பிசாசு படத்தில்
கதாநாயகன் விபத்து ஒன்றினை பார்த்து விடுவான். விபத்தின் நினைவிலிருந்து மீள முடியாமல்
இருப்பான். படத்தில் மீளமுடியா துயருக்கு ஆலோசனை என்ன தெரியுமா? இரண்டு பீர் பாட்டிலை
வாங்கி வயிற்றில் இறக்கு. இது வரை கூட பரவாயில்லை. குடிச்சுட்டு பாட்டிலை உடைச்சு போட்டு
மனசில் உள்ள பாரத்தினை வெளியேற்று. செம ஐடியால்ல. உண்மை தான் பல குடியர்கள் சாரி குடிமகன்கள்
பார் மற்றும் பல குடி இடங்களிலும் செய்து வரும் அநாகரிகம் பாட்டில் உடைத்தல்.
இந்த பாட்டில்
உடைக்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும்? சிறுவயதில் பால்புட்டியையும் தூக்கி போட்டு
உடைத்து இருப்பார்களோ இக்குடியர்கள். யூத திருமணங்களின்
இறுதியில் மதுக்கிண்ணம் உடைப்பார்களாம். ஏனெனில் ஆதி ஜெருசலம் ஆலயம் உடைக்கப்பட்டதினை
நினைவு கூறவும், திருமணம் என்றாலே பிரச்சனை
தான் என தெரிவிக்கவும், முதலில் உடைத்து விட்டால் இனி உடையாது பந்தம் எனவும் (ஜோசியன்
இரண்டு மனைவி உனக்கு என்றவுடன் வாழை மரத்திற்கு தாலி கட்டி நம்மவர்கள் வெட்டுவது போல)
ஏதோ ஒரு மூடபழக்கவழக்கமாக கண்ணாடி கிளாசினை உடைப்பர்.





