
மதுபானம் விற்பது நம்
சமூகத்தில் ஓர் இழிவான வேலை. ஆனாலும், அந்த வேலையில் சேர முண்டியடித்தது பட்டம்
படித்த இளைஞர் கூட்டம். அரசு வேலை என்றால் சும்மாவா? ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
முயன்றனர். 36 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. மேற்பார்வையாளர், விற்பனையாளர்,
விற்பனை உதவியாளர் என்ற பணிகள் தரப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும்
வருமானம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடியைத்
தாண்டியது. இந்த ஆண்டிற்கான இலக்கு 25 ஆயிரம் கோடி. ‘கவர்மென்ட்டே எங்களை நம்பித்தான்
இருக்கு’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டாலும், இவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள்
ஏராளம்.