வெள்ளி, 23 மார்ச், 2012

பகத் சிங்


கிறிஸ்தவர்கள்  இயேசுபிரான்  சிந்திய ரத்தம்  மனிதர்களின் சகல பாவங்களையும்  திர்ப்பதற்காகவே  நடைப்பெற்றது  என கூறுவர். அதே போல் பகத்சிங்  மற்றும்  சுதந்திரத்திற்காக  உயிர்நீத்த  தியாகிகளின்  ரத்தம் நம் இந்தியர்கள்  அனைவருக்கும் போராட்டத்தின்  பாதையின்  நெறியினை முன்னோட்டமாக  அறிவித்ததாகும். ஆனால்   நமது  இளைஞர்கள்  டாடா வையும், பிர்லாவையும்,  அம்பானிகளையும் வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டு  வருகையில்  இளைஞர்களை  பெரும்பான்மையாக  கொண்ட டாஸ்மாக்  பணியாளர்கள்  நாம் பகத்சிங்கின்  நினைவு நாளில்  பகத்சிங்கை சகீத்(வீரமரணம்)  நமது  வழிகாட்டியாக  கொள்வோம்  என  சூழ் உரைப்போம். இந்நாளில்  மாவீரன்  பகத்சிங்  வரலாற்றின்  ஒரு சிறுபகுதியை நினைவுகூற  இக்கட்டுரையை  சமர்ப்பிக்கின்றேன்.


பகத்சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன்சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக  வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின்          ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.தனது 13வது அகவையில் பகத்சிங் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.


பகத் சிங் (Bhagat Singh, பிறப்பு: செப்டம்பர் 27, 1907–மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு.இந்தியாவின் பிரிட்டிஸ் ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத்சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய  பிரிட்டிஸ்க் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. 1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.



 1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் சிங்கம்  லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை, லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர். சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.

1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய     மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.  பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இக்காரணத்துக்காக  இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்).  உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூடஉறவினர்களிடம்  ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது. மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும்
சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.


இவ்வாறு  நாட்டிற்காக  உயிர் துறந்த  பகத்சிங்  மற்றும்  சுதந்திர தியாகிகளை இந்நாளில்  நினைவு கூறுவோமாக!  

  


 .ஷாஜஹான், திருமங்கலம் .                              

கருத்துகள் இல்லை: