இம்சை இலக்கு
மார்ச்மாதம் வந்துவிட்டாலே வங்கி மற்றும் அலுவலக நண்பர்கள் முதலில் தங்களுக்குள் பகிர்வது என்னவெனில் டார்கெட் ஐ அடைந்துவிட்டீர்களா? என்பதாக தான் இருக்கும்.ஆனால் நமது டாஸ்மாக் ஐ பொருத்தமட்டில் மாதம் தோறும் நாள் தோறும் டார்கெட் தான். இதற்கு பலிக்கடாக்களாக டாஸ்மாக் ஊழியர்களும்,டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் ,துணைமேலாளர்களும் அடங்குவர்.ஒவ்வொரு நாளும் சென்ற ஆண்டின் விற்பனையை போல் விற்றுவிட்டு அதிலும் 20 சதவித விற்பனை அதிகரிப்பினை அதிகாரிகளுக்கு காட்டவேண்டும்.இதில் ஊழியர்கள் பலர் விழிபிதுங்கி தன்னளவில் குடித்தாவது விற்பனை இலக்கினை அதிகப்படுத்திவிடுவோம் என அதிகாரிகளுக்கு அடிமையாய் இருந்த ஊழியர்கள் குடிக்கும் அடிமையாகி வருகின்றன. தற்போழுது கடை அருகே அரசியல்கட்சிகூட்டத்தினாலோ, திருமண விழாக்களினாலோ,யாருடைய இறப்பினாலோ விற்பனை அதிகரித்தால் ஊழியர்கள் அடுத்தஆண்டினை எண்ணிபயப்பட ஆரம்பிக்கின்றனர். அடுத்த ஆண்டு எப்படி இந்த விற்பனையை உயர்த்துவது என்று கவலை கொள்ள ஆரம்பிக்கின்றனர்.மொத்தத்தில் கடையில் விற்பனை அதிகரித்தாலும் குறைந்தாலும் ஊழியர்கள் பாடு திண்டாட்டம் தான்.
இந்நிகழ்வினை பற்றி எழுதும் பத்திரிக்கைகள் கடைசியாக நமது டாஸ்மாக் துறை அதிகாரிகளிடம் இலக்கு பற்றிவினா எழுப்பினால் இலக்கு என்று ஒன்றும் இல்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.நமது டாஸ்மாக் துறை மந்திரியையும் இதே பல்லவியை பாடுகின்றார்.தைரிய லட்சுமியின் ஆட்சியில் இலக்கிற்காக பல டாஸ்மாக் ஊழியர்கள் பணி இழப்பினை சந்திப்பது பற்றி உண்மையை மறைப்பதிலிருந்து இது போன்று டாஸ்மாக் துறையில் இன்னும் எத்தனை உண்மைகளை மறைத்து வருகின்றார்களா?என்ற ஐய்யம் வராமல் இல்லை.
நன்றி
தினமலர்..
டாஸ்மாக்' கடைகள் மூலம், நடப்பு நிதியாண்டுக்கான விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய், எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
நிதியாண்டு முடிய இன்னும், 24 நாட்களே உள்ள நிலையில், விற்பனையை அதிகரிக்க, அதிகாரிகள் நெருக்கடி செய்து வருவதாக, ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில், 2003 நவம்பரில், டாஸ்மாக் மூலம்,மது விற்பனை துவக்கப்பட்டது. விற்பனை துவங்கிய, நிதியாண்டில், 3,500 கோடி ரூபாயாக இருந்த விற்பனை, 2004ல், 4,800 கோடி ரூபாயாக உயர்ந்தது. டாஸ்மாக் துவக்கப்பட்ட காலம் முதல், 2010 வரை, ஆண்டுக்கு சராசரியாக, 1,500 கோடி ரூபாய் வரை, விற்பனை உயர்ந்து வந்த நிலையில், 2012 நிதியாண்டில், 5,000 கோடி ரூபாய் வரை, அதிகரிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, நடப்பு நிதிஆண்டின் விற்பனை இலக்கு,
25 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த காலங்களில், பருவ மழையின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக, விவசாயம் செழித்து காணப்பட்டது; மின்தடை இல்லாததால், சிறு தொழில்கள் சிறந்து விளங்கின. இதனால், தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் மது விற்பனை உயர்ந்தது. ஆனால், நடப்பாண்டு தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக, சிறு தொழில்களில் முடக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த முடக்கத்தின் காரணமாக, கடந்த தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தினங்களில், டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு பூர்த்தியாகவில்லை. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது, "சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
அது மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களை அழைத்து எழுதியும் வாங்கப்பட்டது. இதன் காரணமாக, ஊழியர்கள் மத்தியில், பீதி ஏற்படவே, தற்போது அவர்கள், பார்களுக்கு தங்கு தடையின்றி, சரக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். இதனால், பார்களில், 24 மணி நேரமும் சரக்கு விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் துவங்கி ஜன.,31 வரை, டாஸ்மாக் விற்பனை, 20 ஆயிரத்து, 750 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. விற்பனை இலக்கை பூர்த்தி செய்ய மேலும், 4,250 கோடி ரூபாய் விற்பனையை, இம்மாத இறுதிக்குள் எட்ட வேண்டிய நிலை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், மாத சராசரி விற்பனை என்பது, 1,800 கோடி ரூபாய்க்கு மட்டுமே நிகழ்ந்துள்ளது. அப்படி இருக்கையில், அதாவது பிப்ரவரி, மார்ச் மாதத்தில், 3,600 கோடி ரூபாய் முதல், 3,800 கோடி ரூபாய் வரை, விற்பனை செய்ய இயலும், என்பதால், நடப்பு நிதிஆண்டுக்கு, விற்பனை இலக்கு பூர்த்தியாகுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டுக்கான டாஸ்மாக் இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் பூர்த்தியாகி விடும் என, நம்புகிறோம்.
இலக்கு பூர்த்தியாவதில் குறைந்த வேறுபாடு காணப்படின், அதை சரி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.விற்பனையை அதிகரிக்கும் வகையில் மார்ச், 1 முதல், அனைத்து கடைகளுக்கும் தங்கு தடையின்றி, பீர் மட்டுமின்றி, அதிகமாக விரும்பப் படும் சரக்குகள், தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.கடும் எச்சரிக்கை
விற்பனை இலக்கை பூர்த்தி செய்யாத, விற்பனையாளர்கள், சூப்பர்வைசர்கள் மீது, சஸ்பெண்ட், பணிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள ஊழியர்கள், கடை மூடப்பட்டு விட்ட நிலையிலும், தங்களின் வீடு, தெரிந்த கடைகளில் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை சப்ளை செய்து வருகின்றனர்.இந்த முறையை கையாளும் நிலையில், சில குறிப்பிட்ட கடைகளில் இலக்கை விட அதிகமாகவும், பல கடைகளில் இலக்கை விட குறைவாகவும் சரக்கு விற்பனை நடந்து வருகிறது.

இது
தினமலர் வாசகர் ஒருவரின் விமர்சனம்
தொடர்புடைய கட்டுரை.
டாஸ்மாக்
செய்திகள்: இலக்கு 2012
http://tasmacnews.blogspot.com/2012/11/2012.html?spref=tw
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக