கடந்தகாலங்களை நோக்கும் நமக்கு மனிதனின் ஆதி மரபியல் குணங்களிலேயே
வானில்பறப்பது என்பது அமைத்துள்ளதாகவே தெரியவருகிறது. ரைட் சகோதரர்கள் விமானத்தினை
கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நமது சங்க இலக்கியநூல்களிலும்,ராமாயன மகாபாரத இதிகாசங்களிலும்விமான
பயன்பாடு இருப்பதாக காண்கின்றோம். மேற்கு நாடுகளில் ஏன்ஜல்ஸ் என பறக்கும் தேவதைகள்
கதைகளும் அரபுநாடுகளில் குதிரைக்கு இறக்கை முளைக்க செய்து விண்னுலக பயணம் செய்தாக
வரும் நிகழ்வுகளும் மனிதன் பறவைதனை போன்று உல்லாசமாக எல்லையே இல்லாமல் பறக்க ஆசைப்பட்டதன்
விளைவினால் விமானபயணத்தினை இன்று அனுபவித்து வருகின்றான். பயணங்களில் ஏற்படும்
விபத்துகளில் மற்ற போக்குவரத்துகளோடு ஓப்பிடுகையில் விமான பயணத்தின் கி.மி
கணக்குகளின் அடிப்படையில் பார்கையில் விபத்துகளானது மிகக்குறைவு.
ஆனாலும்
சிலநேரங்களில் ஏற்படும் விபத்துகளில் பல இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது.தற்பொழுது
மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையினை போன்று பலவிமானங்களின் நிலை என்னவென்று கூட
தெரியாமல் முடிந்தும் இருக்கின்றது.உலகம் சந்தித்த விமானவிபத்துக்களை டாஸ்மாக்
செய்திகள் தளமானது “டாப் 10 விமானவிபத்துக்கள்” எனற தலைப்பில் வரிசைப்படுத்தியுள்ளோம் .