சனி, 29 செப்டம்பர், 2012

தகவல்அறியும் சட்டம்


தகவல்அறியும் சட்டம்
இந்தியாவில் 2005ல் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசின் திட்டங்கள் பற்றியும்,திட்டப்பயன்பாடுகள் பற்றியும் பலவகையில் மனிதவளஆர்வலர்கள் அறிந்துகொள்ள உதவியாக அமைந்துள்ளது.ஆனால் டாஸ்மாக்கில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்துவது மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றது.தற்பொழுது மதுரைமாவட்ட தொ.மு. துணைத்தலைவர் செல்வம் அவர்கள் நான்கு கேள்விகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டு மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் பதில் பெற்றுள்ளார்.பாரில் உரிமம் எடுத்த பார் உரிமதார்களின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாணை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பொதுமக்களின் பார்வையில் படும்படியும் அனைத்து பார் உரிமதாரர்களுக்கு ஒருகாப்பி வீதம் அனுப்பிவைத்து டாஸ்மாக் ஊழியர்கள் களப்பணியாற்றிடவேண்டுமாய் டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.


செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நடப்புச்செய்திகள்


நடப்புச்செய்திகள்


மதுபான விலை உயர்வு

செய்திகள்:

தமிழகத்தில் 6820 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கிறது. மது பாட்டில்களின் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது புதிய விலை நேற்று அமலுக்கு வந்தது. இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.1000 கோடி வரை அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்படி குவார் ட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், ஆஃப் பாட்டில் ரூ.15 முதல் ரூ.20 வரை யிலும், ஃபுல் பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.45 வரை விலை உயர்ந்துள்ளது.