திங்கள், 17 பிப்ரவரி, 2014
வியாழன், 13 பிப்ரவரி, 2014
‘சரக்கு சாமி!’
குவாட்டருக்கு மேட்டர் முடிக்கும்
‘சாமி சத்தியமா குடிக்க மாட்டேன்’ என்று எந்த டாஸ்மாக் பிரஜையாவது இனி சத்தியம் செய்தால்... குடும்பத்தினர் குதூகலித்து விடவேண்டாம். ‘எந்த சாமி மேல சத்தியமா’ என எதிர்கேள்வி கேட்பது அவசியம். இந்த ‘பழங்குடி’களை பாதுகாப்பதற்கென்றே நம்மூரில் நிறைய சாமிகள் இருக்கிறது. அப்படி ஒரு சாமி குறித்த அறிமுகம். (இந்தத் தளத்தில் செய்யாவிட்டால்... வேறு எந்தத் தளத்தில் செய்வது???)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கிற உஜ்ஜயினி நகரம் - பாடங்களில் படித்த ஞாபகம் இருக்கா? - ரொம்ப விசேஷமானது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நிறைய கோயில்கள் இருப்பதால், இது புனித நகரமும் கூட. மக்களை பாதுகாக்க / பராமரிக்க, இங்கு பல தரப்பட்ட சாமிகள் இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் சாமி என்றால், அது கால பைரவ சாமிதான். பல ஆயிரம் ஆண்டுகள் முன், பத்ரசேனன் என்கிற மன்னனால், ஷிப்ரா நதிக்கரையில் இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அழகழகான ஓவியங்கள், அலங்கரிக்கப்பட்ட மதில் சுவர்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், அதைத் தவிரவும் இந்தக் கோயில் பற்றிப் பேச ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.
வியாழன், 23 ஜனவரி, 2014
மாமியா உடைச்சா?
தமிழகத்தின்
குடும்பசூழ்நிலைகளை கணக்கில் கொண்டு “மாமியா உடைச்சா மண்சட்டி மருமக உடைச்சா பொன்
சட்டி” எனக்கூறுவர். தற்பொழுது மண்சட்டியே இல்லாதநிலையிலும் இன்றும் இந்த சொலவடை உயிர்ப்புடன்
உலாவி வருகின்றது. வீட்டில் உடையும் பொருளின் மதிப்பு உடைப்பவர்களை கொண்டே
நிர்ணயிக்கப்படுகின்றது. மாமியார்,மருமகள் தாண்டி வேலைக்காரி தப்பிதவறி எதாவது
உடைத்துவிட்டால் அவ்வளவுதான் அந்த பொருளின் மதிப்பே தனி.
சரி நம்ம டாஸ்மாக்
பக்கம் வருவோம் நண்பர்களே.
மதுபான கம்பெனிகளில்
உருவாகும் மதுபான வகைகள் மாவட்டந்தோறும் அமைந்துள்ள
டாஸ்மாக் குடோன்களுக்கு கம்பெனிகளால் கொண்டுவந்து சேர்க்கப்படும்.இந்த மதுபானங்கள்
கடைகளுக்கு அதிகாரிகளால் அனுப்பி
வைக்கப்படும். இந்த கம்பெனியிடமிருந்து பெற்று கடைக்கு அனுப்பும் வரை பாட்டில்
உடைந்து சேதம் ஏற்படும் என்பதால் அதிகாரிகள் இந்த இழப்பிடுகளை ஈடுசெய்ய இன்சூரன்ஸ்
செய்து வருகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


