விற்றுமுடி அல்லது வீழ்ந்துமடி-டாஸ்மாக்
செய் அல்லது செத்துமடி என்ற முழக்கம் மூலம் காந்திஜீ சுதந்திர போராட்டத்தினை முன்னெடுத்து சென்றார்.தற்பொழுது டாஸ்மாக் நிர்வாகமோ விற்றுமுடி அல்லது வீழ்ந்துமடி என்ற முழக்கத்தினை மறைமுகமாக முன்னெடுத்து ஊழியர்களை வதைத்து வருகின்றது.
கடந்த 2003 ஆண்டிலிருந்து டாஸ்மாக் மூலம் மதுவிற்பனையை அரசே எடுத்து நடத்திவரும் நிலையில் மதுவிற்பனை 3000 கோடியிலிருந்து சுமார் 20ஆயிரம் கோடிக்கு மாற்றிய டாஸ்மாக் ஊழியர்களை தங்களது கடை விற்பனை சென்ற ஆண்டு விற்பனையைகாட்டிலும் குறைவாக இருந்தால் உடன் டாஸ்மாக் நிர்வாகம் பணிநிக்கம் செய்துவருகின்றது.
கடந்த 10 ஆண்டுகளாய் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை
கடையில் சென்ற ஆண்டு விற்பனையை விட ஏன் குறைவாக தற்பொழுது விற்பனை நடந்துள்ளது என்று விளக்கம் கேட்டு பெற்று அதில் தவறு இருக்கும் பட்சத்தில் கூட பணி இடைநீக்கம் செய்யலாம்.ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் தொழிலாளர் நலச்சட்டத்தில் எதனையும் பின்பற்றுவதில்லை.
கடைக்கு அருகிலேயே அடுத்தடுத்து கடைகளை லஞ்சம் பெற்று அதிகாரிகள் அமைத்து வருவதும்,பல லட்சங்களை பெற்று கிளப்கள் என்ற பெயரில் தனியார் பார் களை அதிகம் அமைத்து வருவதும் டாஸ்மாக் விற்பனை குறைவிற்கு காரணமாகும்.அதை மூடிமறைத்து கொண்டு அப்பாவி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவது டாஸ்மாக் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதபோக்கினையே காட்டுக்கின்றது.டாஸ்மாக் ஊழியர்கள் இந்த நேரத்தில் ஒன்றுபடுவது அவசியம்.சங்கங்கள் அனைத்தும் ஒருங்கினைத்து அரசினை தொழிலாளர் நலச்சட்டத்தினை பேண வைக்கவேண்டும்.பொது மக்களும் இவ்விசயத்தில் அரசினை கண்டிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக