டாஸ்மாக்
மதுக் கடைகளில்
பார் நடத்துவதில்
அதிகாரிகளின் உடந்தையுடன்
தனிநபர்கள் சில
தில்லுமுல்லுகளைச் செய்து
சுமார் ரூ.3,000
கோடி அளவுக்கு
தமிழக அரசுக்கு
வருவாய் இழப்பை
ஏற்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து
அரசு உறுதியாக
நடவடிக்கை எடுத்தால்,
இத்துடன் மேலும்
சில ஆயிரம்
கோடி வருமானமும்
கிடைக்கும்.உரிமம்
இல்லாமல் நடக்கும்
சுமார் 4000
பார்களால் இந்த
வருவாய் இழப்பு
ஏற்படுகிறது. மற்றும் அரசியல் தலையிட்டின்றிபார்
ஏலம் விடுவதன் முலம் அரசும் குடிமகன்
களுக்கும் மிகுந்த லாபம் பெறலாம்.தமிழக அரசு இவ்விசயத்தில்
தலையிட்டு பார் ஏலவிசயத்தில் சிண்டிகேட்
அமைப்பதை தடுக்க டாஸ்மாக் செய்திகள்
தளம் வேண்டுகின்றது.
சிண்டிகேட்டுகள் ஆதிக்கம்.
மதுக் கடைகளை
ஏல முறையில்
தனி நபர்களுக்கு
ஏலம் விட்டபோது,
அந்தப் பகுதியைச்
சேர்ந்த சிலர்
கூட்டு (சிண்டிகேட்)
சேர்ந்து கொண்டு,
குறிப்பிட்ட தொகைக்கு
மேல் ஏலம்
கேட்காமல் இருந்தனர்.
இதனால் குறைவான
தொகைக்கே கடைகள்
ஏலம் போயின.
அரசுக்கு வருவாய்
இழப்பு ஏற்பட்டது.
ஆனால் மதுபான
வியாபாரிகள் அபரிமிதமான
லாபம் சம்பாதித்தனர்.