மதம்
பாதிரியையும் சிறுமியையும்
கருக்கி உருகுலைத்து
மண்ணாக்கியது
மதம்
கருகோளாறு என கலைக்க
முயன்ற மருத்துவச்சியயே
மாய்த்து விட்டது
மதம்
மலாலாவை மதிகெட்டு
மண்ணில் இருந்து
மறைக்க நினைக்குது
மதம்
காட்டு விலங்குகளில்
பெண் யானைக்கு என்றும்
பிடிப்பதில்லையாம்
மதம்
நாட்டிலோ மனிதவெடிகுண்டாகுது
பெண் சாமியாரினியும் குண்டுவழக்கில்
காரணமோ
மதம்
இது குறித்து வினவினால்
எனக்கும் அவர்களுக்கும்
சம்மந்தமில்லை என்கின்றது
மதம்
உலகம் நல் ஒழுக்கமாகவும்
ஒற்றுமையாகவும் இருக்க
தேவை இல்லை என்கின்றேன்
மதம்.
வ.ஷாஜஹான், மதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக