திங்கள், 12 நவம்பர், 2012

இலக்கு 2012


இலக்கு 2012

உலகில் வெற்றியை நோக்கி நடைபயிலும் ஒவ்வொருவரும் ஒருஇலக்கினை நிர்ணயித்து அதை முன்னிருத்தி செயல்பட்டாலே ஒழிய அந்த வெற்றியை இப்போட்டி உலகில் அடைவது கடினம். நமது டாஸ்மாக் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் எவ்வளவு மதுபான வகைகளை கம்பெனிகளிடமிருந்து பெறுவது விற்பனை செய்வது பற்றி பெரிய இலக்குடன் பயணித்து வருடந்தோறும் அதை அடைந்துவருகின்றது.



தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு, "சரக்கு' வழங்கும் வகையில், "டாஸ்மாக்' நிர்வாகம், 40 சதவீதம் கூடுதலாக "சரக்கு'களை, கடைகளுக்கு அனுப்பி வருகிறது. தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2003 நவம்பர் முதல், மதுபான விற்பனை, தமிழ்நாடு அரசு விற்பனை கழகமான, "டாஸ்மாக்' மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மது விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2003ல், 3,250 கோடியாக இருந்த மது விற்பனை, 2011 - 12ம் நிதி ஆண்டில், 20 ஆயிரத்து 180 கோடியாக உயர்ந்தது. நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டுக்கு, 23 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், .தி.மு.., அரசு பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில், மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


"
டாஸ்மாக்' கடைகளின் தினசரி விற்பனை, 72.25 கோடியாகவும், ஞாயிறு, விசேஷ தினங்களில் விற்பனை, 85 கோடியாகவும் உள்ளது. மதுபான கடைகளுக்கு, 40 சதவீத கூடுதல் சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படும், 14 "டாஸ்மாக்' குடோன்களிலும் சரக்குகளை இறக்க முடியாமல், ஒவ்வொரு குடோன்களிலும், 50க்கும் மேற்பட்ட லாரிகள் காத்து நிற்கின்றன.
கடைகளின் விற்பனையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கடைக்கும், 30 முதல், 40 சதவீதம் வரையில் அதிகமாக சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், கடைகள், பார்கள் சரக்கு பெட்டிகளால் நிரம்பி வழிகின்றன.

அதிகாரிகளின் இலக்கு.
டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் நிரம்பி வழிவதற்கான ஒரே காரணம் அதிகாரிகள் கம்பெனிகாரர்களிடம் பெருமளவு கமிஷன் பெருவதேயாகும்.ஒரு வணிக நிறுவனத்தில் தங்களின் கடைகொள்ளளவு எவ்வளவோ அவ்வளவே சரக்கு வைத்திருப்பர்.தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு போட்டி கடைகள் ஏதும் உண்டா? இல்லையே. இந்த பகுதி டாஸ்மாக் கடையில் குடிக்கவிலை என்றால் அடுத்த பகுதி டாஸ்மாக் கடையில் தானே குடிக்கவேண்டும்.எதற்கு புதிய புதிய கம்பெனிகளின் சரக்குகள்.பிராண்டுகளின் எண்ணிக்கை விட்டால் 500 ஆகும் போல் உள்ளது.ஒவ்வொரு புதிய பிராண்டுகள் அறிமுகத்திலும் கோடியில் அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து விளையாண்டு வருகின்றன.சென்ற ஆட்சியில் புதியகம்பெனிகள் அனுமதியில் நடைபெற்ற ஊழல்களை இவ்வாட்சியினர் விசாரிப்பார்கள் என நினைத்தால் ஊழல்களில் அவர்களுடன் போட்டியிட்டு வருகின்றனர்.அளவுக்கு அதிகமான சரக்குகள் கையிருப்பு இருந்தும் இடப்பற்றாகுறையால் அனைத்து கடைகளில் வாடிக்கையாளர்கள் கேட்கும் சரக்குகள் கடையில் உள்ளே மாட்டிகொள்வதால் கொடுக்க முடியாத சூழ்நிலையே உள்ளது.அதிகாரிகளும் தங்களுக்கென கமிஷனில் இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவதால் தான் கடைகள் அனைத்தும் குடோன்கள் போல சரக்குகளால் நிரம்பி வழிகின்றன.

இலக்கில்லா பயணம்.
டாஸ்மாக் தொழிலாளர்கள் மட்டுமே தங்கள் வாழ்கையின் எதிர்காலம் பற்றிய இலக்கில்லாமல் செயல்பட்டு வருக்கின்றன.கிடைக்கும் செற்ப சம்பளத்துடன் பணிபாதுகாப்பின்றியும் பலர் குடியடிமைகளாகவும் இருந்துவருகின்றனர். சமீபத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன் அவர்கள் சட்டபேரவையில் சமர்ப்பித்த கொள்கை விளக்க குறிப்பில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ஆண்டுதோரும் ரூ240 கோடி செலவு செய்வதாக கூறியுள்ளார்.தற்பொழுது தீபாவளி பண்டிகையையொட்டி வழங்கப்பட்டுள்ள 20சதவீதபோனஸ்க்கு ரூ22.14 கோடி செலவாகும் என செய்திதாள்கள் கூறுகின்றன.
வருடத்திற்கு 20000 கோடி வருமானம் கொடுக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அதன் வருமானத்தில் 1.5சதவீதம் கூட செலவுசெய்வதில்லை.ஒரு நிறுவனம் துவங்குபவர்கள் தொழிலாளர்களுக்கென 10சதவீதமாவது ஒதுக்குவது உலகநடவடிக்கை. தீபாவளி அன்று மட்டும் 125 கோடி விற்பனை இலக்குடன் செயல்படும் நிர்வாகம்.பணியாளர்களை 9 ஆண்டுகள் ஆனபொழுதும் பணிநிரந்தரம் செய்யாமல் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் இலக்கோடு செயல்பட்டு வருகின்றது.
தொழிலாளர்கள் இக்கொடுமைக்கு எதிராக ஒன்றினைந்து வருடவருமானத்தில் குறைந்தபட்சம் 8சதவீதமாவது தொழிலாளர் நலனுக்காக ஒதுக்க வேண்டும் என போராடி சட்டமன்றத்தில் சட்டமியற்ற வழிவகுக்கவேண்டும்.லாபத்தில் இயங்கக்கூடிய நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தங்களது நிறுவன வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாவது வழங்கவேண்டும் என்று நிதிமன்றங்களும் தீர்ப்புவழங்கினால் தான் நிர்வாகத்தினர் தொழிலாளர் விசயத்தில் நல்லபடியாக நடந்துகொள்வார்கள்.

 .ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.

கருத்துகள் இல்லை: