வெள்ளி, 20 ஜூன், 2014

டாஸ்மாக் சட்டப் பயிற்சி



முறைகேடுகளில் ஈடுபடும், டாஸ்மாக் ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து, மண்டல மேலாளர்களுக்கு சமீபத்தில்  பயிற்சி வழங்கப்பட்டது. , சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மண்டலமேலாளர்கள் பயிற்சியில் கலந்துகொண்டனர். டாஸ்மாக் தொழிலாளர் நலன் பொதுமேலாளர் ஹேமலதா உள்பட மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இப்பயிற்சி முகாமில் முறைகேடு மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுப்படாத  டாஸ்மாக் ஊழியர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு எப்படி கையாள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மண்டல மேலாளர்கள் தங்களது பகுதிகளில் மாவட்ட மேலாளர்கள் ,உதவி மேலாளர்கள்(சில்லரை விற்பனை), கிடங்கு மேலாளர்கள், சம்பந்தப்பட்ட இருக்கையாளர்களுக்கு மேற்கண்ட பயிற்சியினை விளக்கியுள்ளனர்.


சட்டப்பயிற்சிக்கான அவசியம்

2003 ல் துவங்கப்பட்ட டாஸ்மாக்  10 ஆண்டுகளை கடந்து லாபகரமாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 2003 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பெரும்பான்மையோர் இளைஞர்கள் .டாஸ்மாக் நிறுவனம் லாபகரமாக செயல்படுவதற்கு  இந்த இளைஞர்களும் முக்கிய காரணமாகும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் இதுவரை பணிநிரந்தம் செய்யப்படவில்லை. ஊதியமாவது தமிழகத்தில் குடும்பம் நடத்துவதற்கு ஏற்றவகையில் டாஸ்மாக் நிர்வாகம் கொடுக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. டாஸ்மாக் நிர்வாகமே ஊழியர்களை வறுமைநிலைக்கு  தள்ளி பின்பு கூடுதல்விலை, பணம் கையாடுதல் போன்றவற்றின் மூலம் தங்கள் நிலைதனை ஓரளவிற்கு சரிசெய்து கொள்ள பழக்கிவைத்துள்ளனர். ஊழியர்களை பணிநிரந்தரம் ,நல்ல சம்பளம் கொடுக்கும்பட்சத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கிடைக்கவகையில்லாது போய்விடுமோ என்ற கவலையில் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவிடாமல் பார்த்து வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது வறுமைக்கு தவறுகளை நோக்கி செல்லும் பொழுது அவர்கள் மீது எந்த தொழிலாளர் சட்டவிதிகளையும் கடைபிடிக்காமல் உடனடியாக பணிநீக்கம் என்றும் பின்பு லஞ்சபணம் பெற்றுக்கொண்டு பணியில் சேர்த்துகொள்வதும் டாஸ்மாக்கில் வழமையாகவே இருந்துவருகின்றது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தற்பொழுது லஞ்சப்பணங்களை அதிகமாக கேட்பதால் தற்பொழுது பல டாஸ்மாக் ஊழியர்கள் நீதிமன்ற கதவுகளை தட்ட ஆரம்பித்துள்ளனர். தொழிலாளர் நீதிமன்றங்களில் நீதிபதிகளும் ஊழியர்களும் குறைவாக உள்ளதால் வழக்கும் இழுவையாக தான் உள்ளது. நமது இந்தியாவில் தான் வாய்தா மன்றங்களாக தானே நீதிமன்றங்கள் உள்ளது. இதிலும் ஒருசில ஊழியர்கள் பணிநியமன் ஆணைகளை பெற்று வருகின்றனர். இதை கண்ட அதிகாரிகள் “ நமக்கு கிடைத்த அடிமைகள் நல்ல அடிமைகளாயிற்றே” இவர்கள்நீதிமன்றங்களை நாடினால் அடிமை விலக்கினை உடைத்து விடுவார்களோ என்று எண்ணி சட்டப்பயிற்சி என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களை எப்படி எப்பொழுதும் அடிமையாக வைத்து இருப்பது என்ற பயிற்சியினையே இந்தப்பயிற்சி முகாமில் பயிற்றுவந்ததாக அதிகாரிகள் வெளியில் சொல்லிவருகின்றனர்.

அதிகாரிகள் மீது விசாரனை

டாஸ்மாக் அதிகாரிகள் மீது ஊழியர்கள் மற்றும் பார் உரிமதாரர்கள்,  மது கம்பெனிகளிடமிருந்து லஞ்சம் பெறுவது குறித்து விசாரனைகளை டாஸ்மாக் நிர்வாக சரிவர செய்வதில்லை. சமீபத்தில் ஓய்வு பெற்ற மதுரை முதுநிலைமண்டல மேலாளர் மீதான தலைமைசெயலாக புகாரினை அவருக்கு கீழ்பணியாற்றும் மாவட்ட மேலாளர் அவர்களால் விசாரித்து குற்றமற்றவர் என பதில் அனுப்பப்பட்டது. மேலும் பல புகார்களுக்கு பின்பே அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள் மீதான விசாரணைகளை வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகார்களை கொண்டு விசாரணை செய்யும்பட்சத்தில் பெரும்பான்மையான அதிகாரிகள் பணிநிக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

சட்ட நடவடிக்கை

டாஸ்மாக் ஊழியர்களும் டாஸ்மாக் நிர்வாகத்தினரிடமிருந்து சட்டப்படியான நடவடிக்கையினையே விரும்புகின்றனர். ஆம் தொழிலாளர்சட்டங்களில் ஏதாவது ஒருபகுதியினையாவது டாஸ்மாக் நிர்வாகம் கடைபிடித்தால் டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தரம் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கிடைக்கும்பட்சத்தில் தவறுகளின்பக்கம் செல்லவாய்ப்பில்லை. டாஸ்மாக் ஊழியர் சங்கங்களை, அதிகாரிகள் தற்பொழுது எடுத்துள்ள ஊழியர்விரோத சட்டஆலோசனைகளுக்கு எதிராக ஊழியர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்று உடனடி வகுப்புகள் எடுக்க டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது. டாஸ்மாக் நிர்வாகமானது இனியாவது டாஸ்மாக் ஊழியர்களை அடிமைகளாக தொடர்ந்து நடத்தும் எண்ணத்தினை மாற்றி அவர்களும் மனிதர்கள் தான் நமது வாரிசுகளிலும் இப்படிப்பட்டவர்கள் உருவாகக்கூடும் என எண்ணி தொழிலாளர் சட்டப்படி நடக்க டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.


கருத்துகள் இல்லை: