செவ்வாய், 31 டிசம்பர், 2013

கிங்பிஷர் காலண்டர் 2014


கிங்பிஷர் நிறுவனமானது கட்டிடபொறியியல் துறை , உரங்கள்விமான போக்குவரத்து மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்  மற்றும்  யுனைடெட் ப்ரூவரிஸ் (மதுபானம், கனிம நீர் மற்றும் சோடா தொழில்கள் )போன்ற வணிகங்களை செய்துவருகின்றது. கிங்பிஷர் நிறுவனமானது தொழிலதிபர் விஜய்மல்லையா விற்கு  சொந்தமானதாகும். இந்நிறுவனமானது கடந்த  2003 ல் இருந்து  (டாஸ்மாக் துவங்கிய ஆண்டு) காலண்டரை வெளியிட்டு வருகின்றது.தற்பொழுது  கிங்பிஷர் நிறுவனமானது வணிக ரீதியாக பலகஷ்டங்களை சந்தித்து வரும் நிலையில் தனது ஊழியர்களுக்கு பல மாத சம்பளத்தினை பாக்கி வைத்து இருந்தாலும்  இந்த ஆண்டும் தனது காலண்டரை வெகுவிமர்சையாக வெளியிட்டுள்ளது . இக்காலண்டருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஏன் என்பதினை கீழே இந்த ஆண்டின் காலண்டர் இனணக்கப்பட்டுள்ளது கண்டு மகிழவும்.பலரும் கிரிகேரி காலண்டரின் வரலாறு தெரிந்து கொள்ளவிட்டாலும் கிங்பிஷர் காலண்டரின் வரலாற்றினை அறிவர் தாங்களும் அறிய பின் தொடர்வீர்.

பிரபல பேஷன் போட்டோகிராபர் அதுல் மதிப் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக கிங்பிஷர் நிறுவனத்திற்காக புகைபடங்களை எடுத்துவருகிறார்.புகைப்படங்களுக்கான ஆலோசனைகளை விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவும்,மாடல்கள் தேர்வுதனை லிப்பங்சீ எல்வாடீ அவர்களும், சர்வதேச கலைஞர் பியான்கா அவர்கள் ஒப்பனையும் செய்கின்றனர்.

வியாழன், 26 டிசம்பர், 2013

குளிரில் குதுகலிக்க



பனியை விரட்ட...
பத்து ஐடியாக்கள்!

நியாயமாக பார்த்தால், இந்தக் கட்டுரையை பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே எழுதியிருக்கவேண்டும். ஒரு காரியத்தை செய்யாமல் விடுகிறதை  காட்டிலும், தாமதமாகவேனும் செய்து முடிப்பது நல்லது என்ற முன்னோர் வாக்கியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, குளிர் துவங்கி இரு வாரகாலத் துக்குப் பிறகு, இந்த குளிர்கால ஸ்பெஷல் கட்டுரை ரிலீஸ் ஆகிறது.

‘உஷ்... அப்பாடா! வெயில் கொடுமை கண்ணைக் கட்டுதே...’ என்று வியர்த்து விறுவிறுக்கிற வேலூர், விருதுநகர் ஏரியாக்கள் கூட, டிசம்பர் பிறந்ததும், வித் தியாசமான வேறு ஒரு மேக்கப் போட்டுக் கொள்ளும். காலை எட்டு மணிக்குக் கூட, விட்டு விலகாத பனி, மாலை ஐந்து ஆனாலே... வெடவெடக்கச்  செய்கிற ‘கூதல் காற்று’, அப்புறம் பிரிட்ஜை திறந்ததும் அடிக்கிறது போல இரவு முழுக்கவே நடுக்குகிற குளிர். போஸ்ட் மார்ட்டம் அறைகளில் போர்த்தி  வைத்திருக்கிற பிணங்கள் போல, தலை முதல் கால் வரை ஒட்டுமொத்தமும் இழுத்துப் போர்த்திக் கிடக்கிற மனித உடல்களை டிசம்பர் குளிர் நமக்கு  அறிமுகம் செய்யும்.

நாமெல்லாம், வெயில் தேசத்து மனிதர்கள். வருடத்தின் கடைசி நாட்களில் வந்து போகிற இந்த ‘வெடவெட’ குளிர் நமக்கு அதிகம் அறிமுகம் இல்லாதது.  இதை சமாளிக்க, இந்த மாதங்களில் மருந்து கடைகளிலும், ‘‘மருந்து’’ கடைகளிலும் (புரிகிறவர்கள் புரிந்து கொள்ளுங்கள்; புரியாதவர்கள் டாஸ்மாக் எடிட் டரை தனியாக அணுகி கேட்டுக் கொள்ளுங்கள்) மக்கள் கூட்டம் அலைமோதுகிறதை கவனித்திருக்கலாம். சரி. இந்தக் குளிரை எப்படி எதிர்கொள்வது? சிலுசிலுவென பனி அடிக்கையில், சூடாக குடிப்பது சுகமான அனுபவம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

போட்டி டாஸ்மாக்


தமிழகத்தில் சென்ற ஆண்டிற்கும் நடப்பாண்டிற்கான குற்றநடவடிக்கைகள் பற்றிய தகவலை சமீபத்தில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி காந்திராஜன் அவர்கள் தெரிவித்ததில் மொத்ததில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்திருந்தாலும் போலிமது, மதுபானஆலை ,வெளிமாநில சரக்குகள் விற்பனை போன்ற மதுகடத்தல் குற்றங்கள் அதிகரித்து இருப்பது தெரியவருகிறது.இந்த வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது தமிழகத்தில் சிலர் பன்னெடுங்காலமாக போட்டி டாஸ்மாக் நடத்திவருவதே புலப்படுகின்றது.

திரு.காந்திராஜன் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி அவர்கள்  கூறியதாவது: கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து கடத்திவரப்பட்ட 22 லட்சம் மதிப்புள்ள கள்ளசாராயம் 25500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்விடப்பட்டதில்  ரூ1.14 கோடி கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.இந்த மதுகடத்தல் குற்றசாட்டில் பெண்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டாஸ்மாக் இடமாற்றம்


டாஸ்மாக் நிர்வாகம் முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்டமேலாளர்களுக்கு கடந்த 21.11.2013 தேதியிட்ட மேலாண்மை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.அதில் சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவருவதை தடுப்பது தொடர்பாக என பொருளிட்டு டாஸ்மாக் கடைகள் பல்வேறு பிரச்சனைகள் காரணங்களால் தொடர்ந்து இடமாற்றங்கள் நடைபெறுவதாகவும் இதனால் அரசிற்கு மிகுந்த வருவாய் இழப்பும் சட்டஒழுங்குபிரச்சனையும் அரசிற்கு அவப்பெயரும் ஏற்படுவதால் இனி எக்காரணத்தினை கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
ஏன் இந்த முடிவிற்கு டாஸ்மாக் நிர்வாகம் தள்ளப்பட்டது?
டாஸ்மாக் கடைகள் ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின் போதும் ஆளும் கட்சிகாரர்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றது. என்ன  டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்துவதாக தானே மக்கள் நினைகிறார்கள்