அடிமைத் தொழிலாளி
நன்றி
பிபிசி
இந்தியா
உள்ளிட்ட வறிய நாடுகளில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
உலகில்
தற்போது 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக ஃப்ரீ த
ஸ்லேவ்ஸ் அடிமை விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க
கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும், கர்ரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக
ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்று
இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மனித
சரித்திரத்தில் எந்த ஒரு நேரத்திலும் இருந்த அடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கையைவிட
தற்போதைய உலகில் கூடுதலான அடிமைத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு
அதிர்ச்சித் தகவலாக வந்துள்ளது.
மிக
வேகமான ஜனத்தொகை அதிகரிப்பு, ஏழ்மை, அரசாங்க ஊழல் போன்றவை காரணமாக பல நாடுகளில்
அடிமைத் தொழிலாளிகள் இன்றளவும் இருந்துவரவே செய்கிறார்கள் ஃப்ரீ த ஸ்லேவ்ஸின்
ஆராய்ச்சியாளர் கெவின் பேல்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.