புதன், 8 பிப்ரவரி, 2012

மதுப்பிரியர்களுக்கு டிப்ஸ்


எந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உடலைக் கட்டுக்குள் வைப்பதில் தவறிவிடுக்கின்றனர்.அதே போன்று மதுப்பிரியர்களும் தங்களின் மனம் கவர்ந்த மதுவினை எப்படி கையாள வேண்டும் என்று கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக மதுவின் அடிமையாகின்றனர்.இதைத் தவிர்க்க "டாஸ்மாக் பிளாக்" சில நல்ல
அறிவுரைகளை மதுப்பிரியர்களுக்கு வழங்க உள்ளது.படித்துப்பயன் பெறுவதுடன் எமது வலைத்தளத்தை பரப்புவீர்.


மது அருந்துவதற்கு முன்:
மது அருந்த தேர்ந்தெடுக்கும் மதுக்கூடம் சுகாதாரம் மிகுந்ததாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

நின்று கொண்டு குடிப்பதை முழுவதுமாக தவிர்க்கவும்.

பிளாஸ்டிக் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் தவிர்க்கவும்.

முழு உணவை உட்கொள்ளவும்.ஒரு முழுமையான உணவுமது உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, நச்சுப்பொருட்களை உடல் கையாள்வதற்கு வழி வகை செய்கிறது.

மதுவின் நீர் பிரிதலுக்கான விளைவு செயல்படத் தொடங்குவதற்கு முன்,நீர்ச்சத்திற்காக ஒரு தம்ளர் நீர் அருந்தவும்,இரத்த ஓட்டத்தில் மது                உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க பால் கூட உதவலாம்.


மது அருந்தும் போது :
அளவுடன் அருந்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உடலானது ஒரு பானத்தைப் பகுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்
கொள்கிறது.

ஒவ்வொரு முறை மது அருந்திய பின்னரும் ஒரு தம்ளர் நீர் அருந்தவும்.

உடலின் வளர்சிதைமாற்றச் செயல்பாட்டிற்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால்,பல வகையான மதுபானங்களை ஒன்றாகக் கலந்து பருக வேண்டாம்.

சைட் டிஸ்ஸில் கவனம் செலுத்தி  அதிகம் எண்ணெய் கலந்த பொறித்த பொருட்களை தவிர்க்கவும்.

சிறிது சிறிதாக மதுவைப் பருகி நமக்கான அளவுடன் நிறுத்துதல் நலம்.

மது அருந்திய பின் :
ஒருபோதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவேண்டாம்.

குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அதிகம் பேசுவதை தவிர்க்கவும்.

படுக்கைக்குச் செல்வதற்கு முன் நீர் அருந்தவும்.

காலையில் உங்கள் உணவு முட்டைகள்( சிஸ்டெயினுக்காக),ஒரு வாழைப்பழம்(பொட்டாசியத்திற் காக),மற்றும் பழச்சாறு(சர்க்கரை மற்றும் வைட்டமின் களுக்காக) ஆகியவை அடங்கிய உணவுகள் நன்மை தரும்.

காஃபி,தேநீர்,சோடா ஆகியவற்றைத் தவிர்க்கவும்,ஏனெனில் இவை மேலும் நீர்ச்சத்துக் குறைவை ஏற்படுத்தலாம்.

                                               உடலினை உறுதிசெய்.

4 கருத்துகள்:

அ.தமிழ்ச்செல்வன் சொன்னது…

குடிபவர்களுக்கு பயனுள்ள தகவல்

திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் சொன்னது…

‘‘குடி உயர கோன் உயரும்!’’- பல நூறு ஆண்டுகள் முன் அவ்வையார் சொன்ன விஷயம் இது. மூதறிஞர்கள் சொல்கிற விஷயங்கள், காலங்கள் கடந்தும் கச்சிதமாகப் பொருந்தும் என்பது எவ்வளவு சரி பாருங்கள். ‘கோன்’ என்றால், அரசு என்பது அர்த்தம். தமிழகத்தைப் பொருத்தவரை, ‘குடி’யை நம்பியே ‘கோன்’ இயங்கிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத சத்தியம். ‘குடி’ என்று மக்களை குறிப்பிட்டார் அவ்வையார். மக்கள்தான் இப்போது ‘குடி’மகன்களாகி விட்டார்களே!

ஆக, ‘கோன்’ ஒழுங்காக இயங்க ‘பேக் போன்’ ஆக இருப்பது ‘டாஸ்மாக்’. அள்ளிக் கொடுக்கிற இந்த அட்சய பாத்திரம், பாதுகாப்பாய், ஆரோக்கியமாக, நீண்ட நாட்கள் இயங்கவேண்டுமானால், ‘கை நீட்டி’ அதிகாரிகள், கட்டைப்பஞ்சாயத்து அரசியல்வாதிகள், கடிவாளம் போடும் தனியார் பார் உரிமையாளர்கள் என பலமுனை தாக்குதலில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் அப்பாவி ஊழியர்களை பாதுகாப்பது அவசியம்.

தங்கள் பிரச்னைகளை வெளியில் சொல்ல ஒரு வடிகால் தேடிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் ஊழியர்களின் குரலாக, அவர்களது மனச்சாட்சியின் குரலாக இந்த ‘டாஸ்மாக் செய்திகள் வலைப்பூ’ நிச்சயம் அமையும். அதற்கான நம்பிக்கையை, பதிவுகளும், பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன.

பிரச்னைகளை மட்டுமே சொல்கிற தளமாக இல்லாமல், ‘குடிமகன்’களுக்கு நிறைய ‘டிப்ஸ்’ தருகிற, அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிற தகவல்களும் இருப்பது இன்னமும் சிறப்பு. புதிய ‘சரக்கு’களை அறிமுகப்படுத்துவதன் மூலம், வர்த்தகத்தை மேலும் வளமாக்கும் ஆர்வமும் பளீரிடுகிறது. மொத்தத்தில்... டாஸ்மாக் ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட ‘குரலாக’ இந்த வலைப்பூ அமைகிற நாட்கள் தொலைவில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

நன்றி.

அன்புடன்,
திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

பெயரில்லா சொன்னது…

fine

பெயரில்லா சொன்னது…

super