சனி, 29 செப்டம்பர், 2012

தகவல்அறியும் சட்டம்


தகவல்அறியும் சட்டம்
இந்தியாவில் 2005ல் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசின் திட்டங்கள் பற்றியும்,திட்டப்பயன்பாடுகள் பற்றியும் பலவகையில் மனிதவளஆர்வலர்கள் அறிந்துகொள்ள உதவியாக அமைந்துள்ளது.ஆனால் டாஸ்மாக்கில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்துவது மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றது.தற்பொழுது மதுரைமாவட்ட தொ.மு. துணைத்தலைவர் செல்வம் அவர்கள் நான்கு கேள்விகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டு மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் பதில் பெற்றுள்ளார்.பாரில் உரிமம் எடுத்த பார் உரிமதார்களின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாணை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பொதுமக்களின் பார்வையில் படும்படியும் அனைத்து பார் உரிமதாரர்களுக்கு ஒருகாப்பி வீதம் அனுப்பிவைத்து டாஸ்மாக் ஊழியர்கள் களப்பணியாற்றிடவேண்டுமாய் டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.





இது போன்று அனைத்து மாவட்டங்களில் உள்ள சங்கங்களின் நிர்வாகிகள் தகவல் அறியும் சட்டம் மூலம் டாஸ்மாக் நிர்வாகத்தினை தொழிலாளர்சட்டத்தினை மதித்து நடக்க செய்ய வேண்டும்.இந்தவிசயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய செல்வம் அவர்களையும் கேள்விகளுக்கு தாமதப்படுத்தாமல் பதிலளித்த மாவட்ட மேலாளர் ஐயப்பன் அவர்களையும் டாஸ்மாக் செய்திகள் தளம் பாராட்டுகின்றது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு.

டாஸ்மாக்கில் தற்பொழுதைய மிகபெரிய பிரச்சனை கடைகளுக்கு கேட்காமலேயே கம்பெனிகளிடம் மிக பெரிய அளவில் கையூட்டு பெற்றுக்கொண்டு சரக்குகளை அதிகாரிகள் குவிப்பது இது பற்றிகூடிய விரைவில் டாஸ்மாக் செய்திகள் தளத்தில் சிறப்பு கட்டுரை வர உள்ளது.இந்த கூடுதல் சரக்கு இறக்குதல் குறித்து செல்வம் மற்றும் சில பணியாளர்கள் ஒருங்கிணைத்து 25.06.2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம்அன்று மனு வழங்கியுள்ளனர்.இம் மனு கோரிக்கை எண் TT /12/12562. ஏற்கப்பட்டு அதற்கான பதிலாக உதவிஆனையர்(சுங்கம்) அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
அவை பின்வருமாறு.
இனி வருங்காலத்தில் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைகடைகளுக்கு இறுதி இருப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் மதுபானங்களை நடவடிக்கை எடுக்குமாறு டாஸ்மாக் மண்டல மேலாளர்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் விவரம் காணலாம்
http://online gdp.tn.nic.in

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.

கருத்துகள் இல்லை: