வியாழன், 4 டிசம்பர், 2014

மாணவ உழைப்பாளிகள்



பள்ளியில் டி.சி.யை
கிழித்துவிடுவதாய் மிரட்டிய
ஆசிரியர்கள்
படிக்க வைப்பதற்காக!
பணியில், டிரான்ஸர், டிஸ்மிஸ்
செய்துவிடுவதாய் மிரட்டும்
அதிகாரிகள்
பணிய வைப்பதற்காக.
பள்ளியில் வருசம்
ஒருமுறை லஞ்சம் கொடுத்தோம்
டைரி, பேனாவாக.
பணியில் வருடம் முழுவதும்
லஞ்சம் கொடுக்கின்றோம்
டைம் சரியில்லாம போயிடுமுனு
டைம் ஸ்கேலும் கனவுல தான்
இன்றும்


“அ” ன்னா ஆப்செண்ட்
“ஊ” ன்னா சஸ்பெண்ட்
ஊகுன்னா டிஸ்மிஸ்
நாங்கள் என்றும்
கைக்கட்டி வாய்ப்பொத்தி நிற்கும்
மாணவ உழைப்பாளிகள்
அதிகாரிகளுடன் இணைந்து
அசிங்கமா அதிகவிலை விற்குறோம்
அடுப்புல பூனை ரோசம் பார்த்தா
அடுத்த வேலை ரோட்டுல
அற்ப சம்பளம் உசராம
அதிகாரிய எதுக்க முடியாம
மாணவ உழைப்பாளர்களாய்
டாஸ்மாக் ஊழியர்கள்


கருத்துகள் இல்லை: