டாஸ்மாக் பணியாளர்கள் உண்ணாவிரதம்
"டாஸ்மாக் கடைகளில் விற்பனை இலக்கு 40 சதவீதம்
அதிகரிக்கப்படவேண்டும் என்ற அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை பணியாளர்களிடம் நிர்ப்பந்திப்பதையும், இலக்கு
எட்டாதவர்களை, பணிவிடுப்பு
செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்துவதை கண்டித்தும், கைவிடக்கோரியும், பணியாளர்களின் பணிநிரந்தரம், அரசுப்பணியாளர்களுக்கு இணையான ஊதியம், 8 மணி
நேர வேலை, வார
விடுமுறை, பார்
உதவியாளர்களை விற்பனையாளர்களாக பதவி உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மது
விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நாளான (ஏப்ரல்)
5-ந் தேதி (மகாவீர்
ஜெயந்தி) அன்று
சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, மேற்கண்ட
தகவலை, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.தியாகராஜன், பொதுச்செயலாளர் டி.தனசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பணிநிரந்தரம் வேண்டுதல்
சென்ற ஆட்சியின் பொழுது எதிர்கட்சி தலைவியான தற்போதைய முதல்வர் அம்மா அவர்கள் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என வாக்குறுதி அளித்ததன் பெயரில்
டாஸ்மாக் ஊழியர்கள் 35000 பேர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களும் கடந்த தேர்தலில் ஒர் மெளன புரட்சியின் மூலம் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்த உதவியுள்ளனர்.அதன் காரணமாக அம்மா அவர்களிடமிருந்து ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும் நல்லதொரு அறிவிப்பு வெளிவராத என்று அரசிற்கு அதிக பட்ச வருவாய் அளித்துக்கொண்டிருக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் ஏங்கி கொண்டுள்ளனர். எனவே இவ்விஷயத்தில் முதல்வர் அம்மா அவர்கள் தலையிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு அடிப்படை வாழ்வாதரத்திற்கு அங்கீகாரம் அளிக்கின்ற வகையில் நல்லதொரு சிறப்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டு கடந்த எட்டு ஆண்டாக ஏங்கீதவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பதினருக்கு வாழ்வளிக்க வேண்டுமாய் தமிழக அரசை வேண்டி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு சங்க தலைவர் செல்வராஜ் தலைமையேற்க செயலாளர் சையது முகமது சுலைமான் தீர்மானங்களை கொண்டுவந்து உரையாற்றினர்.உடன் நிர்வாகிகள்சுரேஸ்,கோபால்சாமி,பூமிநாதன்,அழகு முத்துராமலிங்கம்,மணிகண்டன்,நாகராஜ்,பூங்கொடி இருந்தனர்.பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரையாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக