தமிழகத்தின்
குடும்பசூழ்நிலைகளை கணக்கில் கொண்டு “மாமியா உடைச்சா மண்சட்டி மருமக உடைச்சா பொன்
சட்டி” எனக்கூறுவர். தற்பொழுது மண்சட்டியே இல்லாதநிலையிலும் இன்றும் இந்த சொலவடை உயிர்ப்புடன்
உலாவி வருகின்றது. வீட்டில் உடையும் பொருளின் மதிப்பு உடைப்பவர்களை கொண்டே
நிர்ணயிக்கப்படுகின்றது. மாமியார்,மருமகள் தாண்டி வேலைக்காரி தப்பிதவறி எதாவது
உடைத்துவிட்டால் அவ்வளவுதான் அந்த பொருளின் மதிப்பே தனி.
சரி நம்ம டாஸ்மாக்
பக்கம் வருவோம் நண்பர்களே.
மதுபான கம்பெனிகளில்
உருவாகும் மதுபான வகைகள் மாவட்டந்தோறும் அமைந்துள்ள
டாஸ்மாக் குடோன்களுக்கு கம்பெனிகளால் கொண்டுவந்து சேர்க்கப்படும்.இந்த மதுபானங்கள்
கடைகளுக்கு அதிகாரிகளால் அனுப்பி
வைக்கப்படும். இந்த கம்பெனியிடமிருந்து பெற்று கடைக்கு அனுப்பும் வரை பாட்டில்
உடைந்து சேதம் ஏற்படும் என்பதால் அதிகாரிகள் இந்த இழப்பிடுகளை ஈடுசெய்ய இன்சூரன்ஸ்
செய்து வருகின்றன.