வேலூர்
மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு செல்லும்
சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக்
மதுபானக்கடை உள்ளது. இந்த மதுக்கடையின்
சுவரில் துளைபோட்டு திருடப்பட்டு இருப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்த
தகவலை தொடர்ந்து மதுக்கடை மேற்பார்வையாளர் ராஜ்குமார் நேற்று காலை 6 மணிக்கு
கடைக்கு வந்து பார்த்தார்.
அப்போது
கடையின் சுவரில் துளைபோட்டு ரூ.20
ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு
தகவல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து விசாரணை
மேற்கொண்டனர். அந்த டாஸ்மாக் மதுக்கடையில்
இருந்து 100 அடி தூரத்தில் மது
பாட்டில்கள் அடங்கிய சாக்குமூட்டையை தலைக்கு
வைத்தபடி ஆண்-பெண் இருவர்
தூங்கிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக
போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து
சென்றனர்.
அங்கு தலைக்கு மதுபாட்டில் மூட்டையை
வைத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் காவேரிப்பாக்கத்தில் உள்ள அய்யன்பேட்டைசேரி கிராமத்தை
சேர்ந்த விஜயன்(வயது 35), அவரது
மனைவி வள்ளியம்மாள்(30) என்பது தெரியவந்தது. அவர்களை
எழுப்பி விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-