இந்திய
கிரிக்கெட் ரசிகர்கள் ,இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியா தொடரில் தோல்வியுற்ற பொழுதும்,ஆசிய கோப்பையை கைநழுவ
விட்ட பொழுதும் எவ்வித சோர்வும் இன்றி
20 மற்றும் 20 ஆட்டத்தினை ரசிக்க தயாராகி வருகின்றனர். எனெனில் பல
தொடர் தோல்விகளை இந்திய அணி கண்டாலும்
அனைத்திலுமிருந்து எழக்கூடிய ஜாம்பவாங்களை தன்னகத்தே கொண்டது.அதுவும் அணுபவ மற்றும்
சாதனை நாயகன் சச்சின் இந்திய
அணிக்கு ஒரு கிருஷ்ணனாகவே கிடைத்து
உள்ளார். இந்திய முழுமைக்கும் குழந்தைகளின்
பெயர்களை கணக்கிட்டால் கடந்த 20 ஆண்டுகளில் அதிகம் பெயரிட்டது சச்சின்,
சச்சின் அது சச்சினாக மட்டுமே
இருக்க முடியும். இதுவும் ஒருசாதனையே.இதையும் முறையடிக்க பல
ஆண்டுகள் பிடிக்கும்.
எனது
சாதனைகள்
இந்தியர்
ஒருவரால்
தான்
முறியடிக்கப்பட
வேண்டும்:
சச்சின்
|
|
தனது சாதனைகள் இந்தியர்
ஒருவரால் முறியடிக்கப்பட வேண்டும் என்று சத சாதனை உள்ளிட்ட பல சாதனைகள் செய்த
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்
சச்சின்
டெண்டுல்கர் தெரிவி்த்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான
லீக் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடித்த
முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சச்சின் டெண்டுல்கர்.
இந்நிலையில் மும்பையில் நிருபர்களை சந்தித்த
சச்சின்,
சாதனைகள் என்பவை நிச்சயம் ஒரு நாள் முறியடிக்கப்படுபவை தான்.
ஆனால் எனது சாதனைகள் இந்தியர் ஒருவரால் முறியடிக்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார். மேலும், தனது சாதனை எப்போது முறியடிக்கப்பட்டாலும், நிச்சயம்
இந்தியர் ஒருவராலேயே அது முறியடிக்கப்படும் என்று உறுதியாக தான் நம்புவதாகவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ஓய்வு குறித்த கருத்து பற்றி கூறிய
சச்சின்,
நான் எப்போது ஓய்வு பெற வேண்டுமென்பதை நான் தான் முடிவு செய்வேன். ஏனெனில்
நான் கிரிக்கெட் ஆட தொடங்கியது எனது சொந்த முடிவு தான்.
இப்போது என்னை ஓய்வு பெற சொல்பவர்கள், ஆரம்பத்தில் என்னை கிரிக்கெட் ஆட சொன்னவர்களும் இல்லை, என்னை அணியில் சேர்த்தவர்களும்
இல்லை. மேலும் நாம் வலிமையான
நிலையில் இருக்கும்போது நாட்டுக்காக தொடர்ந்து விளையாடாமல், ஓய்வு பெற்றால் அது சுயநலமானது. என்றார்.
மேலும் அவர் கூறுகையில், என்றென்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் 11 பேர் என்று
கிரிக்கெட் ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன் கூறிய பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றிருந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன் என்றார்.
கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த
வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது
|
|
இந்தியாவின்
முன்னணி கிரிக்கெட்
வீரர்கள்
சச்சின்,
டிராவிட்
சிறந்த வீரர்களாக
மட்டுமல்லாமல்,
சிறந்த மனிதர்களாகவும்
திகழ்கின்றனர்
என ஆஸ்திரேலிய
வேகப்பந்து
வீச்சாளர்
பிரட் லீ புகழாரம்
சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ கூறியது:சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முக்கியமானசம்பவங்கள் அரங்கேறின.
ஒன்று 16 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடிய அனுபவ வீரர் டிராவிட் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தது. மற்றொன்று சச்சின் வங்கதேசத்துக்கு எதிராக 100வது சர்வதேச சதத்தை அடித்தது.
இவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள் மட்டுமல்ல சிறந்த மனிதர்கள். இதில் அனுபவ வீரர் டிராவிட் ஓய்வை அறிவித்தது, ரசிகர்களுக்கு வருத்தம் அளித்திருக்கும்.
இனிவரும் காலத்தில் இவருக்கு எதிராக பந்து வீச முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச அரங்கில் 100வது சதம் என்பது எளிதான காரியமல்ல. இதற்கு கடுமையாக போராட வேண்டும். இந்திய அணிக்காக விளையாடி வரும் சச்சின் கிரிக்கெட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.
சர்வதேச அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்த சச்சின், டிராவிட் ஆகியோருக்கு எதிராக விளையாடியதை எனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த தருணம் என்று தெரிவித்துள்ளார்.
உலகில்
உள்ள அனைத்து கிரிக்கெட் அணியினரும்
இவ்விரு வீரர்களின் மீது எவ்வித குற்றசாட்டும்
குறையும் கூற முடியாதது போல்
விளையாட்டு வருவதால் கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் இன்னும் எத்தனை வடிவம்
எடுத்தாலும்இவர்களேஎன்றும்சிறந்தஜாம்பவான்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக