வியாழன், 22 மார்ச், 2012

தண்ணீர் தினம்


பூமியின் பெரும்பகுதி நீரே.பூமி உயிர் கோளமாக இருப்பதும் நீரினாலே.புவிப் பரப்பில் சுமார் ஐந்தில் நான்கு பங்கு நீர் ஆகும்.மனிதனின் உடலும் பெரும்பங்கு 65% நீர் ஆகும். புவிப்பரப்பில் 1.4 ஆயிரம் மில்லியன் கன கிலோ மீட்டர் நீர் உள்ளது.நீர் நீர் என புவியே நீராக இருப்பினும் தூய நீரானது மொத்த நீரளவில் 3% மட்டுமே.அதனால் தான் அடுத்த ஒர் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீர் தேவையின் காரணமாகவே ஏற்படும் என அறிஞர்கள் கூறிகின்றனர்.இருந்த போதும் நமது காலத்திலும் பல நீர் நிலைகள் ஆக்கிரமிப்பில் கட்டிடங்களாவது தவிர்க்கவியலாமல் உள்ளது.உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் ஆண்டிற்கு 5மில்லியன் மக்கள் குடிநீர் மாசுபடுதலினால் இறப்பதாக கூறுகின்றது.
நீர் நிலைகள் குறைவதும்,குடிநீர் மாசுபடுவதும் நமது புவியின் ஆயுளை நாம் குறைத்து வருவது நிதர்சனமே.உதாரணமாக சிலப்பதிகார மதுரையின் நீர்நிலைகளையும் வளங்களையும் திரும்பபெற முயற்சி எடுக்காமல் மதுரையின் நிர் நிலைகளை குறைத்தும் மாசுபடுத்தி வைகை பொய்கையாக இல்லாமல் பொய் கை யாக மாற்றிவருகின்றோம்.இன்றைய இளைஞர்கள் நடிகர்களுக்கான ரசிகர்மன்றங்களிலும், அரசியல் தலைவர்களை ஏந்திப்பிடிக்கும் அரசியல்வாந்திகளாகவும்,தான் சார்ந்த மத சாதியின் பக்தர்களாகவும் தங்களின் காலங்களை கழிப்பதைவிட நீர்நிலைகளை காக்கக்கூடிய எண்ணிக்கையில் குறைவாக இருக்கக்கூடிய அமைப்பினில் தங்களை இனணந்து நாளைய சந்ததியினர் வளம் பெறவழிவகுக்கவேண்டும் என டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.

தண்ணீர் நமது உடலுக்கு  அரு மருந்தாகும்.


*தண்ணீர் குடி, எல்லாம் சரியாகிவிடும். இந்த வரிகளை கேட்காத வீடு இருக்காது. தண்ணீர் நம் வாழ்வோடு உள்ள ஒன்று. நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க இயலாது. தண்ணீர் நாம் குடிக்க, குளிக்க நமது அன்றாட தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய உதவுகிறது.


*
தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம்
.

*
அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உபபொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது
.

*
அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது
.

*
அதிக அளவில் வாந்தி எடுத்தாலும் வயிற்று போக்குப் ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும்
.

*
உடலும் இந்த மின்னணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு சரியாகிவிடும்
.

*
சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்தத்தில் நீரின் அளவைக் குறைத்து, சோடியம் அளவை சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது
.

*
உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.


மருந்தாகும் தண்ணீர்.1. இரண்டு தம்ளர் தண்ணீர் சாப்பிடும் முன் குடிக்கும் பொழுது செரிமானத்திற்கு உதவும்.2. ஒரு தம்ளர் தண்ணீர் தூங்கி எழுந்தவுடன் குடிக்கும் பொழுது உடல்உள்ளுறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.3. ஒரு தம்ளர் தண்ணீர் தூங்கும் முன் குடிக்கும் பொழுது இரவு மாரடைப்பை தவிர்க்கலாம்.4.ஒரு தம்ளர் தண்ணீர் குளித்தப்பின் குடிக்கும் பொழுது குறைந்த இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.


டாஸ்மாக் தளத்தில் தண்ணீர் தின சிறப்புக் கட்டுரை போட இருப்பதாக நண்பர்களிடம் கூறியவுடன் மேற்படி தண்ணீர் (மது) பற்றி இன்னும் என்ன எழுத உள்ளதாக கூறினர் என்னதான் என்று எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு மதுவிலும் பெரும் பங்கு தண்ணீர் தான் என்பது தெரிந்தும் நமது தளத்தில் தண்ணீர் தினத்தில் சிறப்பு செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வர் எனக் கூறி கட்டுரை சமர்ப்பிக்கின்றேன்.தண்ணீர் இயற்கையின் வரப்பிரசாதம் அதை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் நிலைகளை காத்து நமது நாளைய தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவோம் என்று இந்நாளில் சபதம் ஏற்போம். .ஷாஜஹான், திருமங்கலம்

கருத்துகள் இல்லை: