பாரதத்தில் நமது தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவருவது என்பது சாத்தியமற்றது என்பதும் உலகில் எங்கும் மதுவிலக்கு உண்மையில் இல்லை என்பதும் நாளும் அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தியாக இருந்தாலும் நம்மில் சிலர் நடைமுறைசாத்தியமற்ற மதுவிலக்கினை கொண்டுவர விரும்பி அரசினை நிர்பந்திப்பதற்காக நீதிமன்றம் சென்று சாலைவிபத்திற்கு சாலையோர டாஸ்மாக்கே காரணமென சாலையோர டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்ற தீர்ப்பினை பெற்றுள்ளனர். ‘‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அகற்றவேண்டும்‘‘ என்று தீர்ப்பு வெளியானது. நீதிமன்ற தீர்ப்பீனை விமர்சிப்பது நமது நோக்கம் அல்ல.ஆனால் தமிழகத்தின் நகர மற்றும் கிராமங்களின் கட்டஅமைப்பு குடியிருப்பு ,வியாபார பகுதி,சாலையோர ஒதுக்குபுறப்பகுதி என உள்ளது.இதில் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகள் வியாபார மற்றும் சாலையோர ஒதுக்குபுறப்பகுதி களில் இருந்து வந்தது.. தற்பொழுது இந்த டாஸ்மாக் கடைகள் நகரங்களின் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்து வருகின்றது.இதனால் சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பல இடங்களில் இனிதே இடமாற்றம் நடைபெற்றுவருகின்றது. தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள 504 டாஸ்மாக் மதுபான கடைகளில் 400 மேற்பட்ட கடைகள் வேறு இடங்களில் திறக்கப்பட்டது. டாஸ்மாக் பார்களை எடுத்து நடத்தும் ஆளும்கட்சியினர் எப்படியும் கடைகளை அடைக்காமல் பார்த்து குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர். நாளடைவில் டாஸ்மாக் கடையானது குடியிருப்பு பகுதிகளிலும் சர்வசாதாரணமாக இனி அமைக்கப்படும்.தமிழக மக்களும் அதற்காக தங்களை மாற்றிபழகிகொள்வர்.இந்த நிகழ்வானது இன்னும் டாஸ்மாக்கிற்கும் பொதுமக்களுக்குமான நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி அதிகாலையில் உழைக்க செல்லும்முன்பே டாஸ்மாக் கடைக்கு வந்து வியாபாரத்தினை அதிகப்படுத்துவர்.
விபத்தும்
டாஸ்மாக்கும்
வாகன ஓட்டுநர்கள் சாலையோர டாஸ்மாக்கடைகளால் ஈர்க்கப்பட்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் தான் பெரும்பாலும் விபத்துகள் நடைபெறுவதாக மதுவிலக்கு பிரச்சாரர்கள் கூறுகின்றனர்.ஆனால் உண்மையில் பாரதத்தில் வாகன ஓட்டுநர்கள் பலர் ஓரளவுமது மற்றும் மாதுகளின் வாடையோடு இருந்தால் தான் வாகனமே தெளிவாக ஓட்டுகின்ற நிலைமைக்கு அரசுகளானது சாலைகளை பழுதுடனும் சாலைவிதிகளை சரிவரகடைபிடிக்காமலும், தொடர் இடைவெளியற்ற பயணம் என வாகன ஓட்டுநர்களை வேலைபளுவில் வைத்த காரணங்களால் வண்டி ஏறினாலும் மது வண்டியை விட்டு இறங்கினாலும் மதுவென வாகன ஓட்டுநர்கள் தங்களை மாற்றியுள்ளனர்.மதுவுடனே பயணிக்கும் விமானத்தில் விமானிகள் குடித்துவிட்டு விபத்தினை ஏற்படுத்துகின்றார்களா? சாலையோரங்களில் மதுகிடைக்க வில்லையென்றால் மதுஅடிமை யான வாகன ஓட்டுநர்கள் எங்குகிடைக்குமோ அங்கு சென்று குடிக்கமாட்டார்களா? அல்லது வாங்கி இருப்பு வைத்துகொள்ளமாட்டார்களா? தடை செய்தால் மதுவினை முழுமைக்கும் தடை செய்ய வேண்டும்.இல்லை யென்றால் தற்பொழுது உள்ள சட்டங்களிலேயே பள்ளிக்கூடம்,வழிப்பாட்டுதளம் ஆகிய இடங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் அமைக்காமல் இருக்க வழிவகைஉள்ளது.இதுவே போதுமானதாகும். டாஸ்மாக் இல்லாத பல கிராமங்களில் பெட்டிக்கடைகளே டாஸ்மாக் கடைகளை போன்று செயல்படுகின்றன.அவ்வழியை பின்பற்றி சாலையோர மோட்டல்களே இனி மறைமுக டாஸ்மாக் கடைகளாக செயல்பட போவது திண்ணம்.
மது ஒழிப்புதான் எப்படி?
பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை என்றாலும் மது விற்பனையை அரசுகட்டுக்குள் வைக்க சில அறிவுரைகளாக டாஸ்மாக் செய்திகள் தளமும்,அறிவுசார் மக்களும் அரசினை வேண்டுவது இது தான், மதுவிற்பனையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுப்பதினை தவிர்த்திட மக்கள் ஒன்றுதிரள வேண்டும்.தமிழகத்தில் புதிய மதுபான ஆலைகளோ,புதிய டாஸ்மாக் கடைகளோ,,கிளப்கள் என்ற பெயரிலும் தனியார் ஓட்டல்களிலும் மதுவிற்பனைகளை புதிதாக துவங்குவதற்கு அரசினை அனுமதிக்க விடக்கூடாது.டாஸ்மாக் கடைகளை விற்பனை கூடமாக மட்டும் கொண்டு பார்களை இழுத்து மூடவேண்டும்.பார்களினால் தான் தமிழகத்தில் பல குற்ற நடவடிக்கைகள் பெருகுகின்றன.அதே நேரத்தில்,மக்களும் மதுகம்பெனிகளுக்கு சம்பந்தமில்லாத அரசியல்வாதிகளை தேர்தலில் தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும்.
டாஸ்மாக்
ஊழியர்கள் நிலை.
தேசிய நெடுஞ்சாலைகளில் அடைக்கப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது எனவும் புதிதாக இடமாற்றி கடையினை அமைத்தாலே சம்பளம் எனவும் ஒப்பந்த ஊழியர்கள் தான் நீங்கள் எனவே புதிய கடையினை அமைக்கும் வழியினை பாருங்கள் என மாவட்ட மேலாளர்கள் சொல்லிவரும் நிலையில் அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகமானது உடன் தலையிட்டு கடந்த 10 ஆண்டுகளாய் டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொடுத்து வரும் இந்த சொற்ப சம்பளமும் வழங்கமறுத்தால் அவர்களால் இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்தி உயிர்வாழ்வது மிகவும் பரிதாபத்திற்குரியதாகிவிடும்டாஸ்மாக் ஊழியர்கள் இன்று இடப்புரோக்கர்களையும்,வாடகைக்கு என்ற போர்டுகளை தேடி அழைந்து டாஸ்மாக் கடைகளுக்கு இடம்பிடித்துவருகின்றனர்..டாஸ்மாக் நிர்வாகமே விளம்பரம் மூலம் இடங்களை வாடகைக்கு பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விற்பனை
குறைவு.
டாஸ்மாக் விற்பனையில் 100 கோடிவரை சரிவு என்ற செய்தி மதுவிலக்கு ஆதரவாளர்கள் பரவாயில்லை இந்த வழக்கு நடவடிக்கையால் குடிமகன் கள் ஓரளவேனும் குடியை நிறுத்தியிருப்பதாக பெருமை கொண்டால் அது உண்மையில் ஏமாற்றம் தான்.ஏனெனில் இந்த விற்பனை சரிவானது பக்கத்து மாநில மதுவிற்பனையகங்களுக்கும்,தமிழகத்தில் உள்ள கிளப் மற்றும் ஹோட்டல்களும்,கஞ்சா மற்றும் பான்பராக் போன்றவைகளின் விற்பனை அதிகரிப்பின் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது என்பது தான் உண்மை .சாலை வாகன ஓட்டிகுடிமகன்கள் போதை வஸ்துவினை விடபோவதுமில்லை.504 கடைகளில் 100 கடைகள் மட்டுமே பிரச்சனை.மீண்டும் மக்கள் வசிப்பிடங்களில் உருவெடுத்துள்ள 400 கடைகளால் ஏற்படும் பிரச்சனைகளை தமிழகம் கூடிய விரைவில் காண நேரிடும்.அடுத்ததாக மாநில நெடுஞ்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய 2500 கடைகளும் எப்படியும் மக்கள் வசிப்பிடம் நோக்கி வரும்முன் அது தற்போது உள்ள நிலையிலேயே செயல்படுவது தான் நாட்டிற்கு நல்லது. நமது தமிழக குடிமக்களை ஊர்களுக்கு வெளியே விரட்டிய காலம்போய் இனி வீட்டருகேயே குடிக்க செய்வதை உடன் நிறுத்தவேண்டும். அதற்கு சாலையோர டாஸ்மாக் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக