மதுபான
விற்பனை வருவாய்
டாஸ்மாக் மூலம்
கடந்த
நிதியாண்டில் (2011-2012) ரூ.18 ஆயிரம்
கோடி
வருவாய் கிடைத்துள்ளது என்று
தமிழக
அரசு
தெரிவித்துள்ளது.
மதுபான
சில்லறை விற்பனை செய்யும் உரிமை
அரசின்
சொந்த
நிறுவனமான டாஸ்மாக்குக்கு வழங்கும் முடிவு
2003-ம்
ஆண்டு
எடுக்கப்பட்டது. இதன்
மூலம்
தனியார் செய்து
வந்த
தீர்வை
செலுத்தப்படாத மதுபான
விற்பனை தடுக்கப்பட்டு, அரசு
வருவாய் தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது.
18 ஆயிரம் கோடி
வருவாய்: டாஸ்மாக் மூலம்
கடந்த
நிதியாண்டில் ரூ.18
ஆயிரத்து 81 கோடி
வருவாயாகக் கிடைக்கும் என
தமிழக
அரசு
உத்தேசமாக மதிப்பிட்டுள்ளது.
அதில்
ஆயத்தீர்வை வருவாயாக ரூ.9
ஆயிரத்து 956 கோடி,
விற்பனை வரியாக
ரூ.8
ஆயிரத்து 125 கோடி
கிடைக்கும்.
2003-2004 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3 ஆயிரத்து 639 கோடி
வருவாய் கிடைத்தது.
2004-2005 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.4 ஆயிரத்து 872.03 கோடி வருவாய் கிடைத்தது.
2005-2006 நிதியாண்டில்
டாஸ்மாக் மூலம் ரூ.6 ஆயிரத்து 030.77 கோடி வருவாய் கிடைத்தது.
2006-2007 நிதியாண்டில்
டாஸ்மாக் மூலம்
ரூ.7
ஆயிரத்து 473.61 கோடி வருவாய் கிடைத்தது.
2007-2008 நிதியாண்டில்
டாஸ்மாக் மூலம்
ரூ.8
ஆயிரத்து 821.16 கோடி வருவாய்
கிடைத்தது.
2008-2009 நிதியாண்டில்
டாஸ்மாக் மூலம்
ரூ.10
ஆயிரத்து 601.50 கோடி வருவாய் கிடைத்தது.
2009-2010 நிதியாண்டில்
டாஸ்மாக் மூலம் ரூ.12 ஆயிரத்து 498.22 கோடி வருவாய் கிடைத்தது.
2010-2011 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.14 ஆயிரத்து 965.42 கோடி வருவாய் கிடைத்தது.
2011-2012 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.18 ஆயிரத்து 081.16 கோடி வருவாய் கிடைத்தது.
இதன் அளவுதொடர்ச்சியாகஅதிகரித்துஇப்போது6மடங்காக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்ஊழியர்கள்எதிர்பார்ப்பு.
ஆறுமடங்கு விற்பனை அதிகரிப்பை அரசுக்கு வழங்கிய டாஸ்மாக் தொழிலாளர்கள் மட்டும் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையிலேயே காலம் கழித்து வருகின்றனர். படித்த பட்டம் பெற்ற டாஸ்மாக் சூப்ரவைசர் பணிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் பெறும் மாத சம்பளம்ரூ5000 மட்டுமே.இதிலும் விற்பனையாளர் சம்பளம்ரூ 3800 முறையே பார் உதவியாளர் ரூ2600 மட்டுமே பெற்றுவருகின்றனர்.இக்குறைந்த சம்பளத்தை கொண்டு கடும் விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். சென்ற ஆட்சியாளர்கள் டாஸ்மாக் ஊழியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தினர்.வெகுண்ட ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தவுடன் முன்னாள் முதல்வர் டாஸ்மாக்கை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க போவதாக அறிவித்து ஊழியர்களை பயமுறித்தி கடைகளுக்கு பல காவலர்கள் பாதுகாப்பு போட்டு தொழிலாளர்களின் போராட்டங்களை நீர்த்து போக செய்தார்.அதன் பலனை தேர்தலில் சந்தித்தார்.தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து சென்ற ஆட்சியின் பொழுது எதிர்கட்சி தலைவியான தற்போதைய முதல்வர் அம்மா அவர்கள் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என வாக்குறுதி அளித்ததன் பெயரில் டாஸ்மாக் ஊழியர்கள் 36000 பேர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களும் கடந்த தேர்தலில் ஓர் மெளன புரட்சியின் மூலம் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்த உதவியுள்ளனர்.நல்லோர் வாக்கு பொய்பதில்லை என்பதன் காரணமாக அம்மா அவர்களிடமிருந்து ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும்பொழுதும்நல்லதொரு அறிவிப்பு வெளிவராதா என்று அரசிற்கு அதிக பட்ச வருவாய் அளித்துக்கொண்டிருக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் ஏங்கி கொண்டிருந்தனர்.ஆனால் அரசின் நடவடிக்கை ஏமாற்றமே அளிக்கின்றது.

அரசின் நடவடிக்கை
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.
300-லிருந்து ரூ.
500 வரை
ஊதிய
உயர்வு
வழங்கப்படும் என
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
அமைச்சர் நத்தம்
விஸ்வநாதன் அறிவித்தார்.
பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
மானியக் கோரிக்கை மீதான
விவாதத்துக்குப் பதில்
அளித்துப் பேசுகையில் அவர்
வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு மாநில
வாணிபக் கழகம்
(டாஸ்மாக்) நடத்தும் சில்லறை மதுபான
விற்பனைக் கடைகளில் 7,785 மேற்பார்வையாளர்களும், 16,826 விற்பனையாளர்களும், 4,039 மதுக்கூட உதவியாளர்களும் ஒப்பந்த, தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
மேற்பார்வையாளர்களுக்கு ரூ.
500-ம்,
மதுக்கூட உதவியாளர்களுக்கு முறையே
ரூ.
400 மற்றும் ரூ.
300 ஊதிய
உயர்வு
வழங்கப்படும். இதன்
மூலம்
டாஸ்மாக்கில் பணிபுரியும் 28,650 தொகுப்பூதிய பணியாளர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்றார் நத்தம்
விஸ்வநாதன்
விற்பனை 6 மடங்கு சம்பளம் 3 நாம மடங்கு உயர்வு
இனி
ஊழியர்களின் நிலை என்ன?
சென்ற கடை அடைப்பு போராட்டத்தின் போது சென்ற ஆட்சியாளர்கள் அறிவித்த அதே 500 சம்பள உயர்வை வழங்கி தொழிலாளர் விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று அறிவித்துவிட்டனர்.இதற்கு பின்பும் டாஸ்மாக் பணியாளர்களை விற்பனை இலக்கு என்ற பெயரிலும்,ஆளும் கட்சியினரின் சிபாரிசு என்ற பெயரிலும் தீடீர் மாறுதல்,தொழிலாளர் சட்டங்களை எதுவும் பின்பற்றாமல் பணிநீக்கம் தொடரும் கஷ்டசூழ்நிலையில் போராட்டத்தை துவங்குவதே நல்ல தீர்வினைஅளிக்கும் என்று டாஸ்மாக் தளம் வேண்டுகிறது.சென்ற மாதம் சென்னையில் செவிலியர்கள் போராட்டத்தின் விளைவாக சம்பளம் ரூ 5000 லிருந்து ரூ 12000 ஆக பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.நல்லோர் போராட்டம் என்றும் தோற்பதில்லை.

வ.ஷாஜஹான்.திருமங்கலம்.9942522470.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக