புதன், 28 நவம்பர், 2012

அடிமைத் தொழிலாளி


அடிமைத் தொழிலாளி


நன்றி பிபிசி

இந்தியா உள்ளிட்ட வறிய நாடுகளில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

உலகில் தற்போது 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக ஃப்ரீ த ஸ்லேவ்ஸ் அடிமை விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும், கர்ரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித சரித்திரத்தில் எந்த ஒரு நேரத்திலும் இருந்த அடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கையைவிட தற்போதைய உலகில் கூடுதலான அடிமைத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சித் தகவலாக வந்துள்ளது.

மிக வேகமான ஜனத்தொகை அதிகரிப்பு, ஏழ்மை, அரசாங்க ஊழல் போன்றவை காரணமாக பல நாடுகளில் அடிமைத் தொழிலாளிகள் இன்றளவும் இருந்துவரவே செய்கிறார்கள் ஃப்ரீ த ஸ்லேவ்ஸின் ஆராய்ச்சியாளர் கெவின் பேல்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

திங்கள், 12 நவம்பர், 2012

இலக்கு 2012


இலக்கு 2012

உலகில் வெற்றியை நோக்கி நடைபயிலும் ஒவ்வொருவரும் ஒருஇலக்கினை நிர்ணயித்து அதை முன்னிருத்தி செயல்பட்டாலே ஒழிய அந்த வெற்றியை இப்போட்டி உலகில் அடைவது கடினம். நமது டாஸ்மாக் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் எவ்வளவு மதுபான வகைகளை கம்பெனிகளிடமிருந்து பெறுவது விற்பனை செய்வது பற்றி பெரிய இலக்குடன் பயணித்து வருடந்தோறும் அதை அடைந்துவருகின்றது.தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு, "சரக்கு' வழங்கும் வகையில், "டாஸ்மாக்' நிர்வாகம், 40 சதவீதம் கூடுதலாக "சரக்கு'களை, கடைகளுக்கு அனுப்பி வருகிறது. தீபாவளி அன்று மட்டும், 125 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2003 நவம்பர் முதல், மதுபான விற்பனை, தமிழ்நாடு அரசு விற்பனை கழகமான, "டாஸ்மாக்' மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மது விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2003ல், 3,250 கோடியாக இருந்த மது விற்பனை, 2011 - 12ம் நிதி ஆண்டில், 20 ஆயிரத்து 180 கோடியாக உயர்ந்தது. நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டுக்கு, 23 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், .தி.மு.., அரசு பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில், மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.