ரொட்டி முந்தியா? ‘புட்டி’ முந்தியா?
மட்டகரமான சரக்குகளை மண்டி விட்டு, நடுரோட்டில் மட்டையாகிக் கிடக்கிற குடிகாரப்
பக்கிகள், நிமிர்ந்து உட்கார்ந்து காலரை நிமிர்த்தி விட்டுக் கொள்ளும் படியான தகவல் இது.
மனிதனை மதி மயங்கச் செய்கிற லாகிரி வஸ்துவான மது, ஏதோ இன்று, நேற்றைய கண்டுபிடிப்பல்ல.
ஆதி மூதாதையர் காலம் தொட்டு, மனித இனத் தின் மிக நீ...ண்ட வரலாற்றுப் பயணத்தில், நிழல்
போல அதுவும் இணைந்தே நம்முடன் நடந்து வந்து கொண்டிருக்கிறது. ‘கோழி முந்தியா; முட்டை முந்தியா’ என்பது குழப்பவாதிகள் காலம், காலமாக போட்டுக்
கொண்டிருக்கிற விடுகதை. ஆனால், மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்டத் துக்குப்
போய் விட்டார்கள். அவர்களது லேட்டஸ்ட் ஆய்வுப்படி, பூமியில் தானியங்களைக் கொண்டு மனித
இனம் உணவுப்பொருட்களை தயாரிப்பதற்கு முன்னதாகவே,
‘ஒரு குவார்ட்டர் தயார் பண்ணிக் கொடு மாமு’ என்று ‘ஆர்டர்’ கொடுக்கிற லெவலுக்கு உச்சக்கட்ட
நாகரீகத்தில் உயர்ந்து நின்றி ருக்கிறார்கள் என (திட்டவட்டமாகவே) தெரியவந்திருக்கிறது.