திங்கள், 3 ஜூன், 2013

மதுபான ஆலை கொள்ளை


தனியார் மதுவிற்பனையின் போதும் சரி தற்பொழுது டாஸ்மாக் மதுவிற்பனையின் போதும் நமது மெகா குடிகாரர்கள் தவிர்த்து அனைவரும் அறிந்த சரக்கு என்றால் எம்.சி பிராந்தி,ஓல்ட் மங் ரம் இது போன்ற குறிப்பிட்ட சில வகை மதுவகைகளும் சில உயர்தர குடிகார அன்பர்களுக்கு ஆர்.சி, விண்டேஜ் போன்ற சரக்குகளுமே தெரியும்.இன்னும் சொல்ல போனால் 2003 டாஸ்மாக் துவங்கும் முன்பு வரை நமது தமிழகத்தில் மது தயாரிப்பு ஆலைகளானது ஐந்து மட்டுமே.இவைகளின் தயாரிப்பே பன்னெடுங்காலமாக நமது மதுபானப்பிரியர்கள் விரும்பிபருகி வந்தனர்.அந்த ஐந்து கம்பெனிகள் விபரம்.
1.
பாலாஜி டிஸ்டில்லர்ஸ்.
2.
எம்.பி.டிஸ்டில்லர்ஸ்.
3.
மோகன் டிஸ்டில்லர்ஸ்.
4.
சிவா டிஸ்டில்லர்ஸ்.
5.
சதன் அக்ரிபுரேன் டிஸ்டில்லர்ஸ்


(
மி)டாஸ் மாக் வருகை.


இந்த ஐந்து கம்பெனிகள் மட்டும் கோலேச்சி வந்த தமிழக மதுவிற்பனையில் 2003 துவக்கத்தில் மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லர்ஸ் என்ற அன்றைய ஆளும் கட்சி சார்பான சிலர் மூலம் ஆரம்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த கம்பெனி சார்ந்த மதுவிற்பனை சரிவர தனியார் மதுவிற்பனைகூடங்கள் செய்யாத காரணத்தால் தான் கோபம் அடைந்த கம்பெனியினரின் சிபாரிசு தான் அன்றைய ஆளும் கட்சி அரசே மதுபான விற்பனையை டாஸ்மாக் பெயரில் ஆரம்பித்து நடத்தியதாக அந்த கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகள் கூறுவது உண்டு. சென்ற அதிமுக ஆட்சியில் ஒரு கம்பெனி மட்டும் அறிமுகப்படுத்தி அதன் விற்பனை பன்மடங்காக உயர்த்தினர்.இந்த காலகட்டத்தில் தான் மதுபான பிரியர்கள் விரும்பிய சரக்கு கொடுத்து வந்த நிலைமாறி விற்பனையாளர்கள் என்ன சரக்கு கொடுப்பார்களோ அந்த சரக்கினை குடிக்கும்நிலைக்கு தள்ளப்பட்டனர்.இப்போது புரிந்ததா? அரசிற்கு வருமானம் என்றெல்லாம் மதுவிற்பனையை அரசு கையில் எடுக்கவில்லை.தங்கள் கட்சியினர் வருமானத்திற்கே முன்னுரிமை. அதற்கு பின்பு ஆட்சிக்கு வந்த திமுக வினர் தங்கள் பங்காக குடிமகனின் தாகசாந்தியினை மேலும் குறைக்க சிறந்த பணியாக புதிதாக ஐந்து கம்பெனியினை துவங்கி தமிழக மதுபிரியர்களை மகிழ்ச்சி கடலில் திக்குமுக்கு ஆடச்செய்தனர். சென்ற ஆட்சியின் சாதனையில் கூட இதனை முதலாவதாக சேர்க்கலாம்.இதற்கு பின்பு கேட்கவா வேண்டும் விற்பனையாளர்கள் கொடுக்கும் சரக்கினை  பெற்று செல்ல குடியன்பர்கள் பழகியே போனார்கள்.ஒருகட்சி மதுவிலக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தியவுடன் இனி புதிதாக டாஸ்மாக் கடைகள் துவங்கமாட்டோம் என கூறிய முந்தைய அரசு துவங்கிய புதிய கம்பெனிகள்

புதிய கம்பெனிகள் விபரம்.

1.
எஸ்.என்.ஜே டிஸ்டில்லர்ஸ்
2.எலைட் டிஸ்டில்லர்ஸ்.
3.
கால்ஸ் டிஸ்டில்லர்ஸ்.
4.
கோல்டன் வாட்ஸ்.
இது தவிர்ந்து இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் என்ற கம்பெனியும் தன் பங்கிற்கு புதியதாய் அனுமதி பெற்று குடிமகன் களுக்கு புதிய சரக்கினை அள்ளி வழங்கிவருகின்றது. இதில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகம்பெனியை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.இது தவிர்த்து ப்ருவரீஸ் அதாவது பீர் தயாரிக்கும் கம்பெனியும், வைனரி என்று ஒயின் தயாரிக்கும் கம்பெனியும் பல சென்ற ஆட்சியில் புதிதாக வந்துள்ளது.தற்போதைய அம்மா அரசும் புதிதாக மதுஆலைகளுக்கு  அனுமதி கொடுக்க உள்ளதாக தகவல் வருகின்றன. சென்ற ஆட்சியில் அனுமதி பெற்ற மதுபான ஆலைகளின் உரிமையாளர்கள் பெரும்பாலானோர் மத்திய மாநில அரசின் அப்போதைய அமைச்சர்கள் என்ற தகவலும் பலர் அறிந்து இருப்பர்.சென்ற ஆட்சியும், தற்போதைய ஆட்சியினரும்,அதிகாரிகளும் ஊழலில் கொள்ளை லாபம் அடித்து ஊழலில் போட்டியிட்டு வருகின்றனவா?ஒரு சில புதுவகை மது பிராண்ட்  அறிமுகத்திற்கே பல லட்சங்கள் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்  லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி கிடைக்கும் என்றால் மதுபான ஆலைகளுக்கே அனுமதி கொடுத்த வரையில் சென்ற ஆட்சியில் அடித்த கொள்ளை தான் எவ்வளவு? என்பதனை அறிந்தால் தலை சுற்றுகின்றது.

மத்திய தணிக்கைதுறை தகவல்.

இந்தியாவில் தயாராகும்,அயல்நாட்டு மது உற்பத்தி ஆலைகளுக்கான,புதிய உரிமங்களுக்கான விண்ணப்பம்,எந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட செயல்கள் மூலமாகவும் இதுவரை பெறப்படவில்லை.ஏலம் போன்ற நடைமுறைகளும்
செயல்படுத்தப்படாததால் உரிமம் வழங்குவதில், வெளிப்படைதன்மை இல்லை என்றும்,தணிக்கைத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.நிறுவனங்கள் உற்பத்தி அளவை விரிவுபடுத்த,திருப்பித்தரப்படாத வைப்பு நிதியாக ,12 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.மதுஆலை கம்பெனிகள் அனுமதிக்கடிதம் பெற 20 லட்சம் ரூபாய சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், விற்பனைக்கட்டணம் வசூலிக்காததால் 1.30 கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை சுட்டிகாட்டியுள்ளது. ஊழலின் பிதாமகன்களான மத்திய அரசே மதுபான ஆலைகள் உரிமம் வழங்கியதில் ஊழல் இருப்பதாக கூறினால் அது பற்றி தமிழக அரசு எதுவும் வாய்திறக்காமல் இருப்பது இன்னும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

புதிய மதுபான ஆலைகள்

தமிழகத்தில் இருக்கும் மதுபானஆலைகள் போதாதென்று இன்னும் புதியதாக மதுபானஆலைகள் துவங்க உள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.தமிழக மக்கள் மதுவிற்கு எதிராக போராடி வருகையில் அரசும் பான் குட்கா போன்ற போதைவஸ்துகளை தடை செய்து இருக்கும் நிலையில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கினால் தமிழக அரசினை பற்றிய நல்லெண்ணங்கள் மாறி வருமானத்தினை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரசு செயல்படுவதாக மக்கள் எண்ணக்கூடும்.அத்துடன் சென்ற ஆட்சியில் துவங்கிய மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கியதில் உள்ள ஊழல்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவேண்டும்.அத்துடன் தற்பொழுது செயல்படும் மதுபான ஆலைகள் அனைத்தும் நல்ல முறையில் பாராமரிக்கப்படுகின்றனவா? என்பதனையும் ஆய்வு செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை: