திங்கள், 21 மே, 2012

பார் அவலம் பாரீர்.


டாஸ்மாக் மதுக் கடைகளில் பார் நடத்துவதில் அதிகாரிகளின் உடந்தையுடன் தனிநபர்கள் சில தில்லுமுல்லுகளைச் செய்து சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்தால், இத்துடன் மேலும் சில ஆயிரம் கோடி வருமானமும் கிடைக்கும்.உரிமம் இல்லாமல் நடக்கும் சுமார் 4000 பார்களால் இந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மற்றும் அரசியல் தலையிட்டின்றிபார் ஏலம் விடுவதன் முலம் அரசும் குடிமகன் களுக்கும் மிகுந்த லாபம் பெறலாம்.தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட்டு பார் ஏலவிசயத்தில் சிண்டிகேட் அமைப்பதை தடுக்க டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.

                                           

சிண்டிகேட்டுகள் ஆதிக்கம்.

 மதுக் கடைகளை ஏல முறையில் தனி நபர்களுக்கு ஏலம் விட்டபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கூட்டு (சிண்டிகேட்) சேர்ந்து கொண்டு, குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஏலம் கேட்காமல் இருந்தனர். இதனால் குறைவான தொகைக்கே கடைகள் ஏலம் போயின. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் மதுபான வியாபாரிகள் அபரிமிதமான லாபம் சம்பாதித்தனர்.




இதை முறியடிக்கும் வகையில் மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் என 2003-ல் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அரசால் இதை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்று அப்போது பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகளின் திட்டமிட்ட அணுகுமுறையால் மதுக் கடைகள் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அதன் பிறகு அரசுக்கு வருவாய் ஈட்டும் முக்கிய அங்கமாகவும் இது மாறிவிட்டது.2002-03-ல் டாஸ்மாக்கின் வருமானம் ரூ.2,828 கோடியாக இருந்தது. தற்பொழுது இது ரூ.18 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது.






மீண்டும்சிண்டிகேட்.
கடைநடந்தமுடியாதஅரசியல்வாதிகளின்புகழிடமாகபார் உருவாகியுள்ளது. பாரை முறைப்படி எந்த மாவட்டத்திலும் டெண்டர் விடுவதில்லை.ஆளும் கட்சியின் மாவட்டச்செயலாளரின் அனுமதி பெற்றால் மட்டுமே பார் நடந்த அனுமதி கிடைக்கின்றது.பெயருக்கு பார் ஏலம் விடப்படுகின்றது.ஆளும் கட்சியினர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.கட்சிக்கு பணம் கொடுத்து பார் எடுப்பவர் எப்படியும் கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைப்பதினால் பாரில் சுகாதாரமின்மை,கூடுதல் விலை,போலிசரக்கு போன்றவை பெருகி வருகின்றது.

ஏற்கெனவே மதுக்கடைகள் நடத்தி வந்தவர்களுக்கு இனி மதுக் கடை வியாபாரம் கிடைக்காது என்ற நிலையில், கடையின் அருகிலேயே "பார்' வைத்து நடத்திக் கொள்ள அனுமதிப்பது என்ற அரசின் முடிவு அவர்களுக்கு மறுவாழ்வு தருவதாக அமைந்துவிட்டது.மது வகைகளை வாங்குவோர் அருகில் உள்ள பாரிலேயே அதைக் குடிக்க, தேவையான வசதிகளை பார் உரிமையாளர்கள் செய்து தருவார்கள்.குறிப்பிட்ட ஒரு கடையின் சராசரி தினசரி வியாபாரத்தில் 2.5 சதவீதத்தை அடிப்படைத் தொகையாக நிர்ணயித்து, பார் உரிமத்துக்கு டெண்டர் கோரப்படுகிறது.உதாரணமாக, தினம் ரூ.1 லட்சம் வியாபாரம் நடக்கும் கடைக்கு தினசரி ரூ.2,500 என்பது குறைந்தபட்ச உரிம கேட்புத் தொகையாக நிர்ணயித்து டெண்டர் அறிவிக்கப்படும். இதில் யார் அதிகபட்ச தொகைக்கு டெண்டர் கேட்கிறாரோ அவருக்கு உரிமம் தரப்படுகிறது. அவ்வாறு உரிமம் பெறுபவர் மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாக டாஸ்மாக் நிறுவனத்துக்குச் செலுத்திவிட வேண்டும். பிறகு ஒவ்வொரு மாதத்துக்குமான தொகையை செலுத்த வேண்டும். ஆண்டு முடிவில் அவரது முன்பணத்தை திரும்பப் பெறலாம்.ஒருவர் தினசரி ரூ.3,000 என்ற தொகைக்கு உரிமம் பெறுவதாக வைத்துக் கொண்டால், ரூ.2.70 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும். மாதம் ரூ.90 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மூன்று மாதங்கள் கட்டணம் செலுத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும். பிறகு மறுபடியும் டெண்டர் மூலம் வேறொருவருக்கு அனுமதி தரப்படும்.ஆனால் இந்த இடத்தில்தான் மோசடி நடக்கிறது.முதல் மூன்று மாதங்கள் முடியும் வரையில் மாதாந்திரக் கட்டணம் செலுத்தாமல் இருந்துவிட்டால், பிறகு உரிமம் ரத்தாகிவிடும். கடைக்கு வருவோருக்கு, பாருக்கு உரிமம் உள்ளதா, ரத்தாகிவிட்டதா என்பது தெரியாது.

மறு டெண்டர் விடுவதில் அதிகாரிகள் தெரிந்தே தாமதம் செய்கின்றனர். எனவே உரிமக் கட்டணம் செலுத்தாமலே அங்கு பார் நடத்தப்படுகிறது. மாதம் ரூ.90 ஆயிரம் கட்டணத்தை அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. அதிகாரிகளுக்கு இதில் சிறு தொகையைத் தந்துவிட்டால் போதும்.

தமிழகம் முழுக்க 7,434  மதுக் கடைகள் உள்ளன. இவற்றில் சுமார்  பாதி கடைகளில் மட்டுமே பார் நடத்த உரிமம் தரப்பட்டுள்ளது. மீதி பாதி  கடைகளில் பார் நடத்த உரிமம் இல்லை. ஆனால் ஏறத்தாழ எல்லா கடைகளுக்கு அருகிலும் பார்கள் உள்ளன என்பது போலீஸôருக்கும், வருவாய்த் துறையினருக்கும் நன்கு தெரியும்.இந்தக் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் மொத்தம் ரூ.310 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு. முதல் 3 மாதங்கள் போக மீதி 9 மாதங்களுக்கு கணக்கு பார்த்தால் ரூ.2794 கோடி நட்டம். எல்லா கடைகளிலும் தினசரி சராசரி விற்பனை ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் பார்த்தால் இந்தக் கணக்கு. இதுவே கடையின் சராசரி விற்பனை ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என உயரும்போது மேற்படி தொகையும் ரூ.3,000 கோடியைத் தாண்டும்.அதிகாரிகளை சிறிய அளவில் கவனித்துவிடுவதால், இந்தத் தொகை முழுக்க பார் உரிமையாளர்களுக்கு போய்ச் சேருகிறது.இது மட்டுமில்லை. பாருக்கு வருவோர் மது வகைகளை வாங்கி வருமாறு பணம் கொடுத்து அனுப்புவர். அப்போது தாங்கள் ஏற்கெனவே வைத்துள்ள போலி மது வகைகளையும், அரசுக்கு வரி செலுத்தாமல் மது உற்பத்தி நிலையத்திடம் நேரடியாக வாங்கி வைத்துள்ள மது வகைகளையும் கொடுத்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகையும் விற்பனை மூலமான லாபமும் சேர்ந்து கிடைக்கிறது.இதனால் அரசுக்கு இரட்டிப்பு நட்டம் ஏற்படுகிறது. இப்படி தில்லுமுல்லுகள் செய்து அதிக லாபம் கிடைப்பதால்தான் பார்களுக்கு அனுமதி பெற அரசியல்வாதிகளிடையே உள்ளூர் அளவில் கடுமையான போட்டி இருக்கிறது அரசு இதில் கவனம் செலுத்தினால், அரசுக்கு வர வேண்டிய கணிசமான வருமானம் தனி நபர்களுக்குச் செல்வதையும் அவர்கள் செல்வாக்கு பெறுவதையும் தடுக்க முடியும்.



 டாஸ்மாக்” பாரில் தரமற்ற உணவு பண்டம்.

டாஸ்மாக்  பார்களில், தரமற்ற முறையில் உணவு பண்டங்களை தயார் செய்து வழங்குவதால், "குடி'மகன்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அத்தகைய பார்களை, போலீஸார் பாதுகாப்புடன் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இங்கு மது அருந்த வரும், "குடி'மகன்கள், பாரில் விற்பனை செய்யப்படும் முட்டை, சில்லி, மீன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி உட்கொள்கின்றனர்.
வெளியில் இருந்து பொருட்களை வாங்கி வரக்கூடாது. அவ்வாறு வாங்கி வந்தால், பாரில் அனுமதிப்பதில்லை. அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்ளும் பார் உரிமையாளர்கள், தங்கள் இஷ்டம்போல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். மேலும், காலையில் தயார் செய்த உணவு வகைகளை, இரவு வரை சூடு செய்து விற்பனை செய்கின்றனர். மேலும் பல பார்களில் உணவு பண்டங்களை தயார் செய்து ப்ரிட்ஜ்ல் வைத்து பல நாட்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், உடைந்த முட்டைகளைக் கொண்டு ஆப்பாயில், ஃபுல்பாயில், ஆம்லெட் தயாரித்து கொடுக்கின்றனர். வெளியில் விற்பனை செய்யும் விலையைவிட இரண்டு மடங்கு கூடுதலாக விற்பனை செய்கின்றனர். வேறு வழியில்லாமல், "குடி'மகன்கள் அவற்றை வாங்கி உட்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அதேபோல், சுகாதாரமான முறையில் பொருட்களை தயார் செய்வதில்லை. கடமைக்கு தயார் செய்து வழங்குவதால், அவற்றை உட்கொள்ளும், "குடி'மகன்களுக்கு பின் விளைவுகள் தெரியாமல் போகிறது. சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பாரில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் சுகாதாரமாகவும், தரமானதாகவும் தயார் செய்யப்படுகிறதா என உணவு ஆய்வாளர்கள் சென்று பார்பதில்லை. ஆளும் கட்சியினரே பார் நடத்துவதினால் சுகாதார கேட்டிலும் நோய் பரப்புவதிலும் பார் முதலிடம் வகித்தாலும் சுகாதார ஆய்வாளர்கள் எந்த பாரையும்  இதுவரை சோதனையிட்டதில்லை. குடி'மகன்களின் நலனை கருத்தில் கொண்டு முறையாக டாஸ்மாக் பார்களை, போலீஸார் உதவியுடன் சென்று ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

தீர்வுதான்என்ன?
பார் நடத்துபவர் ஆளும் அரசியல் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் பெருமளவில் பணத்தினை செலவு செய்து நடத்துவதினால் பல முறைகேடுகளும் அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகின்றது.மதுகடை ஏலத்தில் சிண்டிகேட் அமைப்பதை தடுத்த நமது முதல்வர் அவர்கள் பார் ஏலத்திலும் சிண்டிகேட் அமைப்பதை தடுத்து அரசிற்கு வருவாய் கிடைத்திட செய்யவும்,மேலும் பாரையும் அரசே ஏற்று நடத்துவதன் முலம் அரசிற்கு பெரும்லாபம் கிடைத்திட செய்ய வேண்டுமாய் டாஸ்மாக்தளம் தமிழக அரசினை வேண்டுகின்றது.

.ஷாஜஹான்,திருமங்கலம். மதுரை.9942522470.


கருத்துகள் இல்லை: