டாஸ்மாக்
நிர்வாகம் முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்டமேலாளர்களுக்கு கடந்த
21.11.2013 தேதியிட்ட மேலாண்மை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.அதில்
சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவருவதை தடுப்பது தொடர்பாக என பொருளிட்டு டாஸ்மாக்
கடைகள் பல்வேறு பிரச்சனைகள் காரணங்களால் தொடர்ந்து இடமாற்றங்கள் நடைபெறுவதாகவும் இதனால்
அரசிற்கு மிகுந்த வருவாய் இழப்பும் சட்டஒழுங்குபிரச்சனையும் அரசிற்கு அவப்பெயரும் ஏற்படுவதால்
இனி எக்காரணத்தினை கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
ஏன்
இந்த முடிவிற்கு டாஸ்மாக் நிர்வாகம் தள்ளப்பட்டது?
டாஸ்மாக்
கடைகள் ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின் போதும் ஆளும் கட்சிகாரர்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றது.
என்ன டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்துவதாக
தானே மக்கள் நினைகிறார்கள்



