புதன், 2 மே, 2012

டாஸ்மாக் சிஐடியூ மாநில மாநாடு சிறப்பு செய்திகள்


தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியூ) 3-வது இரு நாள்கள் நடைபெறும் மாநில மாநாடு திருநெல்வேலியில் திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளான திங்கள்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஜெயபிரகாசன் தலைமை வகித்தார். மாலைவரை அந்த அறிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.. இரண்டாம் நாளான மே 1 செவ்வாய் அன்று சம்மேளன பொதுச்செயலாளர் பழனிவேலு, சிஐடியு., உதவி பொதுச்செயலாளர் கருமலையான், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சம்மேளன தலைவர் ஜெயபிரகாசன், துணைத்தலைவர் ஆல்துரை, சிஐடியு., மாநில துணைத்தலைவர் ராஜாங்கம், மாவட்ட செயலாளர் மோகன், வரவேற்புக்குழு பொருளாளர் இளமுருகு உட்படபலர்பேசினர்.
 இறுதியாக சிஐடியூ மாநில பொதுச்செயலரும், எம்எல்ஏவுமான .சவுந்திரராஜன் எம்.எல்.., கலந்துகொண்டு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.




சிஐடியு., மாநில பொதுச்செயலாளரும், எம்.எல்..,வுமான சவுந்தரராஜன் பேசியதாவது:
டாஸ்மாக், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், உள்ளாட்சித்துறை உதவியாளர்களுக்கு சலுகைகள், உரிமைகளை அளிக்காமல் அரசு ஏமாற்றி வருகிறது. தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்ததால் கடந்த 20 ஆண்டுகளாக தொழிலாளர்கள் உரிமைகளை இழந்து வறுமையில் வாடுகின்றனர். பெரும் நிறுவன உரிமையாளர்கள் லாபத்தில் கொழிக்கின்றனர்.2023ல் தமிழகத்தில் ஒருவருக்கு சராசரி மாத வருமானம் 29 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என முதல்வர் கூறுகிறார். தற்போது சராசரி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என சட்டசபையில் வலியுறுத்தினோம்.
35
ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க தமிழக அரசுக்கு தகுதி உள்ளது. கடன் பெற்றாவது தொழிலாளர்களுக்கு சலுகைகளை அளியுங்கள் என சட்டசபையில் தெரிவித்தோம். அப்படி செய்ய முடியாது என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். சட்டசபையில் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அளித்தால் பதில் அளிப்பதில்லை.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதால் யாருக்கும் பயன் இல்லை. சபைக்குள் இருந்து குரல் கொடுப்பது தான் முக்கியம். அனைத்து தரப்பு தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்போம். டாஸ்மாக் ஊழியர்கள் அமைப்புரீதியாக வலுவாக வேண்டும். ஊழியர்கள் நினைத்தால் கடைகளை மூட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். சங்கம் வலிமை பெற்றால் அரசு உரிமைகளை அளிக்கும். டாஸ்மாக் ஊழியர்கள் சட்டச்சலுகைகளை அடைவது உறுதி.இவ்வாறு சவுந்தரராஜன் பேசினார்.

தீர்மானங்கள்
ஊக்கத்தொகை வழங்குவதில் முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறையை பின்பற்றுவது, முறைகேடான பணியிட மாறுதல்களை ரத்து செய்து வெளிப்படையான பணியிட மாறுதல் அளிப்பது, ஊழியர்களுக்கு சாதகமான கோர்ட் தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவது, விற்பனையை முறைப்படுத்த கம்ப்யூட்டர்மயமாக்குவது, காலி அட்டைப்பெட்டிகளை நிர்வாகம் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர் போராட்டங்கள்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 27, 28ல் 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது, ஆகஸ்டு 28ல் மறியல் நடத்துவது, அடுத்தக்கட்டமாக நவம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் நடத்துவது என மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு
சம்மேளன தலைவராக பழனிவேலு, பொதுச்செயலாளராக திருச்செல்வன், பொருளாளராக சதீஷ், துணை பொதுச்செயலாளராக சரவணப்பெருமாள், வேல்முருகன், பொன்பாரதி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் 10 துணைத்தலைவர்கள், 10 செயலாளர்கள் உட்பட 75 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. பாளை. லூர்துநாதன் சிலை முன்பு துவங்கி மார்க்கெட் மைதானம் வரை பேரணி நடந்தது.


கருத்துகள் இல்லை: