உயிர் எடுக்கும் உழைப்பு.
உலகமெங்கும் உழைப்பவர்கள் தன்னுடைய பணியில் கஷ்டங்கள் பல அடைந்தாலும் ஒரு சில துறையினர் தங்களின் உயிரையும் உழைக்கும் போது கொடுக்கவேண்டி உள்ளது. அந்த வரிசையில் சுரங்க தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், இராணுவ பணியாளர்கள், அணு தயாரிப்பு கூடங்களில் பணியாற்றுபவர்கள், தமிழகத்தின் மீனவர்கள் தற்பொழுது டாஸ்மாக் பணியாளர்களும் இந்த வரிசையில் சேர்ந்து உள்ளனர். தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு
செல்லும் பொழுது தனது மனைவியின் தாலியை கழட்டி வைத்துவிட்டு செல்வதாக கூறுபவர். ஏனெனில் கடல் சீற்றம் மட்டுமில்லாது அண்டைநாட்டு ராணுவ துப்பாக்கி குண்டுக்கும் பயந்தே பணியாற்ற வேண்டி உள்ளது.அதே போல்
அரசுபணி என்று நம்பி வேலையில் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் 9ஆண்டுகளாகியும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதோடு குறைந்த சம்பளத்துடனும்,குடித்தப்பின் மிருகமாகும் ஒரு சில குடிமகன்கள் செய்யும் பிரச்சனைகளில்உயிர் இழப்பை சந்திக்கின்றனர் அதே போன்று டாஸ்மாக் கடைகளில் திருட்டு ஏற்பட்டால் அதற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவதே இல்லை. பணியாளர்களேயே பொறுப்பேற்க செய்கின்றனர். இதனால் இரவு காவலர்களாக கடையிலேயே தங்கவேண்டிஉள்ளது. இரவில் கடையில் திருட முயற்சிக்கும் திருடர்களாலும், கடையில் ஏற்படும் தீ விபத்துகளிலும் பணியாளர்கள் மரணமடைக்கின்றனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் பலர் மதுவின் அடிமையாகி மரணத்தின் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர். வீட்டின் வறுமையை எண்ணி விற்பனைக்கு வரும் உடைந்த பாட்டில்களின் மீத சரக்குகளை குடித்துஉடலைக் கெடுத்துக்கொண்டு மரணத்தை நோக்கி செல்வது மட்டுமில்லாமல் டாஸ்மாக் பணத்தை வங்கியில் சென்று கட்டுக்கின்ற பொழுது வழிப்பறி கும்பல்களிடமும் கத்திகுத்து பெற்று மரணம் ஏய்ந்துக்கின்றனர்.சென்னையை போல் கடைக்கே வந்து வங்கிகள் விற்பனை தொகை பெற்று கொள்ளுவது போல் பிற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் டாஸ்மாக் நிர்வாகம் பணிநிரந்தரம், சம்பள உயர்வு போன்ற விசயத்தில் பாராமுகமாக இருப்பதுபோல் இவ் விசயத்திலும் இருந்து வருக்கின்றது.
பிப்ரவரி 28.2.2012
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டூ வீலரில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்தி, பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சாக்கோட்டை அருகே பெரியகோட்டை காந்திநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன், 38. இவர், பனம்பட்டியிலுள்ள "டாஸ்மாக்' கடையில் "சூப்பர்வைசராக' வேலை பார்க்கிறார். நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு, வசூலான பணம் 1 லட்சத்து 8 ஆயிரத்தை பையில் வைத்துக் கொண்டு கணேசன் தனியாக டூ வீலரில் வீட்டிற்கு சென்றார்.பனம்பட்டி- காந்திநகர் இடையே உள்ள பாலத்தை கடக்க முயன்ற அவரை, மூன்று பேர் வழிமறித்து கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்றனர். கணேசன் சத்தம் கேட்டு மர்ம கும்பல் பணத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடியது. காயமடைந்த அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)முத்துக்குமார் விசாரிக்கிறார்.
1 கருத்து:
keep it up by selvaraj supervisor kumbakonam
கருத்துரையிடுக