஆம் குடியிலேயே மெர்சலாகி மிதப்பதற்கு வேண்டுமே மோர். ஆம்
கிவ் மி மோர். நம் குடியர்களின் பாதை போதை
மேலும் போதை. நம் குடிக்கென்று ஒரு வரலாறு வேண்டாம். சாராயத்தில் கஞ்சாவினை
கலந்து அடித்தல். கள்ளுக்கிடையே போதை மாத்திரையை இணைப்பது. இப்படி பழமையையும் புதுமையையும்
இணைக்கும் பாலம் அல்லவா நம் குடியர்கள்.
தமிழ்குடி உலகின்
மூத்தகுடியாக இருந்தாலும் மொசாம்பிக் குடியர்கள் நம்மை முந்த பார்கின்றார்கள். ஆம்
பாரம்பரிய பீர் தயாரித்து குடிப்பதில் வல்லவர்கள் மொசாம்பிக் நாட்டினர்.. உறை சாராயத்தினை
மறைக்க நினைத்தாலும் அதன் வாசனையே காட்டி கொடுத்து விடும். மொசாம்பிக் குடியர்களோ இதில்
கெட்டிக்காரர்கள். திணை கொண்டு தயாரிக்கும் பீரினை முதலைக்கறியில் ஊரவிட்டு குடிப்பர்.
என்னவோ தங்களுக்கும் நாவில் எச்சி ஊருக்கின்றது என நினைக்கின்றேன். இன்றும் கிராமத்து
பெரிசுகளிடம் பேசினால் சுண்ட கஞ்சி கொடுத்த உறை போதை வாழ்க்கைக்கும் மறக்கமுடியாது
என்பர்.
சரி மொசாம்பிக்
செல்வோம். கடந்த வாரம் மொசாபிக் கிராமம் ஒன்றில் ஒருவரின் குடும்பவிழாவிற்க்காக பீர்
தயார் செய்யப்பட்டது. பாரம்பரிய பீரான முதலை
பீர் போம்பீ ( Pombe ) என அழைக்கப்படும்.
கிராமத்து பெண்மணி ஒருவரின் கண்காணிப்பில் இப்பீர் தயார் செய்யப்பட்டது. விழா அன்று
கிராமமே திரண்டது. சாப்பாட்டு விருந்துகள் ஒருபுறம் தடபுடலாக பரிமாறப்பட்டது.
குடிமகன்கள் உணவிற்கு முன்பு பீர் உறை தேவைக்கு பெண்மணியினை
நாடினர். உடன் சுமார் 250 குடிமகன்கள் முதலை பீரினை வயிற்றில் இறக்கினர். வேகமாக முதல்
ரவுண்ட் முடித்த குடியர்கள் இரண்டாவது ரவுண்டுக்கு தயார் ஆகும் பொழுது தான் இது கொஞ்சம்
ஓவர் போதை என்றனர். சொல்லி முடிக்கும் பொழுது பலரும் சொர்க்கத்தில் இருந்தனர்.
ஆம் சுமார்
69 பேர் உடன் மரணித்தனர். 196 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதி பேருக்கு
கண்பார்வை கானாமல் போய்விட்டது. மொசாம்பிக் அரசு தேசிய துக்க தினமாக மூன்று நாட்கள் கடைப்பிடிக்கப்படும் என்றது.
என்ன நண்பர்களே
குடி குடியை கெடுக்கும் இங்கே கிராமமே கெட்டு விட்டது. உற்ற துணையின்றி பல பெண்களும்,
தந்தையின்றி பல குழந்தைகளும் கிராமம் முழுவதும் பரவலாய் துக்கத்தில். இவர்களுக்கு நாம்
என்ன செய்ய முடியும். ஆம் குடி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம். குடி அரக்கனை
தமிழ் குடிமக்களின் உள்ளத்திலிருந்து அகற்றுவோம்.
உங்கள் வ.ஷாஜஹான்,
திருமங்கலம்.
மேலான தங்களின் கருத்துகளுக்கு
இமெயில் முகவரி: tasmacnews@ gmail.com
99425
22470
தொடர்புடைய
கட்டுரை ஆட்கொல்லி மேல்நாட்டு சரக்குகள்! லிங்க் கிழே
http://tasmacnews.blogspot.in/2013/03/blog-post_23.html#more
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக