சனி, 24 மே, 2014

டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளதா?




தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே எடுத்து நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த நிதியாண்டில், "டாஸ்மாக்' மூலம் கிடைக்க வேண்டிய விற்பனை வருவாய், 1,400 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது. வருவாயைப் பெருக்க, மாவட்ட ஆட்சியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும்  தமிழக அரசு ரகசியமாக  உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அப்படியானல் டாஸ்மாக் விற்பனை உண்மையில் குறைந்துள்ளதா? என்பதனை அறியவே இக்கட்டுரை. தமிழகத்தில், 6,830 டாஸ்மாக் கடைகள் உள்ளன.. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான், தமிழகத்தில் அரசின் இலவச திட்டங்களை செயல்படுத்த பெரும்பாலும் பயன்படுகின்றன. 2003ல் மது விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசு எடுத்தபொழுது 3000கோடியாக அதன் விற்பனை இருந்தது. 2013ல் அதன் விற்பனை 22 ஆயிரம் கோடிரூபாயில் இருகின்றது. வருடந்தோறும் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு ஒன்றினை நிர்ணயம் செய்து அதனை நோக்கி ஊழியர்களை விரட்டுகின்றது.

அந்த அடிப்படையில் கடந்த நிதியாண்டில், 23,400 கோடி ரூபாய் மதுபான விற்பனை வருவாய், இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  ஆனால், 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கே, வருவாய் கிடைத்துள்ளது. இவர்களின் இலக்கினை விட 1,400 கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது, உடன் டாஸ்மாக் நிர்வாகம் தாங்கள் எதிர்பார்த்த இலக்கினை அடையாதத்திற்கான காரணங்களை ஆராயவில்லை.

காரணங்களை டாஸ்மாக் செய்திகள் தளம் ஆராய்ந்ததில்

1.தமிழகம் முழுவதுமே சென்ற ஆண்டு மிகுந்த வறட்சியில் இருந்ததால் அனைத்து வியாபாரங்களும் சொல்லி கொள்ள தக்கவகையில் இலாபத்தினை கொடுக்கவில்லை.அந்த பாதிப்பு டாஸ்மாக்கில் விற்பனை இலக்கில்                                      நடந்துள்ளது.

2.சென்ற திமுக ஆட்சியில் கிளப்கள் என்ற பெயரில் தனியார் பார்களை மதுபானம் விற்க பெரிய தொகைகளை லட்சமாக பெற்று அனுமதித்தது. தொடர்ந்து வந்த அதிமுக அரசும் கிளப்களுக்கு தடைவிதிக்காமல் கிளப்களை வளர்த்தது. இந்த கிளப்களில் பாண்டிசேரி, மிலிட்டரி சரக்குகள் பரிமாறப்படுவதாலும் இலக்கினை டாஸ்மாக் அடைய முடியாததற்கு இதுவும்  ஒருகாரணமாகும்.

3.பார்களை நடத்தும் அரசியல்வாதிகள் தலையீடுகளால் பாண்டிச்சேரி, மிலிட்டரி மற்றும் போலி சரக்குகள் 24மணிநேர கடைகள் என பகுதிகள் தோறும் இருக்கும் கடைகளால் இலக்கினை டாஸ்மாக் அடைய முடியாததற்கான மற்றும் ஒருகாரணமாகும்.டாஸ்மாக் விற்பனையை குறைக்க ஒரே வழி டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைப்பதுதான் என்று டாஸ்மாக் செய்திகள் தளம் பலஆண்டுகளாக கூறிவருகின்றது. எப்படி என்கின்றீர்களா? ஆம் டாஸ்மாக் விற்பனையை தனியார்களிடம் ஒப்படைத்தால் 80 சதவீதம் போலி சரக்குகளையும் 20 சதவிதம் அரசு சரக்குகளையும்  விற்பனைக்கு காட்டி விற்பனையை குறைத்துவிடுவர். மது எதிர்ப்பாளர்களும் சந்தோசமடையலாம்.

4.டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக விற்பனையை (3000 கோடியிலிருந்து 22000 கோடிக்கு) பன்மடங்கு அதிகரிக்கச் செய்தும்  இன்றுவரை பணிநிரந்தம் செய்யாதநிலையில் சோர்வுற்று இருந்துவருகின்ற காரணமும் இலக்கினை  டாஸ்மாக் அடைய முடியாததற்கான மற்றும் ஒருகாரணமாகும்.

வேண்டுகோள்:

டாஸ்மாக்கில் பார் உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளாகிய தனியார்களின் தலையீடு இருக்கும் வரை விற்பனை இலக்கினை அடைவது கடினம். எனவே பார்களையும்,கடைக்கு சரக்கு கொண்டு வரும் வேன் போக்குவரத்துகளையும் அரசே ஏற்றுநடத்துவதுடன் டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையும் முதல்வர் அம்மா அவர்களின் வாக்குறுதியுமான பணிநிரந்தரம், டாஸ்மாக் ஊழியர்களை செய்யும்பட்சத்தில் டாஸ்மாக் விற்பனை இலக்கினை அடைந்து தமிழக அரசின் விலையில்லா திட்டங்கள் சிறப்பாக செயல்படும் என்று டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.


கருத்துகள் இல்லை: