புதன், 23 ஜனவரி, 2013

விற்றுமுடி அல்லது வீழ்ந்துமடி-டாஸ்மாக்

விற்றுமுடி அல்லது வீழ்ந்துமடி-டாஸ்மாக்

செய் அல்லது செத்துமடி என்ற முழக்கம் மூலம் காந்திஜீ சுதந்திர போராட்டத்தினை முன்னெடுத்து சென்றார்.தற்பொழுது டாஸ்மாக் நிர்வாகமோ விற்றுமுடி அல்லது வீழ்ந்துமடி என்ற முழக்கத்தினை மறைமுகமாக முன்னெடுத்து ஊழியர்களை வதைத்து வருகின்றது.

கடந்த 2003 ஆண்டிலிருந்து டாஸ்மாக் மூலம் மதுவிற்பனையை அரசே எடுத்து நடத்திவரும் நிலையில் மதுவிற்பனை 3000 கோடியிலிருந்து சுமார் 20ஆயிரம் கோடிக்கு மாற்றிய டாஸ்மாக் ஊழியர்களை தங்களது கடை விற்பனை சென்ற ஆண்டு விற்பனையைகாட்டிலும் குறைவாக இருந்தால் உடன் டாஸ்மாக் நிர்வாகம் பணிநிக்கம் செய்துவருகின்றது.


ஞாயிறு, 20 ஜனவரி, 2013

தமிழர்களால் கைவிடப்பட்டவைகள்

தமிழர்களால் கைவிடப்பட்டவைகள் அரிக்கன் விளக்கு

காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அம்மி

குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா

அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.


வியாழன், 17 ஜனவரி, 2013

சர்வதேச மதங்கள் தினம்.


சர்வதேச மதங்கள் தினம்.


மதம்


பாதிரியையும் சிறுமியையும்
கருக்கி உருகுலைத்து
மண்ணாக்கியது
மதம்


                                                   கருகோளாறு என கலைக்க
                                                   முயன்ற மருத்துவச்சியயே
                                                   மாய்த்து விட்டது
                                                   மதம்


                                                  மலாலாவை மதிகெட்டு
                                                  மண்ணில் இருந்து
                                                  மறைக்க நினைக்குது
                                                  மதம்


வியாழன், 10 ஜனவரி, 2013

உழைக்கும் கரங்கள்உழைக்கும் கரங்கள்
மனிதனின் கரங்கள் உழைப்பினை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்தது.தற்பொழுது ஒர் ஆய்வின் முடிவில் மனிதனின் கரங்கள் தங்களுக்கிடையே அல்லது மிருகங்களுடன் சண்டையிட்டு
கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மனிதன் முதலில் விவசாயம் செய்ததிலும்,இரண்டு கற்களை உரசி தீ யை உருவாக்கியதிலுமே நாகரீகத்தினை நோக்கி நடைபயிற்றான். இதில் கரங்களின் பங்கு அதிகம். பேருந்து பயணத்தில் " கரம்,சிரம்,புறம் நீட்டாதீர் " என அறிவிப்பினை பார்த்தீருப்பீர்.தற்பொழுது அரசு அலுவலகங்களில் "கரம் புறம் நீட்டினால் சிரம் குனிவு ஏற்படும்" என எழுதவேண்டிய நிலையில் உள்ளது. மனிதனின் கரங்கள் இன்று உழைப்பினை நம்புவதை விட லஞ்சவேட்டைக்கே பயன்படுகின்றது.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

பண முதலைகள் ஆட்சி! பாரதத்தின் வீழ்ச்சி!


பண முதலைகள் ஆட்சி! பாரதத்தின் வீழ்ச்சி!


சில்லரை வணிகம் துவங்கி அனைத்திலும் அந்நிய மூதலீடு முலம் நம்மை அடிமைநிலைக்கு தள்ளி மீண்டும் சுதந்திரபோராட்டம் நோக்கி நம்மை நடக்க செய்யவிருக்கும் நமது மத்திய மன்மோகன்சிங் அரசு தொழிலாளர்கள் நலச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை பன்னாட்டு கம்பெனிக்கு ஆதரவாக நிறைவேற்ற துடித்தது நாம் அனைவரும் அறிந்ததே.அப்படிப்பட்ட மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சரே மாநில அரசுகள் தொழிலாளர்நலனில் அக்கறை கொள்வதில்லை என்கிறார். மொத்தத்தில் இந்தியா முழுமைக்கும் தொழிலாளர் நலனில் அக்கறையற்ற நிலையே உள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது.

இந்தியாவில் மத்திய மற்றும் மாநிலத்தில் ஆளும்கட்சியாக தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசியல் செய்யும் அனைத்து கட்சியினரும் பெரும் பணமுதலைகளாக ,தொழிலதிபர்களாக வீற்று இருப்பதால் இயற்கையாகவே தொழிலாளர் நலனுக்கு எதிராகவே சிந்தித்து செயலாற்றக்கூடியவர்களாக உள்ளனர்.அரசியல்வாதிகள் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினாலும் ஆளும்கட்சியானவுடன் அதை மறந்து தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன.பாராளுமன்றமும் சட்டமன்றங்களும் உழைப்பென்றால் என்னவென்றே தெரியாத ரெளடிகளையும்,பரம்பரை பணக்காரர்களையும் கொண்டு செயல்படும் வரை தொழிலாளர் முன்னேற்றம் ஒர் காணல் நீரே!
    

செவ்வாய், 1 ஜனவரி, 2013

புது வருடப் பரிசு


புது வருடப் பரிசு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் உலகமே முழ்கி இருக்கும் இவ்வேலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும்,பெரியோர்கள் சிறுவர்களுக்கும், கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கி ஆசிர்வதிப்பர். இதை பாராட்டலாம்.ஆனால் விஷ வியாதி லஞ்சத்தின் துவங்கம் பாரீர்.தவிர்ப்பீர்.இதை எல்லாம் விட அதிகாரிகளை அதிகாலையிலேயே சந்தித்து ஊழியர்கள் பரிசு (டைரி,இனிப்பு,பணம்) வழங்குவர்.இந்த கெட்டபழக்கத்தின் துவக்கம் கூற இந்தவிளக்கம்.
இந்த புத்தாண்டு பரிசு வழங்கும் பழக்கம் ரோம சக்கரவர்த்திகள் தங்களுக்கு கண்டிப்பாக புத்தாண்டு பரிசு வழங்கவேண்டும் எனகட்டாய் படுத்தினர்.கி.பி 567ல் கிறிஸ்துவ தேவாலயம் இந்த பரிசு கொடுக்கும் முறையை ஒழித்தது.ஆனாலும் கி.பி.12ல் இங்கிலாந்து அரசர்கள் புத்தாண்டு பரிசை வற்புறுத்தி பெற்றனர்.அது முதல் இவ்வழக்கம் தொடர்கிறது.