வியாழன், 4 டிசம்பர், 2014

மாணவ உழைப்பாளிகள்



பள்ளியில் டி.சி.யை
கிழித்துவிடுவதாய் மிரட்டிய
ஆசிரியர்கள்
படிக்க வைப்பதற்காக!
பணியில், டிரான்ஸர், டிஸ்மிஸ்
செய்துவிடுவதாய் மிரட்டும்
அதிகாரிகள்
பணிய வைப்பதற்காக.
பள்ளியில் வருசம்
ஒருமுறை லஞ்சம் கொடுத்தோம்
டைரி, பேனாவாக.
பணியில் வருடம் முழுவதும்
லஞ்சம் கொடுக்கின்றோம்
டைம் சரியில்லாம போயிடுமுனு
டைம் ஸ்கேலும் கனவுல தான்
இன்றும்

சனி, 29 நவம்பர், 2014

அற்ப ஆயுசு

             

                                                                 அற்ப ஆயுசு 



2003ல் 36000 பேர்
பணியில் சேர்ந்திட
2013ல் 26104 குறைந்து
பரிதாபமாகி
அரசு கஜானா நிறைத்து
அற்ப ஆயுளில் கரைகிறோம்.
ஆன வரை போராடிட்டோம்
ஆயுசுல பணி நிரந்தரமாவோமா?
எதுவும் நிரந்தரமில்லை
ஏனிந்த உழைப்பாளிக்கு மட்டும்.
மறந்து போனோம் குடும்பத்தினை
மறத்தும் போனோம் வீணாய்
பணமோ அரசியல், அதிகாரிகளுக்கு
பலியோ பணியாளர்களுக்கு








          பார்ப்போம் வா ஒரு கை


பாரில் பிறக்கும் போதே 
கட்சியுடன் பிறக்கவில்லை
சங்கங்களுடன் பிறக்கவில்லை.
வயிற்றோடு தான் பிறந்தோம்.
பணிநிரந்தரமும்
பணி பாதுகாப்பும் பெற
பனியை கிழிக்கும்
ஒளி கதிராய்
ஓடி வா தோழா!
வாரிசுகளுக்காக
விரட்டு சொந்தப்பகையினை
வீறு கொண்டு புறப்படு
வரும் ஆண்டு
பணி நிரந்தரம் பணிநிரந்தரம்
பார்ப்போம் வா ஒரு கை

பணியாளனிடம் நிர்வாகத்தின்
பாச்சா பலிக்காது
பகத்சிங்கின் மறுபிறப்பே
பயமெதற்கு?
பட்டது போதும்
பறந்து வா
இழப்பதற்கு என்ன
இருக்கு இன்னும்
இளைய டாஸ்மாக் ஊழியா
இனியெல்லாம் நமது நாளே
பார்ப்போம் வா ஒரு கை

வ.ஷாஜஹான். திருமங்கலம்.

டாஸ்மாக் தினம்


இதேநாள் 29.11.2003அன்று டாஸ்மாக்சில்லரை மதுவிற்பனை துவங்கியநாள்
                
                      சிறைகதவுகளுக்குள் சிக்கிகொண்ட நாள்

டாஸ்மாக் உழைப்பாளிகளின் சிக்கல் குறித்த கவிதை


பட்ட மரங்கள்

பத்தாண்டுக்கு முன்
வைரம் பாய்ந்தவர்களாய்,
நிழல் தருபவர்களாய்,
வண்ணம் மிக்கவர்களாய்,
கனி தருபவர்களாய்...

இன்று
இளஞ்சாவுகளையும்,
இனிப்புநோயுடனே,
இளமையையும் இழந்து
பட்ட மரங்களாய்
பாம்புகளின் கூடமாய்
பன்னிரெண்டு மணி நாளுக்கு
பணியாற்றினாலும்
பகுதிநேர பணியாளனாய்
பற்றாக்குறை சம்பளத்தில்
பழகிய குடியால் தொடர்ந்து
டாஸ்மாக்கில்
லஞ்சமே லட்சியமாய்
லட்சங்களே இலக்காய்
அதிகாரிகள்.
லாகிரி விற்று
லாஸ்ஸில் நாங்கள்
உழைப்பாளிகள்
ஊதாரிகளாய் போனோம்
உலகில்.
விறகிற்காவது ஆவோமா?
வீண் கற்பனை...!
விஷசெடி விறகாவதில்லை.

வெள்ளி, 14 நவம்பர், 2014

இரவெல்லாம் மது விற்பனை இரக்கமில்லா அரசு


தமிழகம் முழுவதும் 24மணி நேரமும் எது கிடைக்கின்றதோ இல்லையோ மது கிடைக்கும். எப்படி? டாஸ்மாக் கடை திறந்து இருப்பது தான் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தானே என்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் தமிழகநிலை தெரிய தமிழ்மகனாக இருக்கின்றீர்கள் என அர்த்தம். டாஸ்மாக் கடைதான் இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகின்றதே ஒழிய ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் பார்கள் 24மணிநேரமும் இயங்குகின்றன. இந்த இரவு நேர விற்பனைக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை அடைக்கும் முன்பு இவர்கள் விரும்பும் சரக்குகளை கொடுக்கவேண்டும். இதில் சரக்கு வந்தவுடன் குடிமகன்கள் விரும்பும் சரக்கினை இரவு விற்பனைக்கு எடுத்து கொடுக்க வற்புறுத்துவர். இந்த சரக்குகளுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு உரிய தொகையை கொடுப்பார்களா என்றால் அதுவுமில்லை. விற்று முடித்து அவரிடம் கேட்டால் இவர் இவரிடம் கேட்டால் அவர் என அழைக்கழிப்பு வேறு.

சனி, 8 நவம்பர், 2014

முதல்வருக்கு வேண்டுகோள்

டாஸ்மாக் ஊழியர்கள் விரக்தியின் உச்சக்கட்டத்தினை அடைந்துவருவது நிதர்சனம். தற்போது நவம்பர் மாதத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட பல டாஸ்மாக் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதற்கு காரணமான நோட்டீஸ் கீழே




கோவையிலிருந்து எதிர்வினை என்ற பெயரில் தனிச்சுற்று மாத இதழ் டாஸ்மாக் ஊழியர்களின் குரலாக வெளிவருகின்றது. எதிர்வினைக்கு பாராட்டுக்கள்.

திங்கள், 13 அக்டோபர், 2014

டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?


டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?

சமீபத்திய தினசரி செய்தி பத்திரிக்கையில் வந்த விபரம்:

டாஸ்மாக்கில் நடந்த கையாடல் விவகாரம் குறித்து உயர்அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க 18 பேர் கொண்ட குழு (பறக்கும் படை) அமைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில், நிர்வாக ரீதியாக 38 மாவட்ட மேலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 17 பேர் துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்கள் எம்.பி.ஏ. பட்டதாரிகள். சோ.அய்யர்  டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்தபோது,  முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர் தான் தற்போது டாஸ்மாக் இணை மேலாண் இயக்குநராக இருக்கும் மோகன். 

டாஸ்மாக் இணை மேலாண் இயக்குநர் என்ற பதவி மோகன் அவர்களுக்காகவே  உருவாக்கப்பட்டது. இதுவரை 10க்கும் மேற்பட்ட துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பு டாஸ்மாக் மேலாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார் திரு மோகன் அவர்கள். நெல்லை (சுப்பிரமணியம்) மற்றும் திருச்சி(மணிவேல்) மாவட்ட மேலாளர்களை(துணைமாவட்ட ஆட்சியர்கள்) சஸ்பெண்ட் செய்துள் ளார். இதனால் துணை மாவட்டஆட்சியர்களான டாஸ்மாக் மேலாளர்கள், தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து மோகன் மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஊழியர்களும் மாத மாமுல் கேட்பதாலேயே கூடுதல்விலை, இருப்புகுறைபாடு போன்ற தவறுகளை செய்வதாக கூறுகின்றனர்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

போராட்ட களம்.


கடந்த ஐந்து ஆண்டு கால மன்மோகன் ஆட்சிக்கும் நடைபெறும் 75 நாள் மோடியின் ஆட்சிக்கும் எந்தவித மாற்றமில்லாமல் இருப்பதாக ஊடகங்கள் சொல்லிவரும் நிலையில் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகால  கலைஞர் ஆட்சியும் தொடர்ந்து அம்மாவின் மூன்று ஆண்டுகால ஆட்சியும் தொழிலாளர்கள் நிலையில் எந்தவித முன்னேற்ற மாற்றத்தினையும் காண முடியவில்லை. தொழிலாளர்கள் நாளுக்கு நாள் விலைவாசி உயர்விலும் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியின் பிடியில்  ஆலையில் சிக்கிய கரும்பாக பிழியப்பட்டு வருகின்றனர்.

 இந்த நிலை மற்ற தொழிலாளர்களை விட அம்மாவின் மீதும் அவர்களின் ஆட்சியின் மீது  மிகுந்த நம்பிக்கை வைத்த டாஸ்மாக் தொழிலாளர்களை மிகவும் பாதித்துள்ளது. ஏனெனில் சென்ற ஆட்சியில் கலைஞர் அவர்கள் அம்மாவினால் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தியது நாடு அறிந்ததே. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது டாஸ்மாக்கினை இழுத்து பூட்டிவிடுவதாக மிரட்டி பணியவைத்தார். அப்போது பிரபல எழுத்தாளர் (தி ஹிந்து தமிழ்) சமஸ் அவர்கள் தினமணியில் யாரங்கே? என்ற தலைப்பில் அரசரை போன்று ஆட்சியாளர்கள் நடப்பதாக கட்டுரை வடித்தார். அம்மாவும் “டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை” என பேட்டியளித்தார். ஆனால் ஆட்சியின் கடந்த மூன்று வருடங்களிலும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை அப்படியே நிறைவேற்றப்படாமல் உள்ளது.

புதன், 25 ஜூன், 2014

சரக்கு(வைன்) சரிந்த நிலையில் சப்ளை ஏன்?



'வைன்' (Wine) என்று சொல்லப்படும், திராட்சைப் பழத்தினால் உருவாக்கப்படும் மதுவகை உலகப் பிரசித்தி வாய்ந்தது. டாக்டர்கள் கூடச் சிலசமயங்களில் ஒரு கோப்பை வைனைத் தினமும் குடித்து வருவது நல்லது என்று சொல்வதுண்டு. யேசுநாதர் கூடத் தனது கடைசி விருந்தில், சிவப்பு வைனைத் தன் சீடர்களுக்குக் கொடுத்து, தன் இரத்தத்தை பருகுவதாக உதாரணமும் சொல்லியிருந்தார். யேசுநாதர் காலத்திலேயே இந்தத் திராட்சை மது திருமண விருந்துகளில் குடிக்கப்பட்டதற்கான சான்றுகள் பைபிளில் உண்டு. ஆனால் பைபிளில் சொல்ப்பட்டது மதுவல்ல, வெறும் திராட்சை ரசம்தான் என்று மறுப்பவர்களும் உண்டு. போகட்டும், இங்கு நாம் பேசப் போவது யேசுநாதரைப் பற்றியோ அல்லது பைபிளைப் பற்றியோ அல்ல. வைனைப் பற்றித்தான். அதிலும் ஒரு சின்ன, சிறப்பான ஒரு தகவலைப் பற்றிதான்.

. .
திராட்சை ரசத்தைப் பிழிந்து, அதை மதுவாக மாற்றுவதற்கான சில காரணிகளுடன் சேர்த்து, ஒரு சிறப்பான இடத்தில் பாதுகாப்பாகப் பலநாட்கள் வைத்துவிடுவார்கள். அதுவே 'வைன்' என்று சொல்லப்படும் மதுவாக மாறுகிறது. திராட்சையின் புளிப்புத்தண்மை, இனிப்புத்தண்மை, பச்சைத் திராட்சை, சிவப்புத் திராட்சை என்னும் வகைகளைக் கொண்டு, வைன், செக்ட், ஷாம்பைன் என்னும் மதுவகைகளாகப் பிரிக்கப்படுவது தனிக்கதை.

வெள்ளி, 20 ஜூன், 2014

டாஸ்மாக் சட்டப் பயிற்சி



முறைகேடுகளில் ஈடுபடும், டாஸ்மாக் ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து, மண்டல மேலாளர்களுக்கு சமீபத்தில்  பயிற்சி வழங்கப்பட்டது. , சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மண்டலமேலாளர்கள் பயிற்சியில் கலந்துகொண்டனர். டாஸ்மாக் தொழிலாளர் நலன் பொதுமேலாளர் ஹேமலதா உள்பட மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இப்பயிற்சி முகாமில் முறைகேடு மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுப்படாத  டாஸ்மாக் ஊழியர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு எப்படி கையாள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மண்டல மேலாளர்கள் தங்களது பகுதிகளில் மாவட்ட மேலாளர்கள் ,உதவி மேலாளர்கள்(சில்லரை விற்பனை), கிடங்கு மேலாளர்கள், சம்பந்தப்பட்ட இருக்கையாளர்களுக்கு மேற்கண்ட பயிற்சியினை விளக்கியுள்ளனர்.

சனி, 24 மே, 2014

டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளதா?




தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே எடுத்து நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த நிதியாண்டில், "டாஸ்மாக்' மூலம் கிடைக்க வேண்டிய விற்பனை வருவாய், 1,400 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது. வருவாயைப் பெருக்க, மாவட்ட ஆட்சியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும்  தமிழக அரசு ரகசியமாக  உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அப்படியானல் டாஸ்மாக் விற்பனை உண்மையில் குறைந்துள்ளதா? என்பதனை அறியவே இக்கட்டுரை. தமிழகத்தில், 6,830 டாஸ்மாக் கடைகள் உள்ளன.. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான், தமிழகத்தில் அரசின் இலவச திட்டங்களை செயல்படுத்த பெரும்பாலும் பயன்படுகின்றன. 2003ல் மது விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசு எடுத்தபொழுது 3000கோடியாக அதன் விற்பனை இருந்தது. 2013ல் அதன் விற்பனை 22 ஆயிரம் கோடிரூபாயில் இருகின்றது. வருடந்தோறும் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு ஒன்றினை நிர்ணயம் செய்து அதனை நோக்கி ஊழியர்களை விரட்டுகின்றது.

திங்கள், 21 ஏப்ரல், 2014

தேர்தல் களத்தில் டாஸ்மாக்.

இன்னறய அதிபுத்திசாலி சிறு குழந்தைகள் தங்களின் காரியங்கள் நடக்க பெற்றோர்கள் முன் சிறிது நேரம் சமத்தாக நடந்து (நடித்து) தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர்.அலுவலகங்களில் அடுத்தநாள் விடுப்பு தேவை என்றால் ஓடிஓடி வேலை செய்தும்,  அதிகாரியை காக்காபிடித்து நடித்து பின்பு விடுப்பு கேட்பது வழமை. மனிதன் இயல்பு சிலநேரங்களில் தங்கள் காரியம் நடக்க நடிப்பர் ஆனால் அரசியல்வாதிகளோ எல்லாகாலங்களில் எல்லா நேரங்களிலும் நடித்து வரும்  நிலை பாரதத்தில் தொடர்கதையாகிவிட்டது. ஆளும்கட்சி எதிர்கட்சி என அனைத்து அரசியல்கட்சிகளும் மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தாதது போல் தொண்டர்களையும் கண்டுகொள்வது  இல்லை.தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் பிரச்சனைக்களை கையில் எடுப்பது போல் தொண்டர்களையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதமாக அரசியல்வாதிகளின் கண்டுபிடிப்பு தான் டாஸ்மாக் மதுபானம். இந்தியாவில் 2009-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்  30 % குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள்  என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாது பலர் கோடிஸ்வரர்கள்  இவர்கள் தேர்தல் பரப்புரைக்கு மட்டும் செலவு செய்து பயன்படுத்தும் ஆயுதம் டாஸ்மாக் மதுபானம்.

புதன், 9 ஏப்ரல், 2014

இன்னும் எத்தனை காவு?

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்துவருகின்ற அதே வேலையில் டாஸ்மாக் பணியாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.
டாஸ்மாக் ஊழியர் அடித்துக் கொலை
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சீரகாபாடி பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் குமார்(வயது37). இவர் மல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இவர் வழக்கம் போல் கடையை மூடி விட்டு மோட்டார்சைக்கிளில் சீரகாபாடிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
வழியில் வீரபாண்டி அருகே கடத்தூர் பி.கே.வளவு என்ற இடத்தில் வரும் போது திடீரென மர்மகும்பல் அவரை வழிமறித்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில் குமார் படுகாயம் அடைந்து மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அவர்கள் குமார் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ஞாயிறு, 23 மார்ச், 2014

டாப் 10 விமான பேரழிவுகள்

கடந்தகாலங்களை நோக்கும் நமக்கு மனிதனின் ஆதி மரபியல் குணங்களிலேயே வானில்பறப்பது என்பது அமைத்துள்ளதாகவே தெரியவருகிறது. ரைட் சகோதரர்கள் விமானத்தினை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நமது சங்க இலக்கியநூல்களிலும்,ராமாயன மகாபாரத இதிகாசங்களிலும்விமான பயன்பாடு இருப்பதாக காண்கின்றோம். மேற்கு நாடுகளில் ஏன்ஜல்ஸ் என பறக்கும் தேவதைகள் கதைகளும் அரபுநாடுகளில் குதிரைக்கு இறக்கை முளைக்க செய்து விண்னுலக பயணம் செய்தாக வரும் நிகழ்வுகளும் மனிதன் பறவைதனை போன்று உல்லாசமாக எல்லையே இல்லாமல் பறக்க ஆசைப்பட்டதன் விளைவினால் விமானபயணத்தினை இன்று அனுபவித்து வருகின்றான். பயணங்களில் ஏற்படும் விபத்துகளில் மற்ற போக்குவரத்துகளோடு ஓப்பிடுகையில் விமான பயணத்தின் கி.மி கணக்குகளின் அடிப்படையில் பார்கையில் விபத்துகளானது மிகக்குறைவு. 
ஆனாலும் சிலநேரங்களில் ஏற்படும் விபத்துகளில் பல இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது.தற்பொழுது மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையினை போன்று பலவிமானங்களின் நிலை என்னவென்று கூட தெரியாமல் முடிந்தும் இருக்கின்றது.உலகம் சந்தித்த விமானவிபத்துக்களை டாஸ்மாக் செய்திகள் தளமானது “டாப் 10 விமானவிபத்துக்கள் எனற தலைப்பில் வரிசைப்படுத்தியுள்ளோம் .

வியாழன், 20 மார்ச், 2014

மதுபான நிறுவனங்கள்



டாஸ்மாக்நிர்வாகத்திற்கும் மதுபானநிறுவனங்களுக்கிடையே தற்பொழுது மறைமுக பனிப்போர் நடைப்பெற்று வருகின்றது.மதுபானங்களுக்கு விலையினை உயர்த்தி மதுபான நிறுவனங்கள் தொடர்ந்து கேட்டுவருவதுடன்,கொள்முதல் செய்த வாரங்களிலேயே பெற்றுவந்த காசோலைகளை மாதக்கணக்கில் இழுத்தடித்து கொடுப்பதற்கு எதிராகவும் ,மற்றும் தங்களது கம்பெனியின் சரக்குகள் சிராக டாஸ்மாக் நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்படவேண்டும் என்பதும் மதுபான நிறுவனங்களின் கோரிக்கை.
டாஸ்மாக்கில் எழுதப்படாத விதியாக எக்கட்சியினர் ஆட்சிக்கு வருகின்றனறோ அக்கட்சிக்கு சாதகமான மதுபான நிறுவனங்களிலிருந்து அதிக சரக்குகள் கொள்முதல் செய்யப்படுவது வாடிக்கை. சென்ற ஆட்சிகாலத்தில் மிடாஸ் நிறுவனம் தங்களது சரக்குகளை டாஸ்மாக் கொள்முதல் செய்யவேண்டி வழக்கு நடத்தியது.

புதன், 5 மார்ச், 2014

உலகின் டாப் 10 இனிப்பு

சாக்லேட் ,கேக் , ஐஸ்கிரீம் இவைகளை கண்டவுடன் கொடுப்பவன் யாரென்றெல்லாம் குழந்தைகள் பலரும் கவனத்தில் கொள்வதில்லை. பலகுழந்தை திருடர்களின் திருட்டிற்கான மூலப்பொருட்களே இதுதான். பெரியவர்களும் குறிப்பாக பெண்கள் இந்த  ஐட்டங்களை கண்டுவிட்டால் நாக்கில் எச்சில் ஊற குழந்தையாகவே மாறிப்போவார்கள்.பல காதலர்கள் தங்களது காதலியை சந்திக்க சாக்லேட் இன்றி செல்வதில்லை. என்னவென்று விசாரிக்கையில் “சங்கடம் தீர்க்கும் சாக்லேட் எனகாதலர்கள் கூறிவருகின்றனர். கணவனோ இரவு வீடு திரும்புகையில் ஸ்வீட் பாக்கெட் இன்றி வீடுதிரும்பினால் பிரச்சனை தான் ‘இனிப்பின்றி அமையாது இன்பம் என தத்துவம் பேசுகின்றனர்.இவ்வாறு இனிப்பு இல்லறத்தில் முக்கிய இடத்தினைபெற்றுள்ளது. உலகின் பத்து மிக விலை உயர்ந்த இனிப்பு க்களை உங்களுக்காக டாஸ்மாக் செய்திகள் தளம் தேடி தந்துள்ளது. 

திங்கள், 17 பிப்ரவரி, 2014

நல்லோர் வாக்கு பொய்க்காது.2



பெறுநர்,
மாண்புமிகு அம்மா அவர்கள்,
தமிழக முதலமைச்சர்,
சென்னை
தமிழ்நாடு.

அன்புள்ள அம்மாவுக்கு,

                     பொருள்:டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம்                       செய்ய வேண்டி விண்ணப்பம்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

‘சரக்கு சாமி!’


குவாட்டருக்கு மேட்டர் முடிக்கும்



சாமி சத்தியமா குடிக்க மாட்டேன்என்று எந்த டாஸ்மாக் பிரஜையாவது இனி சத்தியம் செய்தால்... குடும்பத்தினர் குதூகலித்து விடவேண்டாம். ‘எந்த  சாமி மேல சத்தியமாஎன எதிர்கேள்வி கேட்பது அவசியம். இந்தபழங்குடிகளை பாதுகாப்பதற்கென்றே நம்மூரில் நிறைய சாமிகள் இருக்கிறது. அப்படி ஒரு  சாமி குறித்த அறிமுகம். (இந்தத் தளத்தில் செய்யாவிட்டால்... வேறு எந்தத் தளத்தில் செய்வது???)

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கிற உஜ்ஜயினி நகரம் - பாடங்களில் படித்த ஞாபகம் இருக்கா? - ரொம்ப விசேஷமானது. பல ஆயிரம் ஆண்டுகள்  பழமையானது. நிறைய கோயில்கள் இருப்பதால், இது புனித நகரமும் கூட. மக்களை பாதுகாக்க / பராமரிக்க, இங்கு பல தரப்பட்ட சாமிகள் இருந்தாலும்...  சூப்பர் ஸ்டார் சாமி என்றால், அது கால பைரவ சாமிதான். பல ஆயிரம் ஆண்டுகள் முன், பத்ரசேனன் என்கிற மன்னனால், ஷிப்ரா நதிக்கரையில் இந்த  கோயில் கட்டப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அழகழகான ஓவியங்கள், அலங்கரிக்கப்பட்ட மதில் சுவர்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், அதைத்  தவிரவும் இந்தக் கோயில் பற்றிப் பேச ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.