தமிழகம் முழுவதும்
24மணி நேரமும் எது கிடைக்கின்றதோ இல்லையோ மது கிடைக்கும். எப்படி? டாஸ்மாக் கடை திறந்து
இருப்பது தான் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தானே என்கிறீர்களா? அப்பொழுது நீங்கள்
தமிழகநிலை தெரிய தமிழ்மகனாக இருக்கின்றீர்கள் என அர்த்தம். டாஸ்மாக் கடைதான் இரவு
10 மணிக்கு அடைக்கப்படுகின்றதே ஒழிய ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் பார்கள் 24மணிநேரமும்
இயங்குகின்றன. இந்த இரவு நேர விற்பனைக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை அடைக்கும் முன்பு
இவர்கள் விரும்பும் சரக்குகளை கொடுக்கவேண்டும். இதில் சரக்கு வந்தவுடன் குடிமகன்கள்
விரும்பும் சரக்கினை இரவு விற்பனைக்கு எடுத்து கொடுக்க வற்புறுத்துவர். இந்த சரக்குகளுக்கு
டாஸ்மாக் கடைகளுக்கு உரிய தொகையை கொடுப்பார்களா என்றால் அதுவுமில்லை. விற்று முடித்து
அவரிடம் கேட்டால் இவர் இவரிடம் கேட்டால் அவர் என அழைக்கழிப்பு வேறு.
வெள்ளி, 14 நவம்பர், 2014
சனி, 8 நவம்பர், 2014
முதல்வருக்கு வேண்டுகோள்
டாஸ்மாக் ஊழியர்கள்
விரக்தியின் உச்சக்கட்டத்தினை அடைந்துவருவது நிதர்சனம். தற்போது நவம்பர் மாதத்தில்
இடைநீக்கம் செய்யப்பட்ட பல டாஸ்மாக் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதற்கு
காரணமான நோட்டீஸ் கீழே
கோவையிலிருந்து
எதிர்வினை என்ற பெயரில் தனிச்சுற்று மாத இதழ் டாஸ்மாக் ஊழியர்களின் குரலாக வெளிவருகின்றது.
எதிர்வினைக்கு பாராட்டுக்கள்.
திங்கள், 13 அக்டோபர், 2014
டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?
டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?
சமீபத்திய தினசரி செய்தி பத்திரிக்கையில் வந்த விபரம்:
டாஸ்மாக்கில் நடந்த கையாடல் விவகாரம் குறித்து உயர்அதிகாரிகள் குழு
மாநிலம் முழுவதும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகள்
குறித்து விசாரிக்க 18 பேர் கொண்ட குழு (பறக்கும் படை) அமைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்
நிறுவனத்தில், நிர்வாக ரீதியாக 38 மாவட்ட மேலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில்
17 பேர் துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்கள் எம்.பி.ஏ. பட்டதாரிகள்.
சோ.அய்யர் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக
இருந்தபோது, முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர்
தான் தற்போது டாஸ்மாக் இணை மேலாண் இயக்குநராக இருக்கும் மோகன்.
டாஸ்மாக் இணை மேலாண் இயக்குநர் என்ற பதவி மோகன் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இதுவரை 10க்கும் மேற்பட்ட துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பு டாஸ்மாக் மேலாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார் திரு மோகன் அவர்கள். நெல்லை (சுப்பிரமணியம்) மற்றும் திருச்சி(மணிவேல்) மாவட்ட மேலாளர்களை(துணைமாவட்ட ஆட்சியர்கள்) சஸ்பெண்ட் செய்துள் ளார். இதனால் துணை மாவட்டஆட்சியர்களான டாஸ்மாக் மேலாளர்கள், தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து மோகன் மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஊழியர்களும் மாத மாமுல் கேட்பதாலேயே கூடுதல்விலை, இருப்புகுறைபாடு போன்ற தவறுகளை செய்வதாக கூறுகின்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)