வெள்ளி, 11 ஜனவரி, 2013

உழைக்கும் கரங்கள்



உழைக்கும் கரங்கள்
மனிதனின் கரங்கள் உழைப்பினை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்தது.தற்பொழுது ஒர் ஆய்வின் முடிவில் மனிதனின் கரங்கள் தங்களுக்கிடையே அல்லது மிருகங்களுடன் சண்டையிட்டு
கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மனிதன் முதலில் விவசாயம் செய்ததிலும்,இரண்டு கற்களை உரசி தீ யை உருவாக்கியதிலுமே நாகரீகத்தினை நோக்கி நடைபயிற்றான். இதில் கரங்களின் பங்கு அதிகம். பேருந்து பயணத்தில் " கரம்,சிரம்,புறம் நீட்டாதீர் " என அறிவிப்பினை பார்த்தீருப்பீர்.தற்பொழுது அரசு அலுவலகங்களில் "கரம் புறம் நீட்டினால் சிரம் குனிவு ஏற்படும்" என எழுதவேண்டிய நிலையில் உள்ளது. மனிதனின் கரங்கள் இன்று உழைப்பினை நம்புவதை விட லஞ்சவேட்டைக்கே பயன்படுகின்றது.


 ஆய்வு அறிக்கை.

'மனிதக் கையின் வளர்ச்சி : சண்டையை இலக்காகக் கொண்டது'


மனிதனின் கையானது கருவிகளை செய்து பயன்படுத்துவதை இலக்காக கொண்டு மாத்திரமன்றி கைகளை பொத்திப் பிடித்து சண்டையிடுவதை அடிப்படையாகக் கொண்டும் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகின்றது.

இயற்கையின் தேர்வானது கைகளை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்திருக்கிறது என்றும், அத்துடன் முன்னர் நினைத்ததை விட மனித வளர்ச்சியில் கைகளின் ஆக்ரோசம் பெரும்பங்கை ஆற்றியிருகிறது என்றும் அமெரிக்காவின் பரிணாம வளர்ச்சியியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

கைகளின் அமைப்பானது சண்டையிடுவதை இலகுவாக்கியுள்ளது.

எமது மிகவும் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்குகளை விட நமது கைகள் சண்டையிடுவதற்கு ஏற்ற வகையில் வளர்ச்சி கண்டுள்ளன.

விஞ்ஞானிகள் தமது இந்த புதிய தத்துவத்தை தற்காப்புக் கலை கலைஞர்களிடம் பரிசோதித்துள்ளனர்.

ஒருபுறம் கரங்களின் செயல்பாட்டால் பணங்களை அள்ளி குவித்தாலும் இந்தியாவில் இன்றும் மனிதக்கழிவுகளை தங்களது கரங்களாலேயே அள்ளிச்சுத்தம்  செய்யும்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளனர்.சமீபத்திய ஒரு ஆய்வின் படி சென்னையில் மட்டும் இந்த கழிவுகளை அகற்ற பாதாளச்சாக்கடைக்குள் இறங்கும் தொழிலாளிகளில் நாள் ஒன்றுக்கு ஒருவர்வீதம் இறந்துவருவதாக கூறுகின்றது.அது மட்டுமில்லாது கழிவுநீர் வாய்க்காலில் உடைந்த பாட்டில்களை அப்படியே போட்டுவிடுவதினால் இதனை சுத்தம் செய்ய இறங்கும் தொழிலாளியின் கால்களிலும் கரங்களிலும் காயங்கள் ஏற்படுகின்றன.இதன் மூலம் நோய்தொற்றுகள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் ஏய்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.இந்தக் கழிவு அகற்றும் பணியாளர்கள் பலர் மாநகராட்சியில் தினக்கூலியாகவோ அல்லது ஆட்கள்  பற்றாக்குறைக்கு சக பணியாளரால் அழைத்துவந்து பணியாற்றக்கூடியவர்களாக உள்ளனர்.இவர்களுக்கு விபத்து ஏற்படும்பட்சத்தில் இழப்பீடுகளை அரசு முறைப்படி வழங்குவதில்லை. உழைக்கும் கரங்களின் எண்ணிக்கையை  கொண்டே ஒரு நாட்டு உயர்வின் படித்தரங்கள் அமையும்.இந்தியா வளம் பெற உழைக்கும் கரங்களை உயர்த்திப்பிடிப்போம் என சபதமேற்போம்!



.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை..


கருத்துகள் இல்லை: