தமிழகத்தில் சென்ற
ஆண்டிற்கும் நடப்பாண்டிற்கான குற்றநடவடிக்கைகள் பற்றிய தகவலை சமீபத்தில் மதுவிலக்கு
ஏ.டி.ஜி.பி காந்திராஜன் அவர்கள் தெரிவித்ததில் மொத்ததில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்திருந்தாலும்
போலிமது, மதுபானஆலை ,வெளிமாநில சரக்குகள் விற்பனை போன்ற மதுகடத்தல் குற்றங்கள் அதிகரித்து
இருப்பது தெரியவருகிறது.இந்த வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது தமிழகத்தில்
சிலர் பன்னெடுங்காலமாக போட்டி டாஸ்மாக் நடத்திவருவதே புலப்படுகின்றது.
திரு.காந்திராஜன்
மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி அவர்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து கடத்திவரப்பட்ட
22 லட்சம் மதிப்புள்ள கள்ளசாராயம் 25500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு
பயன்படுத்தப்பட்ட 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்விடப்பட்டதில் ரூ1.14 கோடி கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.இந்த
மதுகடத்தல் குற்றசாட்டில் பெண்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
சென்றஆண்டுடன்
நடப்பு ஆண்டு குற்ற ஒப்பீடு.
எண்
|
நடவடிக்கைகள்
|
2012
|
2013(oct வரை)
|
1.
|
பதியப்பட்ட புகார்கள்
|
93,757
|
74128
|
2.
|
கைது
|
94,644 இதில் பெண்கள்
9469
|
75,068 இதில் பெண்கள்
6266
|
3.
|
கள்ளச் சாராயம்
|
21.15லட்சலிட்டர்கள் மதிப்பு
ரூ8.46கோடி
|
6.11 லட்சலிட்டர்கள் மதிப்பு
ரூ2.44கோடி.
|
4.
|
எரி சாராயம்
|
2.21 லட்சலிட்டர்கள் மதிப்புரூ33.15
லட்சம்
|
1.02 லட்சலிட்டர்கள் மதிப்பு
ரூ5.23லட்சம்
|
5.
|
போலிமதுபாட்டில்கள்
|
7.39லட்சபாட்டில்கள் மதிப்பு
ரூ7.39கோடி
|
8.24லட்சபாட்டில்கள் மதிப்பு
ரூ8.24கோடி
|
6.
|
கள்ளு
|
25539லட்ச லிட்டர்கள்
|
13880லட்ச லிட்டர்கள்
|
7.
|
வாகன பறிமுதல்
|
1700
|
1628
|
இந்தாண்டு கள்ளச்சாராயம்,எரிசாராயம்,போலிமதுபானங்கள்
என 15.68லட்சம் லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வழக்குகளில் 1,69,712 பேர்கைது செய்யப்பட்டதில் பெண்கள் 15,735 பேர் ஆவர்.
பிடிப்பட்ட போலிமதுபான
ஆலைகள் மாவட்டவாரியாக:
எண்
|
நகரங்கள்
|
போலி மதுபானஆலை
|
1.
|
சென்னை
|
2
|
2.
|
கோவை
|
2
|
3.
|
வேலூர்
|
2
|
4.
|
ஈரோடு
|
2
|
5.
|
கரூர்
|
2
|
6.
|
தஞ்சாவூர்
|
1
|
7.
|
கடலூர்
|
1
|
புகார் சம்பந்தமாக:
பெருகி வரும் போதை
குற்றங்கள் சம்பந்தமாக புகார்களை 10581 தகவல் தெரிவிக்கலாம்.பயனுள்ள தகவல் என்றால்
சன்மானம் வழங்குவதாகவும் தகவல் தெரிவிப்பவர் பற்றி ரகசியம் காக்கப்படும் என்றும் திருகாந்திராஜன்
தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக