புதன், 8 மார்ச், 2023

டாஸ்மாக் ஊழியர் சம்மேளன ஆர்ப்பாட்டம்

 டாஸ்மாக் ஊழியர் சம்மேளன ஆர்ப்பாட்டம் 



வணக்கம்🙏 பணி நிரந்தர வழங்கல் சட்டம் 1981 ( 3 )பிரிவின் கீழ் 480 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடக்கோரி சிஐடியு  பல ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறது. இந்த வழக்குகளை விரைந்து முடித்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் தொழிலாளர் ஆணையம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் மாநில சம்மேளன தலைவர் தோழர் இ. பொன்முடி அவர்கள் தலைமை வகித்தார். சம்மேளன பொதுச் செயலாளர் தோழர்  K.திருச்செல்வம், சிஐடியு உதவி பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் சிஐடியு மாநில துணைத்தலைவர் பா. பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர் .சம்மேளன துணை பொதுச்செயலாளர்கள் தோழர் ஜான் அந்தோணி ராஜ் .கேபி.ராமு, எம் .முருகன் மற்றும் மாநில பொருளாளர் ஜி. சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மற்றும் மாநில முழுவதும் இருந்து மாநில நிர்வாகிகள் ஊழியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் மாநில தலைவர்கள் தொழிலாளர் துறை ஆணையர் திரு . அதுல் ஆனந் அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து விளக்கி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் அவர்கள் சட்ட அமலாக்கம் குறித்து சட்ட துறையின் கருத்துக்களை, கேட்டு மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இவ்வாறு நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர் சங்க சம்மேளன ஆர்பாட்டத்தில் பெரும் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை: