தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் சென்ற ஆண்டின் விற்பனை இலக்கினை அடைவதுடன் முப்பது சதவித விற்பனையை அதிகரிக்க செய்யவேண்டும் என டாஸ்மாக் மதுபான விற்பனை குறைவிற்கு காரணமான டாஸ்மாக் அதிகாரிகள் விற்பனையை அதிகரிக்கசெய்வதாக பல நாடங்களை நடந்திவருகின்றனர்.அதிகாரிகளின் தவறான நடத்தைகளான , மேற்பார்வையாளரின் அனுமதியின்றிசரக்கிற்கான தேவைபட்டியல் வழக்காமலேயே கம்பெனிகளிடம் பெரும் தொகை லஞ்சம் பெற்ற அதிகாரிகள் சரக்கினை கடைகளுக்கு வழங்கியது,சிறிய கடைகளுக்குள் சரக்குகளை மலை மாதிரி குவித்தும், கிராமக்கடை நகரக்கடை என பாகுபாடுயின்றி உயர்ரக மற்றும் ஒடாத சரக்குகளை அனுப்பியும், பிர் விற்பனையை தடைசெய்தும்,கடைகளை தங்களுக்கு வேண்டியவர்களின் பகுதிகளில் மாற்றியும் விற்பனை குறைவை ஏற்படுத்திவிட்டு தங்களின் தவறுகளை முடிமறைத்துஏற்கனவே ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியும் பணிநிரந்தரம் செய்ய படாமல் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஊழியர்களை விற்பனை இலக்கு என்றபெயரில் மன உழைச்சலுக்கு ஏற்படுத்துவதோடு விற்பனை இலக்கை அடையாத கடைகளின் பணியாளர்களை பணிநிக்கம் செய்து வருகின்றனர்.
விற்பனை அதிகரிக்க நிர்பந்தம்
டாஸ்மாக் கடை களில் அதிக அளவு விற்பனையை காட்ட ,அதிகாரிகளின் உத்தரவால் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். உதாரணமாக
விருதுநகர் மாவட்டத்தில் 202 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. நகரில் தினம் 20 முதல் 25 ,கிராம கடைகளில் 15 முதல் 20 "குவார்ட்டர்' பெட்டிகள் விற்பனையாகிறது. ஒரு பெட்டியில் 48 பாட்டில்கள் இருக்கும்.இதை அதிக மாக விற்பனை செய்து காட்ட, ஊழியர்களை உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். திங்கள் 25, செவ்வாய் 30 பெட்டிகள் என, தினம் ஒரு குறிபிட்ட எண்ணிக்கையை கூறி விற்பனை செய்ய கூறுகின்றனர்.
இதில், நிர்ணயித்த பாட்டில்கள் விற்பனை ஆகவில்லை என்றால், ஊழியர்களே தங்கள் சொந்த பணத்தை கொண்டு பாட்டில்களை வாங்க சொல்கின்றனர். அந்த பாட்டில்களை கடைக்குள் வைத்து கொண்டு, விற்பனையாகும் "பீர்' பாட்டில்களை கணக்கில் காட்டாமல், அந்தப் பணத்தை கொண்டு, குவார்ட்டர் பாட்டில்களை விற்பனை செய்தது போல் காட்டி கொள்ளலாம் என்கின்றனர். நிர்ணயித்ததை விட அதிகமாக விற்றால், அதை கணக்கில் காட்டாமல் அடுத்த நாள் கணக்கில் காட்டலாம் என்கின்றனர். இதனால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
"டாஸ்மாக' ஊழியர்கள் கூறுகையில், "பாட்டில்களை விற்பனை செய்ய தினம் ஒரு "டார்கெட்' வைக்கின்றனர். செய்யாவிட்டால் அதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பீர் பாட்டில் விற்ற பணத்தை கொண்டு "குவார்ட்டர்' பாட்டில்கள் விற்றது போல் காட்ட சொல்கின்றனர். இதனால், பீர் பாட்டில்கள் "ஸ்டாக்' இருந்தாலும், இல்லை என்றுதான் கூறுகிறோம். எங்களுக்கும் வேறு வழியில்லை,' என்றனர். டாஸ்மாக் நிர்வாகம், , மது விற்பனையை 30 சதவீதம் வரை அதிகரிக்குமாறு விற்பனையாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுகை டாஸ்மாக் கடைகளில் பீர் விற்க தடை?
·
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மதுபானக் கடை களில் பீர் விற்பனைக்கு தடைவிதித்துள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் பார் வசதியுடன் கூடிய 186 டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்குகிறது. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகிறது. புதுக்கோட்டை டவுன் பகுதியில் மட்டும் 22 கடைகள் உள்ளன. மாவட்டத்தில் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால், அனைத்து மதுபானக் கடைகளிலும் பீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. போதை குறைவு என்பதோடு மட்டுமின்றி, சூட்டை தணிக்கும் அருமருந்தாகவும் உள்ளதால், பீர் சாப்பிட மதுபான பிரியர்கள் மட்டுமின்றி, சாமானியர்களும் விரும்புகின்றனர். இதன்காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவையான பீர்கள் ஸ்டாக் வைத்து விற்பனை செய்யப்பட்டது.பீர் விற்பனை அதிகரிப்பால், குவாட்டர், ஆஃப் உள்ளிட்ட மதுபானங்களின் விற்பனை சற்று குறையத் துவங்கியது. இதனால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மதுபான விற்பனையின் மூலமான வருவாயும் குறைந்துள்ளது.உஷாரடைந்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், கடைகளில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள பீர் பாட்டில்களை விற்பனை செய்யவேண்டாம் என்றும், இதற்கு பதிலாக மதுபானங்களை விற்பனையை 30 சதவீதம் வரை அதிகரிக்கவேண்டும் என்றும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. மது விற்பனையை அதிகரிக்க தவறும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிர்ச்சியடைந்துள்ள விற்பனையாளர்கள் பீர் விற்பனை செய்வதை அறவே நிறுத்திவிட்டு, மதுபானம் விற்பனை செய்வதில் ஆர்வம் செலுத்துகின்றனர். அதேசமயம் கடைகளில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள பீர் பாட்டில்களை வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி கண்ணாடி பெட்டிக்குள் வைத்து, அதை வாடிக்கையாளர்களுக்கு விற்க மறுப்பதால் பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகிறது.
புதுக்கோட்டை புதிய பஸ்ஸ்டாண்ட் எதிர்ப்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் பீர் இருந்தும் விற்பனை செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஒருவர், விற்பனையாளரை தாக்க முயன்ற சம்பவம் நேற்று முன்தினம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து அந்த கடையில் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் அட்டை பெட்டிக்குள் அடைத்து மறைக்கப்பட்டது.தனியார் ஹோட்டல் நிர்வாகத்தினர் நடத்தும் பார்களில் பீர் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்..

மது விற்பனை குறைந்ததால் 8 சூப்பர்வைசர் சஸ்பெண்டு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வேலூரில் தற்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் குடிமகன்கள் பீர் குடிக்க டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டுகிறார்கள். கடந்த 5 நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பீர் தட்டுபாடு நிலவுகிறது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்த நிலைதான் உள்ளது. இதனால் ஒவ்வொரு கடையாக குடிமகன்கள் பீர் பாட்டில்களை தேடி அலைகிறார்கள்.
கோடை வெயில் தாக்கத்தை தணிக்க முடியாமல் குடிமகன்கள் திண்டாடி வருகிறார்கள். சென்னையில் இருந்து போதிய அளவு பீர் சப்ளை செய்யப்படாததே தட்டுப்பாடுக்கு காரணம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மது விற்பனை குறைந்துள்ளதாக மண்டல் முதுநிலை மேலாளர் துரை ரவிசந்திரன் மாவட்டத்தில் சாத்தனூர், போளூர், எஸ்.வி. நகரம், இலுப்பன் தாங்கல், ராஜன் தாங்கல், வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறைந்தது என்பதால் 8 டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த கடைகளுக்கு வேறு சூப்பர்வைசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிட்டு பார்த்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இச்சமயத்தில் தேர்தல் நேரம் என்பதால் மது விற்னை அதிகமாக இருந்தது. இதை வைத்து கொண்டு விற்பனை குறைந்ததாக கூறுகிறார்கள் என்றனர்.
தமிழகஅரசு இவ் விசயத்தில் தலையிட்டு உடன் பணியாளர் நலன் காக்கவேண்டும் என நடுநிலையாளர்களும், சங்களும் விரும்புகின்றனர்.தமிழகம் முழுவதும் நடைபெறும் அதிகாரிகளின் காட்டுமிராண்டி நடவடிக்கையின் ஒருசில நிகழ்வினை தந்துள்ளோம்.படித்து பரப்புவீர்களாக எனடாஸ்மாக் ஊழியர்களை “டாஸ்மாக் செய்திகள்” வேண்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக