வியாழன், 9 பிப்ரவரி, 2012

முதிர்கண்ணர்கள்.



















முதிர்கண்ணர்கள்.
குடிக்க வரும்பொழுது மனிதனாகவும்
குடித்த பின் மிருகமாகும்
குடிமகனின் ஏச்சுக்கும் பேச்சுக்கும்
சில நேரம் கொடுக்கும் தர்ம அடிக்கும்
கலங்கிட வில்லை நான்.

சுற்றத்தாரின் ஏளனபேச்சுக்கும்
சக நண்பர்களின் நையாண்டிக்கும்
வங்கி ஊழியர்களின் ஏளன பார்வைக்கும்
காவலர்களின் காலித்தனத்திற்க்கும்
கலங்கிட வில்லை நான்.

வரதட்சணையும் வேண்டாம் வாஞ்சையும்,
வாட்டசாட்டமும் வேண்டாம்.மங்கை ஒன்று
கிடைத்தால் போதும்என்றேன் உன் பணி சொன்னால்
திருமணமே நடக்காது என புரோக்கர் கூறிட
கலங்கிட வில்லை நான்.

தம்பிக்கு முதலில் திருமணம் எனத்தாயே என்னை
தள்ளி வைக்கும் பொழுதுகலங்கிவிட்டேன் நான்
எனக்காக மட்டும்அல்ல என் போன்ற
முதீர்கண்ணர்களான சக ஊழியர்களுக்காகவும்தான்
நாங்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.

ஆளும் அரசாங்கத்தை வள்ளலாக மாற்ற
செய்யும் வேலையில் இருக்கும் நாங்கள் நற்துணைக்கும்
வாரிசுக்கும் வாடி விடியலுக்காக காத்திருக்கும்
முதிர்கண்ணர்கள்.****
.ஷாஜஹான்,திருமங்கலம். மதுரை.9942522470













கருத்துகள் இல்லை: