சனி, 22 டிசம்பர், 2012

பார் பயங்கரம்


பார் பயங்கரம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் துவங்கி பத்தாவது ஆண்டினை நெருங்கிவரும் நிலையில் விற்பனையில் டாஸ்மாக்கடைகள் வசூல்சாதனைகள் படைத்துவருவதுபோன்று டாஸ்மாக் பார்கள் குற்றநடவடிக்கைகளில் சாதனைபடைத்து வருகின்றன.சமீபகாலமாக பார்கள் அனைத்தும் அழுக்கடைந்த,சுகாதாரமற்ற நோய்களை உற்பத்திசெய்யும் மையங்களாக மட்டுமின்றி திருட்டு மற்றும் கொலைகளத்திற்கான திட்டம்தீட்டும் இடமாகமட்டுமின்றி குற்றநடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் இடமாகவும் அமைந்துள்ளது.டாஸ்மாக் பார்களில் தொடர்ந்து கொலைகளும் கொள்ளைகளும் அரசியல் குண்டர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.


“பார்களில் நடக்கும் இந்த குற்றநடவடிக்கைகள் குறித்து காவல்துறையினரிடம் கேட்கும்பொழுது ஒவ்வொரு பார்களும் அந்த பகுதி அரசியல்வாதிகளின் கையில் இருப்பதால் தான் பெருமளவில் கொலை கொள்ளைகள் நடைபெறுகின்றன என கூறுகின்றனர்." நன்றி tlmes of india டிசம்பர்2,2012.

வியாழன், 29 நவம்பர், 2012

அடிமைத் தொழிலாளி


அடிமைத் தொழிலாளி


நன்றி பிபிசி

இந்தியா உள்ளிட்ட வறிய நாடுகளில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

உலகில் தற்போது 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக ஃப்ரீ த ஸ்லேவ்ஸ் அடிமை விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும், கர்ரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித சரித்திரத்தில் எந்த ஒரு நேரத்திலும் இருந்த அடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கையைவிட தற்போதைய உலகில் கூடுதலான அடிமைத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சித் தகவலாக வந்துள்ளது.

மிக வேகமான ஜனத்தொகை அதிகரிப்பு, ஏழ்மை, அரசாங்க ஊழல் போன்றவை காரணமாக பல நாடுகளில் அடிமைத் தொழிலாளிகள் இன்றளவும் இருந்துவரவே செய்கிறார்கள் ஃப்ரீ த ஸ்லேவ்ஸின் ஆராய்ச்சியாளர் கெவின் பேல்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

திங்கள், 12 நவம்பர், 2012

இலக்கு 2012


இலக்கு 2012

உலகில் வெற்றியை நோக்கி நடைபயிலும் ஒவ்வொருவரும் ஒருஇலக்கினை நிர்ணயித்து அதை முன்னிருத்தி செயல்பட்டாலே ஒழிய அந்த வெற்றியை இப்போட்டி உலகில் அடைவது கடினம். நமது டாஸ்மாக் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் எவ்வளவு மதுபான வகைகளை கம்பெனிகளிடமிருந்து பெறுவது விற்பனை செய்வது பற்றி பெரிய இலக்குடன் பயணித்து வருடந்தோறும் அதை அடைந்துவருகின்றது.



தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு, "சரக்கு' வழங்கும் வகையில், "டாஸ்மாக்' நிர்வாகம், 40 சதவீதம் கூடுதலாக "சரக்கு'களை, கடைகளுக்கு அனுப்பி வருகிறது. தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2003 நவம்பர் முதல், மதுபான விற்பனை, தமிழ்நாடு அரசு விற்பனை கழகமான, "டாஸ்மாக்' மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மது விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2003ல், 3,250 கோடியாக இருந்த மது விற்பனை, 2011 - 12ம் நிதி ஆண்டில், 20 ஆயிரத்து 180 கோடியாக உயர்ந்தது. நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டுக்கு, 23 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், .தி.மு.., அரசு பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில், மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

சங்கடம் தீர்க்குமா?சங்கங்கள்



சங்கடம் தீர்க்குமா?சங்கங்கள்
டாஸ்மாக்கில் மதுபானக் கடைக்கு மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்,பார் உதவியாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகமுன்னுரிமை அடிப்படையிலும் முன்வைப்புதொகைகட்டியும் எடுக்கின்றார்கள் என்று தெரிந்த பட்டதாரிகள் தங்கள்வீட்டு பெண்களின் நகைகளை அடமானம் வைத்து அரசு சார்ந்தபணி எப்படியும் நமக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என எண்ணி பணியில் சேர்ந்தனர்.சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பலர் மதுக்கடை என்பதால் பணியில் சேர தயங்கினர்.மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் ஆட்கள் எடுக்கப்பட்டு சென்னையில் பணியாற்ற செய்தனர். பெரிய எதிர்பார்ப்புடன் பணிக்கு சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் 16மணிநேரவேலைப் பளுவும்,திருட்டு நடந்தால் ஊழியரையே பலிசுமத்திய காரணங்களால் இரவுதங்கி 24மணி நேர பணியாளர்களாக உழைத்து விற்பனையை பன்மடங்கு உயர்த்தினர்.பார் உரிமம்தாரர்களின் மிரட்டல்,அதிகாரிகளின் லஞ்சம், மிகைநேரபணிபோன்றவைகளை கண்டு மிரண்ட ஊழியர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்து அதன் முலம் அரசுஊழியர்களின் சலுகைகளை பெறலாம் என எண்ணி வேலைகொடுத்த அம்மாபெயரிலேயே திருப்பூர் பகுதியில் சங்கம் ஆரம்பித்தனர்.சங்கம் ஆரம்பித்தவர்கள்மீது பொய் வழக்கு போட்டும்,தவறான குற்றச்சாட்டுகளை கூறியும் டாஸ்மாக்கிலிருந்து விலக்கினர்.இதில் பயந்த பணியாளர்கள் சங்கம் அமைக்கின்ற முடிவினை தவிர்த்தனர்.


வெள்ளி, 19 அக்டோபர், 2012

அரசு மதுவுக்கு இல்லை மறுப்பு .




அரசு மதுவுக்கு இல்லை மறுப்பு .


                                                                               உச்சநீதிமன்றம்.


சென்னையைச் சேர்ந்த, "டிராபிக்' ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தமிழக அரசே, "டாஸ்மாக்' என்ற பெயரில், மதுபான கடைகளைத் திறந்து, பொதுமக்களுக்கு, மதுபானங்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.அந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அவர், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின் மற்றும் மதன் லோகர், ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் ராஜா ராமன் ஆஜராகினர்.


வெள்ளி, 12 அக்டோபர், 2012

டாஸ்மாக் செய்திகள்: நன்றி தினமலர்

டாஸ்மாக் செய்திகள்: நன்றி தினமலர்: நன்றி தினமலர்   டாஸ்மாக் ஊழியர்களின் பரிதாப நிலை ... கண்டு கொள்ளுமா தமிழக அரசு ...   தமிழகம் எங்கும் சுமார் ...

புதன், 10 அக்டோபர், 2012

நன்றி தினமலர்

நன்றி தினமலர்
டாஸ்மாக் ஊழியர்களின் பரிதாப நிலை... கண்டு கொள்ளுமா தமிழக அரசு...
தமிழகம் எங்கும் சுமார் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் சுமார் 28 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு டாஸ்மாக் கடையில் இரு விற்பனையாளர்களும், ஒரு சூபர்வைசரும் உள்ளனர். சூபர்வைசர் டிகிரி படித்திருக்க வேண்டும். விற்பனையாளருக்கு 10ம் வகுப்பு கல்வி தகுதியே போதுமானதாகும்.

கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட டாஸ்மாக்கில் சூபர்வைசர்களுக்கு மாதம் ஒன்றுக்கு சம்பளம் ரூ.5 ஆயிரம் எனவும், விற்பனையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயித்திருந்தது. இந்த சம்பளத்தில் பி.எப்., இஎஸ்ஐ பிடித்தம் போக சூபர்வைசருக்கு சுமார் ரூ.4200ம், விற்பனையாளருக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் தான் கையில் கிடைக்குமாம்.