வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஒப்பந்த தொழிலாளராகவே ஓய்வு பெறுவோமா?


டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேலை கொடுத்த அம்மா பூலோக ய்வு பெற்று புத்துலகில் நுழைந்து விட்டார். டாஸ்மாக் ஊழியர்களான நம்மை 2003ல்   வேலை வாய்ப்பு அலுவலக மூப்பின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தேர்ந்தெடுத்தது முதல் இன்று வரை தற்காலிக ஒப்பந்த பணியாளராகவே பணியாற்றி வருகிறோம். நம்மில் பார் உதவியாளராக பணி பெற்று தற்பொழுது கடை விற்பனை உதவியாளர்களாக பணியாற்றும் பலரும் அடுத்த சில வருடங்களில் ஓய்வு பெறும் வயதை அடைந்து விட்டனர். மேலும் நம்மை கடந்த 13 வருடங்களாக தொழிலாளர்களுக்கான எவ்வித அரசு சலுகைகள் வழங்காமல் ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்து பணி வாங்கி வருகின்றனர். சென்ற தேர்தலில் திமுக மதுவிலக்கு கொண்டு வந்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க இருப்பதாக கூறியது.  அம்மா டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்கள். நாம் அவர்களின் வாக்கை நம்பி தொடர்ந்து பணியில் இருந்தோம். அம்மா மரணம் தொடர்ந்து அடைத்து வரும் கடைகள் என்கின்ற சிக்கலான சூழ்நிலையில் தற்பொழுது நாம் உள்ளோம்.